Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
காலை உணவுக்கு முன் காபி குடிச்சா சர்க்கரை வியாதி வருமா? இத முழுசா படிங்க அப்பறம் புரியும்...
காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காபி குடிக்கும் நபர்களுக்கு இரத்த சர்க்கரை அளவில் எதிர்மறையான மாற்றம் நிகழக்கூடுமாம். அத்தகைய மாற்றம், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்களுக்கு கூட வழிவகுக்கக்கூடுமாம்.
காலை கண் விழித்ததும், படுக்கையில் இருந்து எழுவதற்கு முன்பு சூடான பெட் காபி குடித்தால் தான் அன்றைய தினம் இனிதே தொடங்கும். இப்படி எண்ணம் பெரும்பாலானவர்களிடையே காணப்படுகிறது. தூக்கம், சோர்வு, தலை வலி, மனஅழுத்தம் என அனைத்து வகை சௌகரியத்திற்கும் விரைவில் நிவாரணம் பெறுவதற்கான ஒரே வழி ஒரு டம்ளர் காபி. அப்படி அடிக்கடி காபி குடிக்கும் நபர்களுக்கு ஒரு அதிர்ச்சிகரமான தகவலை தான் இந்த கட்டுரை தெரிவிக்கப் போகிறது.

காலை எழுந்தவுடன், காலை உணவிற்கு முன்னதாக காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்களா நீங்கள்? அப்படியெனில், சற்று உஷாராக இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காபி குடிக்கும் நபர்களுக்கு இரத்த சர்க்கரை அளவில் எதிர்மறையான மாற்றம் நிகழக்கூடுமாம். அத்தகைய மாற்றம், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்களுக்கு கூட வழிவகுக்கக்கூடுமாம்.

ஆய்வு
பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் இது குறித்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. இந்த ஆய்வானது, மாறுபட்ட வளர்சிதை மாற்றத்தை உடையவர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. தூக்கமின்மை மற்றும் காலை எழுந்தவுடன் காபி குடிப்பதனால் ஏற்படக்கூடிய விளைவை அந்த ஆராய்ச்சி குழு கவனித்து வந்தது.
"ஓர் இரவின் மோசமான தூக்க நிலை, வளர்சிதை மாற்றத்தில் குறைந்த அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அந்த ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன. தூக்கத்திலிருந்து உங்களை வெளிகொண்டு வருவதற்கான ஒரு வழியாக விளங்கும் காபி, இரத்த குளுக்கோஸ் (அதாவது, இரத்த சர்க்கரை) கட்டுப்பாட்டில் சில எதிர்மறையான விளைவை ஏற்படுத்தக்கூடும்" என்று இங்கிலாந்தின் பாத் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

மூன்று வெவ்வேறு பரிசோதனை
இந்த ஆய்வின் போது, ஆரோக்கியமான ஆண்கள் மற்றும் பெண்கள் என 29 பேரை, ஒரே இரவில் சீரற்ற வரிசையின் படி மூன்று வெவ்வேறு பரிசோதனைகளில் ஈடுபடுமாறு ஆராய்ச்சி குழு கேட்டுக் கொண்டது. ஒன்றில், நிபந்தனை பங்கேற்பாளர்கள் ஓர் இரவு சாதாரண தூக்கத்தைக் கொண்டிருந்தனர். மேலும் காலை எழுந்தவுடன் ஒரு சர்க்கரை கலந்த பானத்தை (காபி) உட்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
மற்றொரு சந்தர்ப்பத்தில், பங்கேற்பாளர்கள் ஒரு இரவு நிம்மதியற்ற தூக்கத்தை அனுபவித்தனர். (அவர்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறையும் ஐந்து நிமிடங்கள் விழித்திருக்க செய்தனர்). பின்னர், காலை விழித்தவுடன் அதே சர்க்கரை கலந்த பானம் (காபி) அவர்களுக்கு வழங்கப்பட்டது.
மற்றொன்றில், பங்கேற்பாளர்களுக்கு அதே நிம்மதியற்ற தூக்கம் ஏற்பட்டது, ஆனால், இந்த முறை சர்க்கரை கலந்த பானத்தை உட்கொள்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு ஒரு ஸ்ட்ராங் பிளாக் காபி வழங்கப்பட்டது. இந்த சோதனைகள் ஒவ்வொன்றிலும், பங்கேற்பாளர்களிடமிருந்து சர்க்கரை கலந்த பானத்தை உட்கொண்ட பிறகு இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன. அவை ஆற்றல் உள்ளடக்கத்தில் (அதாவது கலோரிகள்) பொதுவாக காலை உணவுக்கு உட்கொள்ளக்கூடியவற்றை பிரதிபலித்தன.

நிம்மதியற்ற இரவுத் தூக்கம்
ஒரு சாதாரண இரவு தூக்கத்துடன் ஒப்பிடும் போது, நிம்மதியற்ற ஓர் இரவு தூக்கத்தை கொண்ட பங்கேற்பாளர்களின் இரத்த குளுக்கோஸ்/இன்சுலினை காலை உணவிற்கு பின்னர் மோசமாக்கவில்லை என்பதை ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன.

இரத்த குளுக்கோஸ் 50% அதிகரிப்பு
ஒன்று அல்லது பல இரவுகளில் பல மணிநேர தூக்கத்தை இழப்பதனால் உடலில் எதிர்மறையான வளர்சிதை மாற்ற விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், அத்தகைய மாற்றங்களெல்லாம் ஓர் நாள் இரவு சீரற்ற தூக்கத்தினால் (எ.கா. தூக்கமின்மை, சத்தத்தினால் ஏற்படக்கூடிய தொந்தரவு அல்லது புதிய குழந்தை ஈன்றெடுத்த பெற்றோர்) ஒன்றும் ஏற்பட்டு விடாது எனவும் கடந்தகால ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், காலை உணவுக்கு முன்பு உட்கொள்ளக்கூடிய ஸ்ட்ராங் பிளாக் காபி, காலை உணவுக்கான இரத்த குளுக்கோஸ் அளவை கணிசமாக 50 சதவிகிதம் வரை அதிகரிக்கக்கூடும்.

முடிவு
மோசமான இரவு தூக்கத்திற்குப் பிறகு காபி குடிப்பதனால், தூக்கமின்மை பிரச்சனைக்கு வேண்டுமானால் அப்போதைய தீர்வாக அமையலாம். ஆனால் உங்கள் காலை உணவில் உள்ள சர்க்கரை அளவை ஏற்றுக்கொள்வதற்கான திறனாது, உங்கள் உடலில் கட்டுப்படுத்தப்படும் என்பதை இந்த புதிய ஆய்வு வெளிப்படுத்துகிறது.
"நம்மில் கிட்டத்தட்ட பாதி பேர் காலையில் எழுந்ததும், வேறு எதையும் செய்வதற்கு முன்னதாக, காபி குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் என்பது நமக்குத் தெரியும் - உள்ளுணர்வாக நாம் மிகவும் சோர்வாக உணர்ந்தால், ஒரு ஸ்ட்ராங் காபி" என்று ஆய்வின் ஆசிரியர்கள் எழுதியுள்ளனர்.
அதோடு வெறும் வயிற்றில் காபி குடிப்பதை தவிர்ப்பதே, நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான ஆபத்தை குறைப்பதற்கு ஒரே வழி என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications