Latest Updates
-
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
சர்க்கரை நோய் இருக்கா? அப்ப இந்த பழங்களை சாப்பிடாதீங்க.. இல்ல உயிருக்கு ஆபத்தாயிடும்...
Diabetes Diet: உலகிலேயே இந்தியாவில் தான் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதோடு ஒவ்வொரு நாளும் அதிகரித்தும் வருகிறது. சர்க்கரை நோய் என்பது முழுமையாக குணப்படுத்த முடியாத ஒரு நாள்பட்ட கோளாறு ஆகும்.
இந்நிலையில் இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் அல்லது உடலில் இன்சுலின் போதுமான அளவு இல்லாமல் இருக்கும். ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அந்நபர் தங்கள் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதோடு தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அனைத்துவிதமான உணவுகளையும் உட்கொள்ள கூடாது. கிளைசீமிக் இன்டெக்ஸ் மற்றும் சர்க்கரை குறைவாக உள்ள உணவுகளையே உட்கொள்ள வேண்டும். அதுவும் பழங்களை எடுத்துக் கொண்டால், ஒருசில பழங்களை சர்க்கரை நோயாளிகள் அறவே தொடக்கூடாது.
ஏனெனில் இந்த பழங்களில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகளவில் இருக்கும். உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்து எந்த மாதிரியான பழங்களை உட்கொள்ளக்கூடாது என்று தெரியாவிட்டால், கீழே சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாத பழங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
1. பப்பாளி
அனைத்து பருவங்களிலும் விலைக் குறைவில் கிடைக்கும் ஒரு பழம் தான் பப்பாளி. இந்த பப்பாளியில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. அதே சமயம் பப்பாளியில் சர்க்கரையும் அதிகமாக உள்ளன. எனவே சர்க்கரை நோயாளிகள் இப்பழத்தை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வேண்டுமானால் ஆசைக்காக ஒரு சிறிய துண்டு சாப்பிடலாம்.
2. வாழைப்பழம்
பப்பாளியைப் போன்றே வாழைப்பழமும் விலைக் குறைவில் கிடைக்கக்கூடியது. அதோடு அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இனிப்பாகவும் இருக்கும். ஆனால் வாழைப்பழத்தில் சர்க்கரை மட்டுமின்றி கார்போஹைட்ரேட்டுகளும் அதிகளவில் உள்ளன. எனவே இப்பழத்தை சர்க்கரை நோயாளிகள் உட்கொண்டால், அது இரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரிக்கும். ஆகவே இந்த பழத்தையும் சர்க்கரை நோயாளிகள் உண்பதை தவிர்க்க வேண்டும்.
3. அன்னாசிப்பழம்
அன்னாசி நல்ல சுவையானது மட்டுமின்றி, ஆளை மயக்கும் அளவில் மணத்தைக் கொண்டது. ஆனால் இந்த பழத்தில் சர்க்கரை மிகவும் அதிக அளவில் உள்ளன. எனவே சர்க்கரை நோய் இருந்தால் இந்த பழத்தை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது.
4. தர்பூசணி
என்ன தான் தர்பூசணி பழம் நீர்ச்சத்து நிறைந்ததாக இருந்தாலும், இந்த பழத்தில் சர்க்கரையும் அதிகளவில் நிறைந்துள்ளன. எனவே சர்க்கரை நோய் இருப்பவர்கள் தர்பூசணி பழத்தை அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. வேண்டுமானால் அளவாக சாப்பிடலாம்.
5. திராட்சை
திராட்சை புளிப்பும், இனிப்பும் கலந்த ஒரு சுவையான பழம். இந்த பழத்தில் சர்க்கரை அதிகமாக உள்ளன. எனவே இப்பழத்தை சர்க்கரை நோயாளிகள் உட்கொண்டு வந்தால், அது இரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கும். எனவே சர்க்கரை நோய் இருந்தால், இதை அளவாக உட்கொள்ளுங்கள்.
6. மாம்பழம்
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மாம்பழத்தை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் மாம்பழத்தில் சர்க்கரையும், கார்போஹைட்ரேட்டுகளும் அதிகளவில் உள்ளன. இவை இரத்த சர்க்கரை அளவை மோசமாக பாதித்து, இரத்த சர்க்கரையை உயர்த்தும். எனவே மாம்பழத்தையும் சர்க்கரை நோயாளிகள் உட்கொள்ளக்கூடாது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











