For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லோ சுகர்னால கிறுகிறுனு வருதா? இதுல ஏதாவது ஒன்ன சாப்பிடுங்க... உடனே சரியாகிடும்...

குறைந்த ரத்த சர்க்கரையால் வரும் தலைசுற்றலை உடனடியாகப் போக்க நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுப் பொருள்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

|

நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவியளிப்பதன் மூலம் அவர்கள் கூடுதல் பயன் பெறலாம். இத்தகைய சப்ளிமென்ட்ஸ் டைப் -2 நீரிழிவு நோயாளிகள் மற்றும் ஆரம்பநிலை நீரிழிவு நோயாளிகளுக்கு பயனளிக்கும்.

Supplements Which Can Lower Blood Sugar Levels Instantly

நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மிக முக்கியம். உயர்ந்த கிளைசெமிக் குறியீடுடைய உணவை அதிகம் உட்கொள்வது அல்லது உணவை நிறையச் சாப்பிடுவது உடலில் இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கும். இது அதிகப்படியான குளுக்கோஸை ஈடு செய்யும் பொருட்டு இன்சுலின் ஸ்பைக்குடன் செயல்படுகிறது. Yo-yo விளைவு காரணமாக சோர்வு மற்றும் எரிச்சலை பெறுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரத்த சர்க்கரை அளவு

ரத்த சர்க்கரை அளவு

உடல் உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், உயிர்ச்சத்துக்கும் ஒரு முக்கிய முன்நிபந்தனை. இது வழக்கமாக குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகள் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பெறப்படுகிறது.

உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த புதிதாக பறிக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள், மற்றும் complex carbs -ன் உட்கொள்ளலை நீங்கள் அதிகப்படுத்த வேண்டும். ஆனால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இதை சாப்பிடுவதை விட சற்றே அதிகம் தேவைப்படுகிறது. அந்த நேரத்தில் இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துவதில் துணைபுரியும் கூடுதல் சப்ளிமென்ட்களை எடுத்துக்கொள்வதன் மூலம் பயன்பெறலாம். இத்தகைய கூடுதல் சப்ளிமென்ட்கள் டைப் - 2 நீரிழிவு நோய் மற்றும் நீரிழிவுக்கு முந்தைய நிலை நோயாளிகளுக்கு பயனளிக்கும்

MOST READ: இந்த 10 வேலை செய்றவங்கதான் குண்டாகிட்டே போவாங்களாம்... நீங்களும் இதான் செய்றீங்களா?

குறைந்த சர்க்கரை அளவு

குறைந்த சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கான நீரிழிவுக்கான மருந்துகளுடன் கூடுதலாக சப்ளிமென்ட்களை எடுத்துக் கொள்ளுவது, அந்த மருந்துகளின் அளவைக் குறைக்க உதவும். எனினும், மருந்துகளை முற்றிலும் சப்ளிமென்ட்களால் மாற்ற முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தக் கட்டுரையில், உங்கள் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் உதவக்கூடிய ஒரு சில சப்ளிமென்ட்களைப் பற்றி பேசுகிறோம்.

புரோபயோடிக்ஸ்

புரோபயோடிக்ஸ்

செரிமானம், வளர்சிதை மாற்றம் மற்றும் நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் உதவுகின்ற நன்மை பயக்கும் பல பாக்டீரியாக்களை உடலுக்கு புரோபயோடிக்குகள் வழங்குகின்றன. உங்கள் உணவில் போதுமான புரோபயோடிக்குகளை சேர்த்துக்கொள்வது உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. யோகர்ட், சார்க்ராட், கோம்பச்சா, ஊறுகாய் மற்றும் கேபீர் ஆகியவை புரோபயோடிக்குகளின் ஆதாரமாகும்.

ஜிம்நேமா சில்வெஸ்ட்ரே

ஜிம்நேமா சில்வெஸ்ட்ரே

இது இந்தியாவில் வெப்பமண்டல காடுகளுக்கு சொந்தமான ஒரு தாவரமாகும். இந்த தாவரத்தின் இலைகள் இன்சுலின் அளவை அதிகரித்து, குளுக்கோஸின் உறிஞ்சுதலை குறைக்க உதவுகிறது, இதனால் உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

MOST READ: நட்புக்காக உயிரையே கொடுக்கும் ஐந்து ராசிக்காரர்கள் யார் தெரியுமா? தெரிஞ்சி பழகுங்க...

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை சப்ளிமென்ட்கள், முழு இலவங்கப்பட்டை தூள் அல்லது இலவங்கப்பட்டையின் சாறிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இலவங்கப்பட்டையில் இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் பண்புகள் உள்ளன. உடலில் உள்ள உயிரணுக்களை இன்சுலினுக்கு நன்றாக ஒத்துழைக்கும்படி செய்கிறது. இது உங்கள் செல்களில் சர்க்கரையை அனுமதிக்கிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் இலவங்கப்பட்டை உதவும்.

அலோவேரா

அலோவேரா

கற்றாழை (அலோவேரா) இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. அலோவேரா இலைகளால் செய்யப்பட்ட சப்ளிமெண்ட்ஸ் வேகமாக இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். அலோவேரா, கணைய செல்களில் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டுகிறது எனக்கண்டறியப்பட்டுள்ளது.

வைட்டமின் டி

வைட்டமின் டி

வைட்டமின் "டி" குறைபாடு டைப் - 2 நீரிழிவுக்கான ஆபத்து காரணி. வைட்டமின் "டி" சப்ளிமென்ட்களை எடுத்துக்கொள்வதுகணைய செல்களின் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்த மேம்பட்ட இயக்கம் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டி உடலின் இன்சுலின் ஒத்துழைப்பை அதிகரிக்கிறது.

மெக்னீசியம்

மெக்னீசியம்

மெக்னீசியம் குறைபாடு, டைப் -2 நீரிழிவு கொண்ட பெரும்பாலான மக்களில் பொதுவானது. மெக்னீசியம் குறைபாடு, தங்கள் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாதவர்களுக்கும் பொதுவாக உள்ளது. மக்னீசியம் சப்ளிமென்ட்களை உட்கொள்ளல் இன்சுலின் சுரப்பு மற்றும் உடலின் திசுக்களில் இன்சுலின் செயல்பாட்டை இயல்பாக்க உதவுகிறது.

MOST READ: எப்பவுமே பசிக்கிற மாதிரி இருக்கா?... அதுக்கு நீங்க பண்ற இந்த 5 விஷயம் தான் காரணம்...

குரோமியம்

குரோமியம்

உடலில் குரோமியம் குறைபாடு, கார்போஹைட்ரேட்டுகளை ஆற்றலுக்கான சர்க்கரைகளாக மாற்றப்படுவதற்கான திறனைக் குறைக்கிறது. இது உடலில் இன்சுலின் தேவையை அதிகரிக்கிறது. இன்சுலின் விளைவுகளை மேம்படுத்துவதில் குரோமியம் சப்ளிமென்ட்கள் உதவும். அவை தேவையான அளவு இன்சுலின் சுரப்புக்கு, கணைய உயிரணுக்களுக்கு உதவுகின்றன.

ஆல்ஃபா லிபோயிக் அமிலம்

ஆல்ஃபா லிபோயிக் அமிலம்

ஆல்ஃபா லிபோயிக் அமிலம், கொழுப்பு மற்றும் நீரில் கரையக்கூடிய ஆன்டி ஆக்ஸிடன்ட், இது உடலில் free radicals - ஐ தாக்குவதால், உறுப்புகளையும் திசுக்களையும் பாதுகாக்கிறது. இரத்த சர்க்கரை அளவை சமன் செய்வதற்கு, ஆல்ஃபா லிபோயிக் அமிலம் குளுக்கோஸை ஆற்றலாக மாற்றுகிறது. இது இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை சாதாரணமாக்குகிறது.

வெந்தய விதைகள்

வெந்தய விதைகள்

வெந்தயமா? நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துவதில் வெந்தயம் உண்மையில் உதவுகிறது . இது உங்களின் செரிமானம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளின் உறுஞ்சுதலை குறைத்து உடலில் உள்ள சர்க்கரை அளவுகளை சமநிலைப்படுத்த உதவுகிறது. அமினோ அமிலங்கள் மிகுதியாக இருப்பதால், இன்சுலின் உற்பத்தி தூண்டப்படலாம். வெந்தய விதைகள் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டுகிறது.

MOST READ: கோக் குடிக்கிறதுக்கு மட்டும்னு நெனச்சீங்களா? வேற என்னலாம் பண்ணலாம்னு வாயை பிளந்து பாருங்க...

பெர்பெரின்

பெர்பெரின்

Berberine (பெர்பெரின்) ஒரு மூலிகை அல்ல, ஆனால் கசப்பான சுவையுடைய ஒரு கலவை. இது goldenseal மற்றும் பெல்லோடென்ரான் (phellodendron) போன்ற தாவரங்களின் வேர்கள் மற்றும் தண்டுகளில் இருந்து எடுக்கப்படுகிறது. நீரிழிவு மருந்துகளுடன் சேர்த்து பெர்பெரின் சப்ளிமென்ட்களை உட்கொள்ளல் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். Berberine இன்சுலின் சென்சிட்டிவிட்டியை அதிகரிக்கிறது மற்றும் உங்கள் தசைகள் இரத்தத்திலிருந்து சர்க்கரையை எடுப்பதை அதிகரிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Supplements Which Can Lower Blood Sugar Levels Instantly

here we are talking about the food Supplements Which Can Lower Blood Sugar Levels Instantly.
Story first published: Thursday, December 13, 2018, 10:44 [IST]
Desktop Bottom Promotion