For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த இலையை வைத்து தயாரிக்கப்படும் பழங்கால பானம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் சிறந்ததாம்...!

|

பொதுவாக பக்கவிளைவுகள் இல்லாமல் இயற்கை பல நோய்களுக்கு தீர்வுகளை வழங்குகிறது. அந்த வகையில், மா இலை நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. குளுக்கோஸின் சரியான விநியோகத்திற்கு உடல் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்வதை நிறுத்துவதால், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிறது. நீரிழிவு நோயை இயற்கையாக எதிர்த்துப் போராட உதவும் உணவுகள் பல இங்கு இருக்கின்றன. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், அதன் அளவை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிப்பது அறிகுறிகளை நிர்வகிப்பதில் முக்கியமானது.

ஏனெனில் ஏற்ற இறக்கமான அல்லது கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை அளவு நீரிழிவு, இதய பக்கவாதம் அல்லது சிறுநீரக செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கும். உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மட்டுமல்ல, நீங்கள் உண்ணும் உணவும் நீரிழிவு நோயைக் கையாள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் இந்த உடல்நிலையை சமாளிக்க நீங்கள் சில இயற்கை வைத்தியங்களைத் தேடுகிறீர்களானால், மா இலைகள் பானம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சத்தான கோடை பழம்

சத்தான கோடை பழம்

தற்போது கோடை காலம் முடிந்து பருவகாலம் தொடங்கி இருக்கிறது. கோடை மற்றும் பருவ காலத்தில் மாம்பழம் அதிகமாக கிடைக்கும். மாம்பழம் சுவையாக மட்டுமல்ல, அதிக சத்தானதாகவும் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். இது வைட்டமின் கே, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் ஆகியவற்றின் நன்மைகளுடன் ஏற்றப்பட்டுள்ளது. இது நமக்கு மிகவும் ஆரோக்கியமானது. ஆனால் மாம்பழத்தின் இலைகளால் கூட பல நோய்களைத் தடுக்க முடியும் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது.

MOST READ: தினமும் இந்த அளவை விட அதிகமா சரக்கு அடிப்பவர்கள் விரைவிலேயே மரணத்தை சந்திக்க நேரிடுமாம்...!

 மா இலையின் ஆரோக்கிய நன்மைகள்

மா இலையின் ஆரோக்கிய நன்மைகள்

மா இலைகளின் சாறு ஆஸ்துமாவை குணப்படுத்த நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இவை நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இலைகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த கீரைகள் பெக்டின், ஃபைபர் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றால் நிரம்பியுள்ளன. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் மிகுந்த பயனளிக்கும்.

இன்சுலின் அளவை நிர்வகிக்க உதவுகிறது

இன்சுலின் அளவை நிர்வகிக்க உதவுகிறது

2010 ஆண்டு எலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி, மா இலைகள் சாறு உறிஞ்சப்பட்ட குளுக்கோஸை பிரித்தெடுக்கின்றன. இது இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவியது. மாம்பழங்களின் மென்மையான பச்சை இலைகளில் அந்தோசயனிடின்கள் எனப்படும் டானின்கள் உள்ளன. இது ஆரம்பகால நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும். நீரிழிவு ஆஞ்சியோபதி மற்றும் நீரிழிவு ரெட்டினோபதிக்கு சிகிச்சையளிக்க அவை உதவுகின்றன.

மா இலைகளின் பிற ஆரோக்கிய நன்மைகள்

மா இலைகளின் பிற ஆரோக்கிய நன்மைகள்

வைட்டமின் சி, ஃபைபர் மற்றும் பெக்டின் போன்ற ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரமாக மா இலைகள் இருப்பதால், அவை உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். கெட்ட கொழுப்பின் அளவை குறைப்பதால், பல்வேறு நோய்கள் ஏற்படுவதிலிருந்து உங்களை பாதுகாக்கிறது.

MOST READ: இந்த சீசனில் இந்த பழங்களை சாப்பிடுவது உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்குமாம்...!

இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகிறது

இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகிறது

ஹைபோடென்சிவ் பண்புகள் காரணமாக, மா இலைகள் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகிறது. மேலும் இரத்த நாளத்தை வலுப்படுத்தவும், வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளின் பிரச்சினைக்கு சிகிச்சையளிக்கவும் மா இலைகள் உதவுகிறது. இது தவிர, சிறுநீரக பிரச்சினை மற்றும் பிற சுவாச பிரச்சினைகளுக்கும் சிகிச்சையளிப்பதில் அவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மா பானம் எப்படி செய்வது?

மா பானம் எப்படி செய்வது?

இந்த பானத்தை தயாரிப்பது மிகவும் எளிதானது. நீங்கள் செய்ய வேண்டியது 10-15 மா இலைகளை 200 முதல் 250 மில்லி தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். கலவையை வடிகட்டி, ஒரே இரவு முழுவதும் விட்டு விடுங்கள். பின்னர், மறுநாள் காலையில் இந்த மாம்பழச் சாறை குடிக்க வேண்டும். இதன் முழுமையான நன்மைகளை காண இரண்டு-மூன்று மாதங்களுக்கு இதை தவறாமல் செய்ய வேண்டும்.

சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதுகாப்பு

சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதுகாப்பு

நீரிழிவு காரணமாக சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவது பொதுவானது. கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை அளவு இந்த பாதிப்புகளை ஏற்படுத்தும். மா இலைகளை உட்கொள்வது அதை ஓரளவிற்கு சமாளிக்க உதவும். மா இலைகள் சிறுநீரக கற்களைக் கரைத்து சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. இதேபோல், அவை பித்தப்பைகளை எதிர்த்துப் போராடவும், உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

A Mango Leaves Concoction Can Cure Diabetes

Here we are talking about this ancient drink made using mango leaves can manage your diabetes.
Story first published: Thursday, June 18, 2020, 13:50 [IST]