Latest Updates
-
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மட்டன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க! -
இன்றைய ராசிபலன் 19 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
சர்க்கரை நோயாளிகள் பன்னீர் சாப்பிடலாமா? கூடாதா?
பன்னீரை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா என்று பலரது மனதிலும் ஒருவித கேள்வி நிச்சயம் எழும். அந்த கேள்விக்கான விடையை இக்கட்டுரையைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உலகில் பெரும்பாலானோருக்கு சர்க்கரை நோய் உள்ளது. சர்க்கரை நோய் இருந்தால், உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் உணவுகள் தான் சர்க்கரை நோயாளிகளின் உடலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். அதேப்போல் கார்போஹைட்ரேட் உணவுகளை குறைவான அளவில் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக இறைச்சிகளை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

தற்போது மக்கள் பன்னீரை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீர், புரோட்டீன் அதிகம் நிறைந்தது. இது சைவ உணவாளருக்கு ஏற்ற அற்புதமான ஒரு புரோட்டீன் உணவாகும். இந்த பன்னீரில் புரோட்டீனைத் தவிர, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளும் உடலுக்கு கிடைக்கும். சரி, பன்னீரை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா என்று பலரது மனதிலும் ஒருவித கேள்வி நிச்சயம் எழும். அந்த கேள்விக்கான விடையை இக்கட்டுரையைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சர்க்கரை நோயாளிகள் பன்னீர் சாப்பிடலாமா?
பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீர் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. சொல்லப்போனால், பன்னீர் சர்க்கரை நோயாளிகளுக்கான மிகவும் சிறப்பான உணவுப் பொருள் என்றே கூறலாம். ஏனெனில், பன்னீரில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவு. கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருக்கும் உணவுகளை தான் சர்க்கரை நோயாளிகள் உண்ண வேண்டும். ஏனெனில் கிளைசீமிக் இன்டெக்ஸ் கார்போஹைட்ரேட் உணவுகளை நிர்வகித்து, இரத்த சர்க்கரையில் அதன் விளைவை ஒழுங்குபடுத்துகிறது.

பன்னீர் ஏன் நல்லது?
பொதுவாக புரோட்டீன் உடலில் மிகவும் மெதுவாக ஜீரணிக்கப்படுவதால், அது கார்போஹைட்ரேட்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடச் செய்யும். இதன் விளைவாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சட்டென்று அதிகரிக்காது. எனவே தான் சர்க்கரை நோயாளிகள் பன்னீர் சிறந்த உணவாக விளங்குகிறது. குறிப்பாக டைப்-2 சர்க்கரை நோயாளிகளுக்கு பன்னீர் மிகச்சிறந்த உணவுப் பொருள்.

பன்னீர் சர்க்கரை நோயாளிகளுக்கு வழங்கும் நன்மைகள்
* பன்னீர் குறைவான கிளைசீமிக் இன்டெக்ஸ் கொண்ட ஒரு அற்புதமான உணவுப் பொருள்.
* பன்னீர் இரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரிக்காது. ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட் குறைவு.
* சமீபத்திய ஆய்வு ஒன்றில், பன்னீரை அடிக்கடி உட்கொண்டு வந்தால், அது டைப்-2 சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.
* பன்னீரில் புரோட்டீன் மற்றும் பல்வேறு நுண்ணூட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை உடலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளாக செயல்படுகின்றன.
* கூடுதலாக பன்னீர் எலும்புகளுக்கும், இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. இது தவிர நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது.

சர்க்கரை நோயாளிகள் பன்னீரை எப்படியெல்லாம் சாப்பிடலாம்?
பன்னீரில் புரோட்டீன் அதிகமாகவும், கார்போஹைட்ரேட் குறைவாகவும் இருப்பதால், இதை பலவாறு சர்க்கரை நோயாளிகள் தங்களின் உணவில் சேர்க்கலாம். உதாரணமாக, சப்பாத்திக்கு பன்னீர் மசாலா செய்து சாப்பிடலாம். இல்லாவிட்டால் க்ரில்டு பன்னீர் சாலட், க்ரில்டு பன்னீர் டிக்கா, க்ரில்டு பன்னீர் என்று வித்தியாசமாகவும் சமைத்து சாப்பிடலாம்.

எவ்வளவு பன்னீரை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்?
என்ன தான் ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், பன்னீரை சர்க்கரை நோயாளிகள் வாரத்திற்கு 2 முறை சாப்பிடலாம். அதுவும் அளவாக சாப்பிட வேண்டும். குறிப்பாக பன்னீரை சாப்பிட சிறந்த நேரம் என்றால், அது இரவு வேளை தான். அதுவும் தூங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னரே சாப்பிட வேண்டும். தினமும் பன்னீரை சாப்பிட விரும்பினால், ஒரு நாளைக்கு 60 கிராமிற்கு மேல் சாப்பிடக்கூடாது.

சர்க்கரை நோயாளிகள் அளவுக்கு அதிகமாக பன்னீர் சாப்பிட்டால் சந்திக்கும் விளைவுகள்
பன்னீரை சமைக்கும் போது, அவற்றை குறைவான எண்ணெய் பயன்படுத்தியே சமைக்க வேண்டும். அதிகளவில் பன்னீரை உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ரால் அதிரித்துவிடும், உடல் பருமனாகும் மற்றும் உடலில் சோடியத்தின் அளவு அதிகரித்து நீர் தேங்க ஆர்ம்பித்துவிடும். முக்கியமாக லாக்டோஸ் சகிப்புத்தன்மை கொண்டவர்கள் பன்னீரை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications