Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா? அப்ப இந்த ஆபத்தான நோய் இலவச இணைப்பா வர வாய்பிருக்காம்!
Diabetes and Stroke: இன்றைய நாளில் மக்களிடையே வேகமாக அதிகரித்து வரும் ஒரு முக்கிய ஆபத்தான நோயாக சர்க்கரை நோய் உள்ளது. தற்போது 35 வயதை கடந்ததும் சர்க்கரை நோய் வந்துவிடுமோ என்ற பயம் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. ஆரோக்கியமற்ற உணவுகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உடல் பருமன் ஆகியவை நீரிழிவு நோயை ஏற்படுத்தலாம்.

நீரிழிவு நோய் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிப்பதோடு, உயிருக்கு ஆபத்தான பல உடல்நல சிக்கல்களை ஏற்படுத்தலாம். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளதா? என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
பக்கவாதத்திற்கு எவ்வாறு வழிவகுக்கிறது?
உயர் இரத்த சர்க்கரை இரத்த நாளங்களை கடினமாக்குகிறது. இது காலப்போக்கில் கொழுப்பு படிவுகள் அல்லது இரத்த நாளங்களில் உறைதலை ஏற்படுத்தி கட்டிகளை உருவாக்கலாம். இந்த கட்டிகள் இரத்த நாளங்களை சுருக்கி, மூளை போன்ற முக்கிய உறுப்புகளுக்கு இரத்த விநியோகம் செல்லாமல் தடுக்கிறது. இதனால் பக்கவாதம் ஏற்படுகிறது.
பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகம்
நாள்பட்ட நோயான நீரிழிவு நோய், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் கார்டியோமெடபாலிக் ஆபத்து காரணிகளுடன் தொடர்புடையதாக உள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பக்கவாதத்தினால் பாதிக்கப்படும்போது, உடல் நிலைமை மிகவும் மோசமாக பாதிக்கப்படலாம். மேலும், மற்றவர்களை விட நீரிழிவு நோயாளிகளுக்கு பக்கவாதம் ஏற்படும் ஆபத்து இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாக ஆய்வு கூறுகிறது.
சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் மதிப்பீட்டின்படி, தற்போது 537 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கின்றனர். ஏற்கனவே ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த எண்ணிக்கை, 2030ஆம் ஆண்டில் 643 மில்லியனாகவும், 2045ல் 783 மில்லியனாகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான பல உடல்நல பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அந்த வகையில், பக்கவாதம் மற்றும் இஸ்கிமிக் ஸ்ட்ரோக் ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பொதுவான பிரச்சினைகள்
பக்கவாதத்தின் மூன்று பொதுவான காரணங்களை பாதிப்பதில் நீரிழிவு நோய் முக்கிய பங்கு வகிக்கிறது. பெருந்தமனி தடிப்பு, பெருமூளை சிறு நாள நோய்(Cerebral Small Vessel Disease), கார்டியாக் எம்போலிசம் ஹைப்பர் கிளைசீமியா மற்றும் இன்சுலின் எதிர்ப்பு ஆகியவை ஆகும். பொதுவாக நீரிழிவு நோயாளிகளில் பெருமூளை மைக்ரோவாஸ்குலர் செயலிழப்பு காணப்படுகிறது. இது ஒரு நபரை ரத்தக்கசிவு பக்கவாதத்திற்கு ஆளாக்குகிறது.
பக்கவாதத்திற்கான பிற ஆபத்து காரணிகள்
நீரிழிவு நோயைத் தவிர, பக்கவாதத்திற்கான பிற ஆபத்து காரணிகள் அதிகப்படியான தொப்பை கொழுப்பு ஆகும். அதாவது பெண்களில் இடுப்பு அளவு 35 அங்குலத்திற்கும் ஆண்களில் 40 அங்குலங்களுக்கும் அதிகமாக இருந்தால் பக்கவாதம் ஏற்படலாம். மேலும், உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, மது மற்றும் புகையிலை நுகர்வு அதிகமாக இருந்தாலும் பக்கவாதம் ஏற்படலாம்.
பக்கவாத அபாயத்தை குறைப்பது எப்படி?
உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைத் தடுக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். இரத்த குளுக்கோஸ், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் உடல் எடையை சரியான அளவில் நிர்வகிக்க வேண்டும்.
ஆரோக்கியமான உணவு, உடல் செயல்பாடு மற்றும், தேவைப்பட்டால், மருந்துகள் மூலம் நீரிழிவு நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தை குறைக்கலாம். ஆரோக்கியமற்ற பழக்கங்களை முதலில் கைவிடுவது, உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


