Latest Updates
-
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
Varalakshmi Vratam 2026: வரலட்சுமி விரதத்தின் போது டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
முட்டை குழம்பை இந்த பக்குவத்துல செய்யுங்க.. மட்டன் குழம்பு ருசியில செமயா இருக்கும்.. -
உங்க கல்லீரலில் பிரச்சனை வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 காற்கறிகளை வாரந்தோறும் சாப்பிடுங்க.. -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
பாபா வங்காவின் கணிப்புப்படி பெட்ரோல் விலையில் என்னென்ன மாற்றம் வரப்போகிறது தெரியுமா? -
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க..
இந்த அறிகுறி தெரிஞ்சா அசால்ட்டா இருக்காதீங்க.. ஏன்னா இது கொடிய நோயின் எச்சரிக்கை அறிகுறி..
Symptoms Of Diabetes In Tamil: உலகில் மில்லியன் கணக்கான மக்கள் நீரிழிவு நோய் என்னும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நாளுக்கு நாள் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. ஒருவர் தங்களின் இரத்த சர்க்கரை அளவை சரியாக பராமரிக்காமல் இருந்தால், அது பல்வேறு உறுப்புக்களின் செயல்பாட்டை பாதிக்கும்.
இரத்த சர்க்கரை அளவை இன்சுலின் என்னும் ஹார்மோன் தான் சீராக்குகிறது. இந்த ஹார்மோன் தான் உடலை கார்போஹைட்ரேட்டுகளில் இருந்து சர்க்கரையை ஆற்றலாக பயன்படுத்த அனுமதிக்கிறது. இந்த இன்சுலின் போதுமான அளவில் இல்லாவிட்டால், சர்க்கரையால் செல்களுக்குள் நுழைய முடியாமல், இரத்தத்துடன் கலந்து சர்க்கரை நோயால் பாதிக்கப்பட நேரிடுகிறது.

இப்படி நீண்ட காலமாக இரத்தத்தில் சர்க்கரை அதிகமாக கலந்திருந்து, அதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால், அதன் விளைவாக உயிரையே இழக்கும் அபாயமும் உள்ளது. எனவே நாம் நமது உடலில் எந்த ஒரு பிரச்சனையை திடீரென்றும் சந்தித்தாலும் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே அது என்னவென்பதை மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
நிபுணர்களின் கூற்றுப்படி, சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகளானது அனைவருக்குமே ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அறிகுறிகள் தெரியும். இப்போது ஒருவருக்கு சர்க்கரை நோய் இருந்தால் தெரியும் சில அசாதாரண அறிகுறிகளைக் காண்போம்.
கழுத்தில் கருமை
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் தெரியக்கூடிய ஒரு அசாதாரண எச்சரிக்கை அறிகுறி தான் கழுத்தைச் சுற்றியுள்ள பகுதி கருமையாக இருப்பது. இதை அகாந்தோசிஸ் நிக்ரிகன்ஸ் என்று அழைப்பர். இந்நிலையில் இன்சுலின் உடலில் அளவுக்கு அதிகமாக இருப்பதோடு, அது சரியாக பயன்படுத்தப்படாமல் இருக்கும்.
இன்சுலின் உடலில் அதிகம் தேங்கியிருந்தால், அதன் விளைவாக சருமம் கருமையாகத் தொடங்கும். பெரும்பாலும் இப்படியான கருமை கழுத்து, அக்குள் போன்ற பகுதிகளில் தெரியும். பொதுவாக இந்த அறிகுறியானது டைப்-2 சர்க்கரை நோயாளிகளிடையே காணப்படும்.
நாள்பட்ட நோய்த்தொற்று
நீங்கள் அடிக்கடி ஏதேனும் ஒரு நோய்த்தொற்றால் பாதிக்கப்படுகிறீர்களா? அப்படியானால் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். சர்க்கரைநோய் இருந்தால் அது நாள்பட்ட நோய்த்தொற்றுக்களை உண்டாக்கும். குறிப்பாக யோனி தொற்றுகள், ஈஸ்ட் தொற்றுகள், சிறுநீர்ப்பை தொற்றுகள் மற்றும் சரும தொற்றுகள் போன்றவற்றை ஏற்படுத்தும்.
ஆய்வுகளின் படி, எப்போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளதோ, அப்போது இரத்த வெள்ளையணுக்களால் இரத்தத்தில் பயணித்து தொற்றுக்களை எதிர்த்துப் போராட முடியாமல் போகிறது. இதன் விளைவாக சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட நேரிடுகிறது.
மிகுந்த உடல் சோர்வு மற்றும் தலைச்சுற்றல்
பொதுவாக உடல்நலம் சரியில்லாவிட்டால் பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனை தான் மிகுந்த உடல் சோர்வு மற்றும் தலைச்சுற்றல். எனவே நீங்கள் இப்படியான அறிகுறிகளை சமீப காலமாக அதிகமாக சந்தித்தால், சர்க்கரை நோய் உள்ளது என்று அர்த்தம்.
எடை இழப்பு
நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சிக்காமலேயே, திடீரென்று உடல் எடை குறைகிறது என்றால், சந்தோஷப்படாதீர்கள். எப்போது உடலில் இன்சுலின் சரியாக உற்பத்தி செய்யப்படாமல் உள்ளதோ, அப்போது செல்களால் சர்க்கரையை ஆற்றலாக மாற்ற முடியாமல் போகும். இந்நிலையில் உடல் ஆற்றலுக்காக உடலில் உள்ள கொழுப்புக்களை எரிக்க தொடங்கி எடை இழப்பை உண்டாக்குகிறது.
பார்வையில் மாற்றம்
உங்களின் பார்வையில் திடீரென்று ஒரு பெரிய மாற்றத்தைக் காண்கிறீர்களா? அப்படியானால் உடனே மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் இது சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால், அது திரவ அளவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, கண்களை பாதித்து கண்களில் வீக்கம், மங்கலான பார்வை மற்றும் பார்ப்பதில் சிரமம் போன்றவற்றை ஏற்படுத்தும்.
அரிப்பு
சர்க்கரை நோய் இருந்தால் வெளிப்படும் மற்றொரு அசாதாரண அறிகுறி தான் அரிப்பு. பொதுவாக உயர் இரத்த சர்க்கரை அளவு காரணமாக நரம்பு இழைகள் சேதமடைவதால் இப்படியான அரிப்பு ஏற்படுகிறது. அதுவும் இந்த அரிப்பு உடலின் எந்த பகுதிகளில் வேண்டுமானாலும் ஏற்படலாம். பெரும்பாலும் உயர் இரத்த சர்க்கரையால் கைகள் மற்றும் கால்களில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு, இப்பகுதியில் மிகுந்த அரிப்பை உண்டாக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications