For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை வியாதி வந்தவர்கள் இனிமே எப்படி வாழனும் என்று தெரியுமா?

நீரிழிவு நோயுடன் ஆரோக்கியமாக வாழ்வது எளிதல்ல. அளவான உடற்கட்டு,உடல்நலத்தில் சிக்கல்கள் இல்லாமல் இருப்பதும் கடினம்.எனவே ஆரோக்கியமாக வாழ இங்கு சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

By Peveena Murugesan
|

இந்தியாவில் வேகமாக பரவி வரும் நோய்களில் மிக முக்கியமானது இந்த சர்க்கரைவியாதி. வராமல் தடுக்க அனைவரும் குறிப்பாக 30 வயது மேற்பட்டவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

வராமல் காப்பது போல் வந்தவர்கல் என்ன செய்ய வேண்டும் என பெரும்பாலோனோருக்கு தெரிவதில்லை. கையளவு மாத்திரைகளை விழுங்கி, ஊசியை போட்டுக் கொண்டு விதியே என்று இருப்பது ஸ்மார்ட்டல்ல.

Smart tips live healthy with diabetes

வந்தவுடன் நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டுமென தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.

நீரிழிவு நோயுடன் ஆரோக்கியமாக வாழ்வது எளிதல்ல. அளவான உடற்கட்டு,உடல்நலத்தில் சிக்கல்கள் இல்லாமல் இருப்பதும் கடினம்.எனவே ஆரோக்கியமாக வாழ இங்கு சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சைச் சாறு கலந்த நீர்:

எலுமிச்சைச் சாறு கலந்த நீர்:

காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் சூடான நீரில் எலுமிச்சைச் சாறைக் கலந்து குடிக்க வேண்டும் அவ்வாறு குடிப்பதால் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பான நாளாக அமையும்.

உடற்பயிற்சி:

உடற்பயிற்சி:

நீரிழிவு உள்ளவர்கள் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு உடலுக்கு சில பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.மிதமான ஓட்டம் (ஜாகிங்),நடைப்பயிற்சி சிறந்தது.இந்த விஞ்ஞான உலகில் கைப்பேசியில் உடல் ஆரோக்கியம் பற்றிய பயன்பாடுகள் நிறைந்த குறிப்புகள் உள்ளன.

அவற்றைப் பயன்படுத்தி 7-10 நிமிடங்கள் முழு உடலையும் பயிற்சியில் ஈடுபடுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.

உங்கள் உடற்பயிற்சியை கண்காணிக்க வேண்டும்.உடற்பயிற்சி சாதனம் (அ) குளுக்கோமீட்டர் இவற்றில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் ஆரோக்கியத்தை சீராக வைக்க முடியும்.இந்த கருவிகள் மூலம் இதய துடிப்புகளின் அளவு,எரிக்கப்படும் கலோரியின் அளவு,எவ்வளவு தூரம் நடக்கிறோம் என்ற கணக்கீடு இவற்றை அறியலாம்.

 நீர் :

நீர் :

உடலின் இயக்கத்திற்கு நீர் தேவை.உடற்பயிற்சி முடிந்ததும் உடலில் அதிக நீர் வியர்வையாக வெளியேற்றப்பட்டிருக்கும்.எனவே நீர் அருந்த வேண்டும்.இவ்வாறு செய்வதால் உடல் மந்தமானதாக இருப்பது போன்று தோன்றாது.இதன் மூலம் ஒரு உந்துதல் நமக்கு கிடைக்கும்.

பரிசோதனை :

பரிசோதனை :

2 வாரத்திற்கு ஒரு முறை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரி பார்க்க வேண்டும்.ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்தால் அதிக வியர்வை,பலவீனமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும் எனவே உடனே குளுக்கோமீட்டரைப் பயன்படுத்தி சர்க்கரை அளவை சரி பார்க்க வேண்டும்.

காலை உணவு:

காலை உணவு:

காலை உணவு முக்கியமானது.காலை உணவை தவிர்க்க வேண்டாம்.உங்கள் உடலிற்கு 6-8 மணி நேர தூக்கத்திற்கு பிறகு தேவையான ஆற்றலை வழங்குகிறது.காலை உணவில் பழங்களை சேர்ப்பது நல்லது.

ஒருவேலை தினமும் பழங்களாக சாப்பிட பிடிக்கவில்லையெனில் சாறாகக் குடிக்கலாம்.மேலும் முழு ரொட்டி,பால்,முட்டைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.மருத்துவர்களின் பரிந்துரையின்படி நீரிழிவுக்கான மருந்துகளை எடுக்க வேண்டும்.

மதிய உணவு:

மதிய உணவு:

பச்சைக் காய்கறிகள்,மீன்,கோழி,வேக வைத்த அரிசி (அ) ரொட்டி இவற்றை எடுத்துக் கொள்ளலாம்.மேலும் மதிய உணவில் ஒரு டம்ளர் பழச்சாறு எடுக்க வேண்டும்.

இரவு உணவு:

இரவு உணவு:

முழு ரொட்டி (அ) சப்பாத்தி (அ) மிகவும் குறைவாக அரிசி எடுத்து கொள்ளலாம்.தூங்க செல்லும் முன் ஒரு டம்ளர் சூடான பால் குடிக்கலாம்.ஆனால் லாக்டோஸ் சகிப்புத்தன்மையை பெற்றிருந்தால் பால் வேண்டாம்.

காயங்கள் :

காயங்கள் :

உங்கள் பாதங்களை அடிக்கடிக் கவனித்துக் கொள்ளுங்கள்-ஏதேனும் தொற்று (அ) புண் ஏற்பட்டால் பெரிய பிரச்சனைகளை உருவாக்க முடியும்.எனவே கவனம் தேவை.இவை அனைத்தையும் பின்பற்றி நீரிழிவிலும் ஆரோக்கியமாக வாழுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Smart tips live healthy with diabetes

Smart tips live healthy with diabetes
Story first published: Wednesday, April 26, 2017, 13:17 [IST]
Desktop Bottom Promotion