Latest Updates
-
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்..
உங்கள் குழந்தைக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு இருக்கிறதா... ஓர் அதிர்ச்சித் தகவல்!
சென்னை: இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சர்க்கரை நோயால், பெரியவர்களைப் போலவே குழந்தைகளும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.
உலகளவில் சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளில் முதன்மையானதாக உள்ளது இந்தியா தான். இங்கு சுமார் 7 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வரும் 2040ம் ஆண்டு 12 கோடியை தாண்டும் என்கிறது சமீபதில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.

அதிலும் குறிப்பதாக சமீபகாலமாக குழந்தைகள் சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளாவது அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு புள்ளிவிவரத்தின் படி, இந்தியாவில் சுமார் 97700 குழந்தை டைப் 1 சர்க்கரை நோய் எனப்படும் மெல்லிட்டஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எளிய வழிமுறைகள்:
ரத்த பரிசோதனை:
ஒரு ஆய்வு, நான்கு சர்க்கரை நோயாளிகளில் ஒருவர் இளம் சர்க்கரை நோயாளி, அதாவது 15 வயதுக்கு உட்பட்டவர் என்கிறது, கடந்த 1992ல் மருத்துவமனை வாரியாக நடத்தப்பட்ட ஆய்வறிக்கை ஒன்று. ஒரு எளிய ரத்த பரிசோதனை மூலம் சர்க்கரை நோயை கண்டறிந்துவிடலாம். ஆனால் அது எந்த வகை சர்க்கரை நோய் என்பதை கண்டறியும் வழிமுறைகள் தான் மிகவும் கடினமானது.

இது தான் சோகம்:
மூலக்காரணம் தெரியாது:
டைப் 1 சர்க்கரை நோய் என்பது நமது எதிர்ப்பு சக்தியே நமது உடலுக்கு எதிராக மாறி, இன்சுலின் உருவாக்கும் பான்கிரியாஸ் செல்களை அழித்துவிடும். இதனால் குழந்தைகளுக்கு இன்சிலின் ஊசி தேவைப்படும். ஆனால் இதில் சோகம் என்னவென்றால், இந்த நோய்க்கான மூலக்காரணம் தெரியவராது.

விழிப்புணர்வு:
விழிப்புணர்வு இல்லை:
இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இதுகுறித்து நம்மிடையே போதிய விழிப்புணர்வு இல்லாதது தான். நிறைய பெரியவர்களுக்கு தங்கள் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் இருக்கும் என்பதே நம்ப முடியாத விஷயம். இதனால் போதிய பரிசோதனை செய்யாமல் விட்டுவிடுகின்றனர்.

ஊசி:
ஊசி பயம்:
மற்றொரு விஷயம் ஊசியால் ஏற்படும் வலி. இதனால் குழந்தைகளுக்கு இன்சுலின் ஊசி போடுவது கஷ்டமான விஷயமாக மாறிவிடுகிறது. பொதுவாகவே குழந்தைகளுக்கு ஊசி என்றால் பயம். இதில் தினமும் இன்சுலின் போட்டுக் கொள்ள வேண்டும் என்றால் எப்படி சம்மதிப்பார்கள்.

அறிகுறிகள்
சர்க்கரை நோய் அறிகுறிகள்:
சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் பின்வருபவையாகும். அதீத உடை எடை குறைவு அல்லது கூடுதல், அதீத தாகம், அதிகபடியாக சிறுநீர் கழித்தல், மங்களான பார்வை, உளர்ந்த உதடு, மிக மெதுவாக ஆறும் காயம், கை மற்றும் கால் அடிக்கடி மறத்துபோதல், காரணமே இல்லாத வயிற்று வலி, மூச்சுவிட சிரமப்படுதல் போன்றவை ஆகும்.

வாய்ப்புகள்:
வாய்ப்பு அதிகம்:
இன்று பெரும்பாலான குடும்பங்களில் யாராவது ஒருத்தருக்காவது சர்க்கரை நோய் இருக்கிறது.பெற்றோருக்கு இருப்பதால் குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகிறது.

டைப் 1:
டைப் 1 சர்க்கரை நோய்:
பொதுவாக டைப் 1 சர்க்கரை நோய் என்பது குழந்தைகள் பிறந்து ஒரு வயதில் இருந்து 5 வயதிற்குள்ளாக வரும். இதற்கு காரணம் மரபு ரீதியாகவோ அல்லது சுற்றுப்புறச்சூழலலோ இருக்கலாம். நெருங்கிய சொந்தங்களுக்கு இந்த டைப் 1 டயாபடிஸ் நோய் வாய்ப்புகள் அதிகம். அதேசமயம் ஒரு குடும்பத்தில் நெருங்கிய சொந்தங்களுக்கு சர்க்கரை நோய் இல்லை என்றால், குழந்தைக்கு அந்நோய் வர 0.4 சதவீதம் மட்டுமே வாய்ப்பு உண்டு. தாய்க்கு சர்க்கரை நோய் இருந்தால், குழந்தை சர்க்கரை நோய் வர 1 - 4 சதவீதம் வரை வாய்ப்பு இருக்கின்றன. தந்தைக்கு சர்க்கரை நோய் இருந்தால், 3 - 8 சதவீதம் வரை வாய்ப்புகள் இருக்கின்றன.

அடிக்கடி தாகம்:
அதிக தாகம்:
குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் இருப்பதற்கான 4 அறிகுறிகள் என்னவென்றால், இரவு தூங்கும் போது குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அவ்வப்போது தாகம் எடுத்துக் கொண்டே இருப்பது, அடிக்கடி சோர்ந்து போவது, நன்றாக சாப்பிட்டும் எடைக்குறைவாக இருப்பது.

உடல் உழைப்பு தேவை:
விளையாட விட வேண்டும்:
குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் ஏற்படாமல் தடுக்க பெற்றோர்கள் அவர்களுக்கு நிறைய உடல் உழைப்பு சார்ந்த விஷயங்களை தர வேண்டும். உதாரணமாக குழந்தைகளை மைதானங்களில் நன்றாக விளையாடவிடுவது அவசியம். சமீபகாலமாக பச்சிளம் குழந்தைகளுக்கு கூட சர்க்கரை நோய் ஏற்படுவதை பார்க்க முடிகிறது. அந்த குழந்தைகளை குணப்படுத்துவது அரிதான விஷயம்.

மனரீதியாக:
மனபலம் தேவை:
குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் வரும் போது அவர்களை மனரீதியாக பலப்படுத்துவது தான் பெற்றோர்கள் செய்ய வேண்டிய முதல் காரியம். அவர்களுடைய உணவு பழக்கம், இன்சுலின் ஊசிகளை முறையாக எடுத்துக்கொள்ளுதல் போன்றவற்றை முறைபடுத்த வேண்டியது பெற்றோர்களின் கடமை. அதன் மூலமாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடலில் கார்போஹைட்ரேட் அளவு சீராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கவுன்சிலிங்:
கவுன்சிலிங் தேவை:
குழந்தைகளுக்கு முறையான கவுன்சிலிங் மற்றும் ஆதரவு தேவை. அப்போது தான் அவர்களால் தங்களுக்கு ஒரு நாளில் எத்தனை முறை இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை உணர முடியும். குழந்தைகள் ஒவ்வொரு முறை உணவு உட்கொள்ளும் போதோ அல்லது உடற்பயிற்சி செய்யும் போதோ, அவர்களது உடலின் இன்சுலினின் அளவு சீராக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு அதற்கு ஏற்ப இன்சுலின் அளவு நிர்ணயிக்க முடியும்.

புரிதல் அவசியம்:
ஹார்மோன் மாற்றங்கள்:
பொதுவாக குழந்தைகளுக்கு இனிப்பு உணவுகள், சாக்லெட்டுகள், இனிப்புகள் ஆகியவை மிகவும் பிடிக்கும். அதனால் சர்க்கரை நோய் பாதித்த குழந்தைகள் இனிப்பு வகைகளை சாப்பிடக்கூடாது என்பதை புரிந்து கொள்வது அரிது. எனவே, இது குறித்து அவர்களுக்கு தெளிவான புரிதலை ஏற்படுத்துவது அவசியம். குறிப்பாக பெண் குழந்தைகள் பூப்படையும் போது அவர்களின் உடலின் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு சர்க்கரை அளவு அதிகரிக்கும். அதேபோல சர்க்கரை நோயால் பூப்படைவதில் தாமதமும் ஏற்படலாம்.

கண்காணிப்பு தேவை:
தொடர் கண்காணிப்பு தேவை:
எனவே குழந்தைகளை தொடர் கண்காணிப்பில் வைப்பது அவசியம். குறிப்பாக உணவு விஷயத்தில் கட்டுப்பாடுகளை விதிப்பது அவசியம். இதன் மூலம் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்க முடியும். நிறைய குழந்தைகள் தங்களுடைய நோய் குறித்து தெளிவாக புரிந்துகொண்டு வாழ்க்கை வெற்றி பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக விளையாட்டு துறையிலும் அவர்கள் பெரும் வெற்றியாளர்களாக உருவாகியிருக்கிறார்கள்.

ஆராய்ச்சிகள்:
அறிமுகம்:
சர்க்கரை நோயை குணப்படுத்துவற்காக நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இந்த தொழில்நுட்ப மெதுவாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

உடல் பரிசோதனை:
ஆண்டுக்கொருமுறை உடல் பரிசோதனை:
சர்க்கரை நோய் குணமான குழந்தைகளை தொடர் கண்காணிப்பில் வைத்து, ஆண்டுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்வது அவசியம். அதேபோல், அவர்களுக்கு வேறு ஏதேனும் உடல் கோளாறு ஏற்பட்டுள்ளதாக என்பதை கண்டறிவதும் அவசியம்.



Click it and Unblock the Notifications











