Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
உறவை பாதிக்கும் நீரிழிவு!: மருத்துவர்கள் எச்சரிக்கை

இந்தியாவில் பல லட்சம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய் தாக்குதலினால் முதலில் பாதிக்கப்படுவது நரம்பு மண்டலம் என்பதால் நீரிழிவு உடையர்களுக்கு நரம்புத் தளர்ச்சி ஏற்படும். அதனால் பெண்களுக்கு உறவில் ஈடுபாடின்மை, ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளாவிட்டால் முழு அளவில் ஆண்மைக் குறைவு ஏற்பட்டு விடும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
நரம்பு மண்டல பாதிப்பு
நீரிழிவு உடையவர்கள் அனைவருக்குமே நரம்புத் தளர்ச்சி தலை தூக்க ஆரம்பிக்கும். நரம்பு மண்டலம் முக்கிய பங்கு வகிப்பது பாலுணர்வில் தான். மனதும் உடலும் சேர்ந்து ஒத்துழைக்கும் போது ஆசையில் ஆரம்பிக்கும் உணர்வுகள், உடலுறவில் முடிந்து திருப்தி அடையும். நீரிழிவு மனதையும் உடலையும் பாதிக்கும் நோய். இதனால் தாம்பத்ய பாதிப்பு ஏற்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஆண்மைக் குறைவு
பாலுறவின் போது நரம்புகளின் செயல்பாடு மிகவும் முக்கியமானது. நுகர்தல், மற்றும் உணர்தல் (ஆகிய இரண்டும் தான் பாலுறவின் செயல்பாட்டிற்கு தூண்டுதலாக அமைகின்றன. இதனை சிறப்பாகச் செய்பவை சிறிய நுண்ணிய நரம்புகள் தான். நீரிழிவு நோய் ஏற்படும் பொழுது இந்த இரத்த நாளங்கள் செயல்பாட்டை இழக்கின்றன இதனால் சரியாக இரத்த நாளங்கள் ஆண் உறுப்பினுள் இரத்தத்தை தேக்கிட சிரமப்படுகின்றன. மொத்த உடலின் இரத்த ஓட்டமும் சீராக இயங்காத காரணத்தால் தண்டு வடம் பாதிப்படைகிறது. இதனால் மன இறுக்கம் தோன்றி பாலுறவில் பாதிப்பு ஏற்படுகிறது.
பெண்களை பாதிக்கும்
நீரிழிவு நோயால் பெண் உறுப்புகளில் உள்ள நரம்புகள் / நாளங்கள் பாதிக்கப்படும். பூரண உணர்ச்சி இல்லாததால் பெண்ணுறுப்பு வறட்சி, ரத்தம், சுரப்பு நீர் இல்லாத நிலை, வலியுள்ள உடலுறவு ஏற்படுகின்றன. இதனால் பெண்களுக்கு உடலுறவு பிடிக்காமல் போய் விடுகிறது. இத்தகைய குறைபாடு ஏற்படாமல் தவிர்க்கவும் குறைபாடு இருப்பின் அவை அதிகரிக்காமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை அவசியம். அதற்கு தக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
கட்டுப்பாடான உணவு
சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருந்தாலும் மற்ற சில நோய் தாக்குதலினாலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நோய்க் கிருமிகள், அதிக கொழுப்புச்சத்து, உயர் இரத்த அழுத்தம், பிற மருந்து மாத்திரைகளால் ஏற்படும் அழற்சி, தைராய்டு, டென்ஷன், மன அழுத்தம், சுரப்பிக் கோளாறுகள், வயது, எடை, உடல் பருமன், உடல் உழைப்பின்மை, இவை அனைத்துடனும் சர்க்கரை நோய் அல்லது சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் ஆண்மைக் குறைவு ஏற்படுகின்றது.
கட்டுப்பாடான வாழ்க்கை, ஊட்டச்சத்துள்ள அதே சமயம் சர்க்கரை அளவை அதிகரிக்காத உணவு முறை, உடற்பயிற்சி, தக்க இடைவெளியில் பரிசோதித்துக் கொள்வது, தகுந்த மருத்துவ ஆலோசனை, அவசியம் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications