மது அருந்துவதால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாமாம்..தெரியுமா?

Posted By: Hari Dharani
Subscribe to Boldsky

ஆல்கஹால் சில மோசமான விளைவுகளை கொண்டிருக்கும்போதிலும் கூட, வாரத்தில் மூன்று-நான்கு நாட்கள் மிதமான அளவில் மது அருந்துவதால் சர்க்கரை நோய்/நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதியளிக்கிறார்கள்.

சவுத் டென்மார்க் பல்கலைக்கழகத்தில் உள்ள சுகாதாரத்துறை நிறுவனத்தில் உள்ள ஆய்வுக்குழுவின் அறிக்கைப்படி வாரத்திற்கு மூன்று நான்கு நாட்கள் மது அருந்தும் ஆண்கள் பெண்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.

Drinking 3-4 Times A Week May Keep Diabetes At Bay

டையபெடாலொஜியோ என்ற புத்தகத்தில் ஆராய்ச்சியாளர்கள் எழுதிய முடிவரிக்கை பின்வருமாறு - "எங்களது ஆய்வின் முடிவுகள் அடிக்கடி மது அருந்துவதற்கு சர்க்கரை நோய்க்கான அபாயங்களும் தொடர்பு இருப்பதாக பரிந்துரைக்கிறது.

மேலும் மிதமான அளவில் வாராந்திர முறையில் மது அருந்துவதை கணக்கில் எடுத்துக்கொண்டபோது, மூன்று நான்கு நாட்கள் ஒரு வாரத்தில் மது அருந்துவதால் சர்க்கரை நோய் வருவதர்கான வாய்ப்புகள் மிகக்குறைவு என கண்டறியப்பட்டுள்ளது".

Drinking 3-4 Times A Week May Keep Diabetes At Bay

பேராசிரியர் ஜானே மற்றும் சகா ஆய்வாளர்களின் இந்த ஆய்வு தொடர்ந்து மது அருந்துவதற்கும், சர்க்கரை நோய் அபாயத்திற்கும் உள்ள தொடர்பு குறித்த ஆய்வாக இருந்தது. மேலும் இது குறிப்பிட்ட சில மதுபான வகைகளோடு தொடர்புடையதாகவும் இருந்தது.

டேனிஷ் ஹெல்த் எக்ஸாமினேஷன் சர்வேன் 2007-2008 ஆம் ஆண்டில்18 வயதுடைய டேனிஷ் மக்களின் வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியம் பற்றிய பூர்த்தி செய்யப்பட்ட வினாக்கள் அடங்கிய சுய அறிக்கை பட்டியல் ஆதாரமாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்க்கப்பட்டார்கள், மேலும் சமீபத்தில் குழந்தை பெற்ற தாய்மார்களும், கர்ப்பிணி பெண்களும் இந்த ஆய்வில் இருந்து விலக்கப்பட்டார்கள்.

இந்த ஆய்வு மது அருந்தும் விவரமளித்த70,551 பங்கேற்பாளர்களை உள்ளடக்கியிருந்தது.

குறிப்பிட்ட மதுபான வகைகளின் நுகர்வு - வைன், பீர், ஸ்பிரிட்ஸ் ஆகியவை வேவ்வேறு அளவில் வாரத்துக்கு ஒன்று என்ற முறையில் குறிப்பிடப்பட்டு ஒரு வாரத்திற்கு 1-6 பானங்கள் மற்றும் 7 அல்லது அதற்கு மேற்பட்ட பானங்கள் பெண்களுக்கும், 7-13 மற்றும்14 அல்லது அதற்கு மேற்பட்ட பானங்கள் ஆண்களுக்கும் என்று வரையறுக்கப்பட்டது.

இந்த முறையை பின்பற்றும்போது 859 ஆண்கள் மற்றும்887 பெண்களுக்கு சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் அதிகரித்தது.

சர்க்கரை நோயா? அதை வீட்டிலேயே கட்டுப்படுத்த இதோ சில வழிகள்...!

மது அருந்தாத ஆண்களை விட வாரத்திற்கு 14 முறை மது அருந்தும் ஆண்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் 43 சதவீதம் குறைவு. அதே போல மது அருந்தும் பழக்கமில்லாத பெண்களை விட வாரத்திற்கு 9 முறை மது அருந்தும் பெண்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் 58 சதவீதம் குறைவு.

Drinking 3-4 Times A Week May Keep Diabetes At Bay

தொடர்ந்து மது அருந்துவதன் அடிப்படையில், வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் மது அருந்துவோரை விட வாரத்திற்கு மூன்று நான்கு நாட்கள் மது அருந்தும் ஆண்களுக்கு 27 சதவீதமும் பெண்களுக்கு 32 சதவீதமும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று இந்த ஆய்வுத்தகவல்கள் குறிப்பிடுகிறது.

இந்த ஆய்வில் அதிகமாக மது அருந்துவதற்கும் சர்க்கரை நோய் வாய்ப்பிற்கு உள்ள தொடர்புகள் பற்றி எந்த தெளிவான ஆதாரங்களும் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். குறைந்த புள்ளிவிவரங்கள் காரணமாகவும் சில பங்கேற்பாளர்களே மிக அதிகமாக மது அருந்தியதால் இதை கண்டறிய முடியவில்லை என்று ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதற்கு முந்தைய ஆய்வுகள், மது அருந்தாத ஆண்கள் மற்றும் பெண்களை விட குறைவான அளவிலோ மிதமான அளவிலோ மது அருந்துபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே குறிப்பிடுகிறது.

மது அருந்தாதவர்களை விட அதிகமாகவோ அல்லது அதற்கு சமமாகவோ அதிகளவு மது அருந்துவோர்களுக்கும் சர்க்கரை நோய் வருவதற்கான அபாயம் உள்ளது.

English summary

Drinking 3-4 Times A Week May Keep Diabetes At Bay

Drinking 3-4 Times A Week May Keep Diabetes At Bay
Story first published: Wednesday, August 2, 2017, 18:00 [IST]