Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
டெங்கு காய்ச்சலால் உடலில் ஆக்ஸிஜன் குறையாமல் இருக்கணுமா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...
Dengue Fever: மழைக்காலம் தொடங்கிவிட்டதால், ஆங்காங்கு நீர் தேங்கி கொசுக்கள் அதிக இனப்பெருக்கம் செய்து, பல்வேறு நோய்த்தொற்றுக்களை பரப்பிக் கொண்டிருக்கின்றன. கொசுக்களின் மூலம் பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளன. அதில் மிகவும் கொடிய மற்றும் இன்னும் மருந்து கண்டுபிடிக்காத ஒரு நோய்த்தொற்று என்றால் இது டெங்கு காய்ச்சல் தான்.
தற்போது தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் வழக்குகள் அதிகமாக பதிவாகியிருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டவர்கள், உடனே மருத்துவரை அணுகி அறிகுறிகளுக்கு ஏற்ற சிகிச்சையைப் பெற வேண்டும். தாமதித்தால், அதன் விளைவாக உயிரையே இழக்கும் அபாயம் உள்ளது.

முக்கியமாக டெங்கு காய்ச்சலின் போது உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைய வாய்ப்புள்ளதால், பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கள் ஆக்ஸிஜன் அளவைப் பராமரிக்க வேண்டியது முக்கியம். கீழே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையாமல் இருக்க எந்த வகையான உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும் என்பது கொடுக்கப்பட்டுள்ளன. அந்த உணவுகளை உட்கொண்டு வந்தால், ஆக்ஸிஜன் அளவு சீராக பராமரிக்கப்படுவதோடு, பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
பச்சை இலைக் காய்கறிகள்
டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் பசலைக்கீரை, கேல், லெட்யூஸ் போன்ற பச்சை இலைக் காய்கறிகளை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். ஏனெனில் இவற்றில் குளோரோபில்கள் அதிகம் இருக்கும். இவை இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும். அதற்கு இவற்றை பொரியலாகவோ அல்லது சூப்பாகவோ செய்து சாப்பிடலாம்.
ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருப்பதை அனைவருமே அறிவோம். வைட்டமின் சி உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்துக் கொள்ள உதவுவதோடு, இரும்புச்சத்தை உறிஞ்ச பெரிதும் உதவி புரிகிறது மற்றும் இது உடலில் ஆக்ஸிஜன் அளவை பராமரிக்கவும் மிகவும் இன்றியமையாதது. எனவே டெங்கு நோயாளிகள் ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, கிரேப்ஃபுரூட் போன்றவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.
நட்ஸ் மற்றும் விதைகள்
ஒரு கையளவு பாதாம், சூரியகாந்தி விதைகள், ஆளி விதைகள் போன்ற நட்ஸ் மற்றும் விதைகளை டெங்கு நோயாளிகள் உட்கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில் இவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளன. இவை ஆக்ஸிஜன் அளவை அதிகரித்து உடலில் அழற்சி/வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. அதுவும் இதில் உள்ள மக்னீசியம் இரத்த நாளங்களை ரிலாக்ஸடைய செய்து ஆக்ஸிஜன் ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றன. அதற்கு நட்ஸ் மற்றும் விதைகள் தினமும் ஸ்நாக்ஸ் நேரத்தில் சாப்பிடலாம் அல்லது ஸ்மூத்தி, ஓட்ஸ் போன்றவற்றுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
பீட்ரூட்
பீட்ரூட் டெங்கு நோயாளிகள் விரைவில் குணமாக உதவி புரியும் அற்புதமான காய்கறி. ஏனெனில் இதில் உள்ள அதிகப்படியான சத்துக்கள், உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவுகின்றன. எனவே டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பீட்ரூட்டை ஜூஸாகவோ அல்லது பொரியலாகவோ செய்து சாப்பிடலாம்.
மஞ்சள் தூள்
மஞ்சள் தூளில் குர்குமின் என்னும் அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. இது ஒரு செயலில் உள்ள கலவை. இது நுரையீரல் செயல்பாடு மற்றும் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவுகின்றன. அதற்கு மஞ்சளை தினசரி சமையலில் சேர்ப்பதைத் தவிர, மஞ்சள் பாலாகவோ அல்லது சாலட்டுடன் சேர்த்தோ சாப்பிடலாம். இல்லாவிட்டால் ஒரு சிறிய துண்டு மஞ்சளை வெறும் வயிற்றில் உட்கொள்ளலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
