Latest Updates
-
அக்டோபரில் உருவாகியுள்ள லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு பணம் சம்பாதிக்க புதிய வழி கிடைக்கும்! -
சிப்ஸ் பாக்கெட்களில் ஏன் சிப்ஸை விட காற்று அதிகமாக உள்ளது தெரியுமா? அது சாதாரண காற்றே இல்லையாம் -
15 நிமிடத்தில் இட்லி குருமா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
அக்டோபர் 06 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஏமாற்றங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
அக்டோபர் இறுதியில் நடக்கும் குரு பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசியின் பலமும்,பணமும் அதிகரிக்கப்போகுதாம் -
ஹோட்டல் ஸ்டைல் முந்திரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - அருமையா இருக்கும் -
இந்த ஒரு பொடியை அரைச்சு வெச்சுக்கோங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது! -
Mahalaya Amavasya 2026:மகாளய அமாவாசை எப்போது வருகிறது? இந்த நாளில் இறந்தவர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் -
உங்க முகம் உடனடியாக பளீச்சுன்னு மாறணுமா? அப்ப ரோஜாப்பூ வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
Dengue: டெங்குவால் உடலில் ஆக்ஸிஜன் குறையாமல் இருக்கணுமா? இந்த உணவுகளை அதிகமா சாப்பிடுங்க..
Dengue Fever Surge: மழைக்காலம் என்பதால் தற்போது டெங்கு காய்ச்சல் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. கொசுக்களின் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் ஒருவருக்கு அதிக காய்ச்சல், உடல் வலி, தலை வலி, மூட்டு வலி போன்றவற்றை ஏற்படுத்துவதோடு, இன்னும் தீவிரமான நிலையில் அது மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி முதல் உடலில் ஆக்ஸிஜன் குறைவது வரை நிலைமையை மோசமாக்கும். சில சமயங்களில் உயிரையே பறித்துவிடும்.
பொதுவாக நமது உடல் உறுப்புக்கள் சீராக செயல்பட வேண்டுமானால் உடலுக்கு ஆக்ஸிஜன் சப்ளை சீராக இருக்க வேண்டும். ஏனெனில் ஆக்ஸிஜன் தான் உடல் செல்களின் செயல்முறைகள் மற்றும் ஆற்றல் உற்பத்திக்கு எரிபொருளாகும். ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிட்டால், அதன் விளைவாக மிகுந்த உடல் சோர்வு, ஹைப்போக்ஸீமியா போன்ற கடுமையான ஆரோக்கிய பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.

ஒருவது உடலில் 95 முதல் 100 சதவீதம் ஆக்ஸிஜன் அளவு இருக்க வேண்டியது அவசியம் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. உடலில் ஆக்ஸிஜன் அளவைப் பராமரிக்க வேண்டுமானால் இரும்புச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதுவும் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தால், அதிலிருந்து விரைவில் மீண்டு வரவும், உடலில் ஆக்ஸிஜன் அளவைப் பராமரிக்கவும் ஒருசில உணவுகளை உட்கொள்ள வேண்டும். இப்போது அந்த உணவுகளை எவையென்பதைக் காண்போம்.
பசலைக்கீரை
பசலைக்கீரையில் இரும்புச்சத்து, நைட்ரேட்டுகள், வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே போன்ற சத்துக்கள் உள்ளன. எனவே இந்த கீரையை உணவில் அதிகம் சேர்க்கும் போது, இதில் உள்ள இரும்புச்சத்து உடலில் ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கிறது. மேலும் இதில் உள்ள நைட்ரேட், நைட்ரிக் ஆக்ஸைடாக மாறி இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்து, இரத்த ஓட்டத்தை உடலில் மேம்படுத்துகிறது.
பீட்ரூட்
பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் அதிகளவில் உள்ளன. எனவே டெங்கு நோயாளிகள் இதை உட்கொள்ளும் போது, நைட்ரேட்டுகளானது இரத்த நாளங்களை தளர்வடையச் செய்து, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உடல் முழுவதும் ஆக்ஸிஜனை கிடைக்க வழிவகை செய்கிறது. இதன் மூலம் உடலில் ஆக்ஸிஜன் குறைவதைத் தடுக்கலாம்.
மாதுளை
டெங்கு நோயாளிகள் மாதுளையை உட்கொள்வது நல்லது. ஏனெனில் மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாலிஃபீனால்கள் வளமான அளவில் உள்ளன. இவை இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. உடலில் இரத்த ஓட்டம் தடையின்றி சிறப்பாக ஓடுவதன் மூலம், தசைகள் மற்றும் பிற உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் கிடைத்து, உடலுறுப்புக்கள் நன்கு செயல்படுகிறது. மேலும் இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ஆப்பிள்
ஆப்பிளில் க்யூயர்சிடின், ப்ளேவோனாய்டுகள் மற்றும் வைட்டமின் சி போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை இரத்த நாளங்களில் ஏற்படும் சேதத்தைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இரத்த நாளங்கள் ஆரோக்கியமாக இருந்தால், இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும். இதனால் உடல் செல்களுக்கு ஆக்ஸிஜன் கிடைத்து, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, எலுமிச்சை, கிரேப் ஃபுரூட், நெல்லிக்காய் போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகமாக உள்ளன. இந்த சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தவும், இரும்புச்சத்தை உறிஞ்சவும் உதவி புரிகிறது. உடலில் இரும்புச்சத்து போதுமான அளவில் இருந்தால் தான், அது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை மேம்படுத்தி, உடலுக்கு போதுமான ஆக்ஸிஜனை பெற உதவுகிறது. கூடுதலாக, சிட்ரஸ் பழங்களில் உள்ள ப்ளேவோனாய்டுகள் இரத்த நாளில் உள்ள அழற்சியைக் குறைத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகின்றன.
மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை டெங்கு நோயாளிகள் உணவில் அதிகம் சேர்ந்து வந்தால், உடலில் ஆக்ஸிஜன் குறைவதைத் தடுக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
