For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் பருமனாக இருப்பவர்கள் எப்படி குளுகோஸ் அளவை குறைக்கலாம் ?

|

உடல் பருமனானவர்களுக்கு சர்க்கரை வியாதி வருவதற்கான அறிகுறிகள் அதிகம். இதனை எப்படி தடுக்கலாமென ஃபீனிக்ஸிலுள்ள அரிஜோனா மாநில பல்கலைக் கழகம் ஆராய்ச்சி செய்தது.

இன்றைய காலங்களில் உடல் உழைப்பு என்பது அரிதாகவே இருக்கிறது. பெரும்பாலோனோர் நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே குறைந்த பட்சம் 8 மணி நேரம் வேலை செய்கின்றனர்.

Being Active may reduce Blood Glucose for Obese People

அவர்கள் தொடர்ந்து அமர்ந்த நிலையிலேயே இருந்தால், ரத்தத்தில் குளுகோஸின் அளவு அதிகரிக்கும். இதனை குறைக்க அலுவலக நேரத்திலேயே சில நிமிடங்கள் செலவிடலாம் என தலைமை ஆராய்ச்சியாளர் க்ளென் கேஸர் கூறுகிறார்.

இந்த ஆய்வில் உடல் பருமனான 9 பேரை ஈடுபடுத்தினர். அவர்கள் தொடர்ந்து உட்கார்ந்த நிலையில் 8 மணி நேரம் அமரும்போது, அவர்களின் ரத்தத்தில் குளுகோஸின் அளவை கண்காணித்தனர். பின்னர் அதற்கு அடுத்த வாரம், அடிக்கடி எழுந்து நிற்கச் சொல்லிக் கேட்டனர்.

அப்போதும் குளுகோஸின் அளவை கணக்கெடுத்தனர். அதற்கும் அடுத்த வாரம் கழித்து, நிற்பதற்கு பதிலாக அரைமணி நேர இடைவேளையில் ட்ரெட்மில்லில் நடக்கச் சொன்னார்கள். பின்னர் 4 வது வாரம் நடப்பதற்கு பதிலாக இடைவேளைகளில் சைக்கிள் பயிற்சி கொடுத்தார்கள்.

ஆராய்ச்சியின் இறுதியில் உட்கார்ந்த நிலையில் இருக்கும்போது, குளுகோஸின் அளவு ரத்தத்தில் மிகவும் அதிகரித்துள்ளது. நிற்கும்போது குறைந்தது. நடக்கும்போது இன்னும் அதிகமாக குளுகோஸின் அளவு குறைந்தது. அதே சைக்கிள் பயிற்சி செய்யும்போது குளுகோஸின் அளவு கணிசமாக ஆச்சரியப்படும்படி குறைந்தது என தெரிய வந்துள்ளது.

இந்த மூன்று பயிற்சியிலும் சைக்கிள் பயிற்சியில் 24 மணி நேரத்திற்குள்ளாகவே 12 சதவீதம் குறைந்து காணப்படுகிறது. காரணம் சாப்பிட்டவுடன் குளுகோஸின் அளவு அதிகரிக்கும்.

பொதுவாக தசைகளுக்கு சைக்கிள், உடற்பயிற்சி அளிக்கும்போது, தசைகள் குளுகோஸை உட்கிரகித்துக் கொள்ளும். பின்னர் அதனை லாக்டிக் அமிலமாக மாற்றி கல்லீரலுக்கு அனுப்பும். இந்த வளர்சிதையின்போது இன்சுலின் ஹார்மோனை அதிகமாக சுரக்கச் செய்யும். இதனால் குளுகோஸின் அளவு ரத்தத்தில் கட்டுக்குள் வருகிறது.

ஆகவே அவ்வப்போது சிறிய சிறிய பயிற்சியினால் குளுகோஸின் அளவை அதிகரிக்கச் செய்யாமல் இருக்கலாம். உடல் பருமன் சர்க்கரை வியாதியை உண்டு பண்ணும்.

சர்க்கரை வியாதி மற்ற வியாதிகளை கொண்டு வரும். இப்படி எல்லா வியாதிகளும் வருவதற்கு மூல காரனம் உடல் பருமன்தான். ஆகவே உடல் நலத்தில் அக்கறை கொண்டு. உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது உங்களின் முக்கிய கடமைகளில் ஒன்று

English summary

Being Active may reduce Blood Glucose for Obese People

Being Active may reduce Blood Glucose for Obese People
Desktop Bottom Promotion