Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
Diabetes: இரவு நேரத்தில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்
Diabetes Symptoms In Tamil: சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலானது 2023 ஆம் ஆண்டில் இந்திய சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை குறித்து வெளியிடப்பட்ட ஆய்வில், இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10.1 கோடியாக உள்ளது.
சர்க்கரை நோய் என்றதுமே பலருக்கும் ஒருவித பயம் மனதில் எழும். ஏனெனில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டால், உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். இது தவிர, இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

என்ன தான் நவீன உலகில் வாழ்ந்தாலும், இன்னும் நிறைய பேர் தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதை அறியாமல் உள்ளனர். சர்க்கரை நோயானது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக பாதிக்கும். அதில் சிலர் இரவு நேரத்தில் அறிகுறிகளை சந்திக்க நேரிடும். இதன் விளைவாக ஒருவரது தூக்கம் பாதிக்கப்பட்டு, ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.
டயபெட்டிக் ஹைப்போகிளைசீமியாவின் ஆபத்து
டயட்பெட்டி ஹைப்போகிளைசீமியா (Diabetic hypoglycemia) என்பது சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவு வழக்கத்தை விட குறைவாக இருக்கும் நிலையாகும். ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளதா இல்லையா என்பதைப் பொறுத்து, இரத்த சர்க்கரை அளவானது மாறுபடும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஹைப்போகிளைசீமியா என்பது இரத்த சர்க்கரை அளவு 70 mg/dL-க்கும் குறைவாக இருக்கும். அதுவே சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கு ஹைப்போகிளைசீமியா என்பது இரத்த சர்க்கரை அளவு 55 mg/dl-க்கும் குறைவாக இருக்கும். பெரும்பாலும் இம்மாதிரியான நிகழ்வு இன்சுலின் அல்லது சர்க்கரை நோய்க்கான மருந்துகளை எடுக்கும் சர்க்கரை நோயாளிகளிடையே காணப்படும்.
பொதுவாக ஹைப்போகிளைசீமியாவானது இன்சுலின் அல்லது சர்க்கரை நோய்க்கான மருந்துகளை எடுக்கும் அளவு மற்றும் உட்கொள்ளும் கார்போஹைட்டின் அளவு ஆகியவற்றிற்கு இடையே ஏற்றத்தாழ்வு ஏற்படும் போது நிகழ்கிறது. ஹைப்போகிளைசீமியா இருந்தால், நடுக்கம், வியர்வை, தலைச்சுற்றல், குழப்பம் மற்றும் தீவிரமான நிலையில் சுயநினைவை இழப்பது போன்ற அறிகுறிகள் தெரியும்.
ஹைப்போகிளைசீமியாவால் பாதிக்கப்பட்டவர்கள், இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க சர்க்கரை நிறைந்த உணவுகளை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும். ஹைப்போகிளைசீமியா அறிகுறிகள் தெரியும் போது, இந்த சர்க்கரை நிறைந்த உணவுகளை உட்கொண்டால் அது உடனடியாக சரியாகும்.
இரவு நேரத்தில் இரத்த சர்க்கரை அளவு எதனால் அதிகரிக்கிறது?
நாம் தூங்கும் போது உடலினுள் பல முக்கியமான செயல்பாடுகள் நடக்கின்றன. அதுவும் தூக்கமானது பல்வேறு ஹார்மோனல் மற்றும் வளர்சிதை மாற்ற செயல்முறைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் தான் சரியாக தூங்காமல் இருக்கும் போது, அது உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகின்றன.
பொதுவாக தூக்கத்தின் போது கார்டிசோல் மற்றும் வளர்ச்சி ஹார்மோன்கள் வெளியிடப்படுகின்றன. இவை இன்சுலின் எதிர்ப்பு செயல்பாட்டை ஏற்படுத்தி, இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. வளர்ச்சி ஹார்மோன்கள் மற்றும் கார்டிசோல் ஆகிய இரண்டும் பகல் வேளையில் உடலில் ஏற்படும் தேய்மானங்கள் மற்றும் காயங்களை ஆற்றல் தேவைப்படுகின்றன.
மேலும் தூக்கத்தின் போது மூளையின் செயல்பாடு குறைகிறது. இதனால் உடலில் க்ளுக்கோஸ் குறைவாக பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாகவே இரவு நேரத்தில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.
இரவு நேரத்தில் தெரியும் சர்க்கரை நோயின் அறிகுறிகள்
சர்க்கரை நோயின் அறிகுறிகள் பகலில் மட்டுமின்றி, சிலருக்கு இரவு நேரத்திலும் தெரியும். அந்த அறிகுறிகள் பின்வருமாறு:
* இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது
* இரவு நேரத்தில் அதிகம் வியர்ப்பது
* அமைதியற்ற தூக்கம்
* கெட்ட கனவுகள்
* விரைவான இதயத் துடிப்புடன் எழுவது போன்றவை.
சில சமயங்களில் ஹைப்போகிளைசீமியா தவறான அளவில் மருந்துகளை எடுப்பது மற்றும் இன்சுலின் நேரம், அதிகளவில் சர்க்கரை நோய் மருந்துகளை எடுப்பது, உணவுகளை தவிர்ப்பது, மது அருந்துவது போன்றவற்றாலும் ஏற்படலாம். ஹைப்போகிளைசீமியாவை சாதாரணமாக எடுத்துக் கொண்டால், அதன் விளைவாக மூளை சேதம் மற்றும் மரணம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.
சர்க்கரை நோயின் பிற அறிகுறிகள்...
* உடல் நடுக்கம்
* அதிகப்படியான தாகம் மற்றும் சிறுநீர் கழிப்பது
* மிகுந்த உடல் சோர்வு மற்றும் பசி
* தலைச்சுற்றல், தலைபாரம், குழப்பம் அல்லது எரிச்சலுணர்வு
* வேகமாக இதயத் துடிப்பு
* தலைவலி
* உதடுகள், நாக்கு அல்லது கன்னம் மரத்துப் போவது
* மங்கலான பார்வை அல்லது பேசும் போது உளறுவது
* வலிப்பு
* சுயநினைவு இழப்பு
முடிவு
பொதுவாக உடலில் எந்த ஒரு அறிகுறிகளை சந்தித்தாலும், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்வதை ஒவ்வொருவரும் தவிர்க்க வேண்டும். முக்கியமான சர்க்கரையின் நோயின் அறிகுறிகள் அனுபவித்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டியது முக்கியம். மேலும் சர்க்கரை நோயாளிகள் ஆரோக்கியமான உணவுகள், தினசரி உடற்பயிற்சி, சரியான வேளையில் உணவுகளை உட்கொண்டு மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இது தவிர அவ்வப்போது இரத்த சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications