For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை நோயாளிகள் எந்த கிழங்குகளை சாப்பிடக்கூடாது?... என்ன கிழங்கை சாப்பிடலாம்...

சர்க்கரை நோயாளிகள் எந்த வகை கிழங்குகளைச் சாப்பிட வேண்டும், எந்த வகை கிழங்குகளைச் சாப்பிடக் கூடாது என்பது பற்றி இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதுபற்றி தெரிந்து கொள்ளலாம்.

By Mahibala
|

சர்க்கரை நோய் என்பது ஒரு தனி வியாதி கிடையாது. நம்முடைய ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறிப்பிடுவது. இது மற்ற வியாதிகளான உயர் ரத்த அழுத்தம், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை நம்முடைய உடலுக்குள் அனுமதிக்கும் நுழைவு வாயிலாக சர்க்கரை நோய் இருக்கிறது. இதை குணப்படுத்த முடியாது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியும்.

Diabetes Should Avoid These Tuber

இதற்கு ஒரே தீர்வு உணவுக்கட்டுப்பாடு தான். கார்போஹைட்ரேட் குறைந்த நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடுவதையே மருத்துவர்களும் ஊட்டச்சத்து நிபுணர்களும் அறிவுறுத்துகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவுக்கட்டுப்பாடு

உணவுக்கட்டுப்பாடு

காய்கறிகளும் கீரைகளும் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல எல்லா காய்கறிகளும் சாப்பிடக் கூடாது. அதிலும் குறிப்பாக கிழங்கு வகைகளைப் பொருத்தவரையில் பெரும்பாலும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் கிழங்கு வகைகளில் அதிக அளவிலான கார்போஹைட்ரேட் இருக்கும். அதற்காக எந்த கிழங்கையும் சாப்பிடன் கூடாது என்று நினைத்துவிட வேண்டாம். சர்க்கரை நோயாளிகள் எந்தெந்த கிழங்குகளைச் சாப்பிடலாம்? எந்தெந்த கிழங்குகளைச் சாப்பிடக்கூடாது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

MOST READ: தீபிகா படுகோன் இப்படி சிக்குனு இருக்கறதுக்கு இந்த மேட்டரு தான் காரணமாம்...

என்ன சாப்பிடலாம்?

என்ன சாப்பிடலாம்?

கிழங்குகளில் பல வகை உண்டு. பெரும்பாலான கிழங்குகள் மண்ணுக்குக் கீழிலிருந்து விளைபவை தான். அதில் என்னென் கிழங்குகளை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம் என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

கேரட்

கேரட்

சர்க்கரை நோயாளிகள் கேரட்டை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ளலாம். ஒரே மாதிரியாக சமைத்துச் சாப்பிடுவதை விட, கேரட்டை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி, அதோடு சின்ன வெங்காயத்தையும் பொடிப்பொடியாக நறுக்கி தயிரில் சேர்த்து பச்சடி செய்து சாப்பிட்டுப் பாருங்கள். இப்படி செய்து சாப்பிட்டால் குடற்புண் ஆறும். சிறுநீர்ப் பாதையில் கல் அடைப்பு ஏதேனும் இருந்தால் நீங்கும். கண்பார்வை தெளிவாகும். கேரட்டை மெலிதாக நறுக்கி, நெய்யில் வதக்கிச் சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம் குறைய ஆரம்பிக்கும்.

வெள்ளை முள்ளங்கி

வெள்ளை முள்ளங்கி

வெள்ளை முள்ளங்கியைப் பருப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள நச்சுத் தன்மை நீங்க ஆரம்பிக்கும். சிறுநீரகம் பலமுடன் இருக்கும். ரத்தத்தில் உள்ள உப்பை சிறுநீரின் மூலமாக வெளியேற்றி விடும். நரம்புத் தளர்ச்சி நீங்கும். க்பார்வை தெளிவு பெறும். ரத்த அழுத்தம் சீராகும். குறிப்பாக, இந்த முள்ளங்கி மிக வேகமாக ஜீரணமடையும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிக முக்கியமான விஷயமே மலச்சிக்கல் ஏற்படாமல், செரிமான ஆற்றல் சீராகவும் வேகமாகவும் இருப்பது முக்கியம்.

வாழைத்தண்டு

வாழைத்தண்டு

வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது. சிறுநீர்பு் பையில் உண்டாகும் கற்களைக் கரைத்து, சிறுநீர்க் குழாய் மூலமாக வெளியேற்றிவிடும். வயிற்றில் குறிப்பாக இரைப்பையில் முடி ஏதேனும் சிக்கிக் கொண்டால் அதை குடலுக்கு வவைழைத்து மலத்தின் வழியே ஈஸியாக வெளியேற்றிவிடும் ஆற்றல் வாழைத்தண்டுக்கு உண்டு.

MOST READ: தனிஷ்டா பஞ்சமி: மரணத்திற்குப் பின் உயிர்கள் கஷ்டப்படாம எமலோகம் போக முடியுமா?

என்ன சாப்பிடக்கூடாது?

என்ன சாப்பிடக்கூடாது?

மேலே குறிப்பிட்ட சில கிழங்குகளைக் காட்டிலும் பல கிழங்குகள் சுவையினால் அதிகம் பேரால் விரும்பப்படும் உணவாக இருக்கின்றன. ஆனால் ரத்த சர்கு்கரை அளவு அதிகமாக இருக்கும் நீரிழிவு நோயாளிகள் இந்த வகை கிழங்குகளைச் சாப்பிடக்கூடாது. அது என்னென்ன? அதற்கான காரணங்கள் என்ன என்று பார்க்கலாம்.

வாழைக்கிழங்கு

வாழைக்கிழங்கு

வாழைத்தண்டையும் தாண்டி, வாழை மரத்தின் அடிப்பகுதியில் சேனைக்கிழங்கைப் போன்று ஒரு கிழங்கு காணப்படும். அந்த கிழங்கு மிகவும் ருசியாக இருக்கும். ஆனால் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இதை சாப்பிடக்கூடாது. உடல் சூட்டை தணிக்கும் என்பது உண்மை. ஆனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்துவிடும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

கொழுப்புச் சத்தும் மாவுச்சத்தும் மிக அதிகமாகக் கொண்ட கிழங்கு வகைகளில் முதன்மையானது இந்த உருளைக்கிழங்கு. இந்த கிழங்கை சாப்பிட்டால் திசுக்களில் கொழுப்புச்சத்து அதிகரிக்கும். சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும். உடலில் உள்ள செல்களில் கொழுப்பு படிய ஆரம்பிக்கும். அதனால் உருளைக்கிழங்கை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

கருணைக்கிழங்கு

கருணைக்கிழங்கு

இந்த கிழங்கின் பெயரே கருணைக்கிழங்கு. மூல நோய்க்கு மிக அற்புதமான மருந்து இந்த கருணைக்கிழங்கு. கொழுப்புச் சத்து மற்றும் மாவுச்சத்து இரண்டும் அதில் அதிகம் உள்ளதால் உடலில் உள்ள திசுக்களில் கொழுப்புக்கள் படிய ஆரம்பித்து விடும். அது இதய நோய்களுக்கு வழிவகுக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கும்.

MOST READ: நெனச்சத அதவிட செமயா செஞ்சு முடிக்கிற ராசிக்காரங்க இவங்கதான்... சூப்பர்ப்பா...

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் இனிப்புச் சத்து மிக அதிகமாக இருப்பதால் தான் அதற்கு இந்த பெயர் வந்தது. வேகவைத்தும், பொரியல் செய்தும், சாலட் செய்தும் சாப்பிடலாம்.உடல் பலம் கூடும். அதேசமயம் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். வாயுத்தொல்லையும் சிறுநீரகக் கோளாறும் உண்டாகும்.

மரவள்ளிக்கிழங்கு

மரவள்ளிக்கிழங்கு

மரவள்ளிக்கிழங்கிலும் சர்க்கரை சத்து அதிகமாகவே இருக்கிறது. ஆனால் சர்க்கரைவள்ளிக் கிழங்கை விட கொஞ்சம் குறைவு தான். இதில் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து சாப்பிடுவார்கள். அதேபோல இந்த கிழங்கில் சிப்ஸ் போட்டும் கொடுப்பார்கள். இந்த கிழங்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும். வாயுத்தொல்லையை ஏற்படுத்தும். ரத்ததத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும்.

சிகப்பு முள்ளங்கி

சிகப்பு முள்ளங்கி

சிகப்பு முள்ளங்கியை நிறைய பேர் ஜூஸாகவும் சாலட் போலவும் சாப்பிடுவார்கள். இது மிக வேகமான செரிமானமடையும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும். இதில் சர்க்கரைச் சத்தும் மாவுச்சத்தும் அதிகம். உடல் சூடும் இதில் குறையும்.

MOST READ: நவராத்திரி பண்டிகை நாட்களில் திருமணம் செய்யமாட்டார்கள் ஏன் தெரியுமா

பச்சை வேர்க்கடலை

பச்சை வேர்க்கடலை

இது கொட்டை வகை தானே என்று நிறைய பேர் சொல்வர்கள். மண்ணுக்கு அடியில் விளைவதால் இதை கிழங்கு வகையிலும் சித்த மருத்துவத்தில் சேர்க்கிறார்கள். பச்சை வேர்க்கடலையை வறுத்தோ அவித்தோ சாப்பிடுவார்கள். பச்சையாக அதிகமாகச் சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து விடும். தலைசுற்றல் உண்டாகும். கொழுப்பு படியும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கும். அதனால் வேர்க்கடலையைத் தவிர்ப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Diabetes Should Avoid These Tuber

High blood sugar can damage certain body parts, just like dirty oil can muck up a car's engine. But there might be a novel way to prevent some of that blood sugar badness: the purple sweet potato.
Story first published: Wednesday, September 25, 2019, 14:56 [IST]
Desktop Bottom Promotion