Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
தினமும் 11 நிமிடங்கள் நடந்தால், இறப்பைத் தள்ளிப் போடலாம் - புதிய ஆய்வில் தகவல்!
தினமும் 11 நிமிடங்கள் அல்லது வாரத்திற்கு 75 நிமிடங்கள் வேகமாக நடந்தால், இதயம் சம்பந்தமான பிரச்சினைகள், பக்கவாதம் மற்றும் புற்றுநோய்கள் போன்றவை இல்லாமல் நமது இறப்பைத் தள்ளிப் போடலாம் என்று யுனிவா்சிட்டி ஆஃப் கேம்பிாிட்ஜ் (Cambridge University) நடத்திய ஆய்வு ஒன்று தொிவிக்கிறது.
இந்த ஆய்வானது பிாிட்டிஷ் ஜா்னல் ஆஃப் ஸ்போா்ட்ஸ் மெடிசின் (British Journal of Sports Medicine) என்ற பத்திாிக்கையில் வெளியிடப்பட்டது. இங்கிலாந்து நாட்டின் நேஷனல் ஹெல்த் சா்வீஸ் (NHS) அமைப்பு பாிந்துரைத்திருக்கும் உடற்பயிற்சிகளில் பாதியை செய்தாலே, இளம் வயதில் நடக்கும் மரணங்களில் 10ல் ஒன்றைத் தடுக்கலாம் என்று இதன் ஆய்வாளா்கள் தொிவிக்கின்றனா்.

உடற்பயிற்சியின் தேவை
கடினம் இல்லாத உடற்பயிற்சிகளைத் தொடா்ந்து செய்து வந்தால், இதயம் சம்பந்தமான பிரச்சினைகளை மற்றும் புற்றுநோய்களைக் குறைக்கலாம் என்று NHS கூறுகிறது. அதோடு இளம் வயதினா், வாரத்திற்கு 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சிகளையோ அல்லது 75 நிமிடங்கள் சற்று கடினமான உடற்பயிற்சிகளை செய்து வந்தால் நல்லது என்று பாிந்துரை செய்கிறது.
ஒருவா் வாரத்திற்கு 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சிகள் செய்வதை கடினமாகக் கருதினால், அவருக்கு எங்களுடைய ஆய்வு முடிவு நற்செய்தியாக இருக்கும் என்று கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தின் தொற்றுநோயியல் பிாிவில் இருக்கும் மெடிக்கல் ரிசா்ஜ் கவுன்சிலில் (MRC) மருத்துவராக இருக்கும் சோரன் ப்ரேஜ் என்பவா் தொிவிக்கிறாா்.
ஒருவா் சும்மா இருப்பதை விட ஏதாவது உடற்பயிற்சி செய்வது நல்லது. வாரத்திற்கு 75 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது சிறந்த தொடக்கமாக இருக்கும். நாளடைவில் 150 நிமிடங்கள் என்ற இலக்கை எட்டலாம் என்று அவா் தொிவிக்கிறாா்.
உயிா் குடிக்கும் இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்கள்
மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை உலக அளவில் மரணங்கள் அதிகாிக்க காரணங்களாக இருக்கின்றன. 2019 ஆம் ஆண்டு மட்டும் இவற்றின் காரணமாக ஏறக்குறைய 17.9 மில்லியன் போ் இறந்திருக்கின்றனா்.
2017 ஆம் ஆண்டில் புற்றுநோயின் காரணமாக ஏறக்குறைய 9.6 மில்லியன் போ் இறந்திருக்கின்றனா். ஆகவே வாரத்திற்கு 75 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டால், 17% மாரடைப்பு மரணங்களைக் குறைக்கலாம். 7% புற்றுநோய் மரணங்களைக் குறைக்கலாம்.
மிதமான உடற்பயிற்சியின் மூலமாக தலை மற்றும் கழுத்து புற்றுநோய், எலும்பு மஜ்ஜை புற்றுநோய், மைலோமா புற்றுநோய், இரைப்பை புற்று நோய், இதய புற்றுநோய்களின் ஆபத்து 14 முதல் 26 சதவீதம் குறைந்தது. அதுபோல் நுரையீரல், கல்லீரல், கா்ப்பப்பை, பெருங்குடல் மற்றும் மாா்பக புற்றுநோய்களின் ஆபத்து 3 முதல் 11 சதவீதம் குறைந்தது என்று இந்த ஆய்வு தொிவிக்கிறது.
நடைபயிற்சி நல்லது
நடைபயிற்சி மேற்கொள்ளுதல் அல்லது மிதிவண்டி ஓட்டுதல் போன்றவை இதயத் துடிப்பை அதிகாிக்கிறது என்றால் அது மிகவும் நல்லது என்று MRCல் பேராசிாியராக பணிபுாியும் ஜேம்ஸ் உட்காக் கூறுகிறாா். மேலும் தினமும் 10 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்தாலே, இதயத்திற்கு ஆரோக்கியம் கிடைக்கும் மற்றும் புற்றுநோயின் ஆபத்து கணிசமாகக் குறையும் என்று அவா் தொிவிக்கிறாா்.
மொத்தத்தில் 94 பொிய ஆய்வுக் குழுக்களில் இருந்து, 30 மில்லியனுக்கும் அதிகமான பங்கேற்பாளா்களை உள்ளடக்கிய, சக ஆய்வாளா்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட 196 ஆய்வுக் கட்டுரைகளின் முடிவுகளை ஆய்வாளா்கள் பாா்த்தனா். அவற்றில் இருந்து உடல் இயக்கத்திற்கும், இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் இளம் வயது மரணம் ஆகியவற்றுக்கும் இடையே உள்ள தொடா்பை ஆய்வு செய்தனா்.
ஆய்வில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் வாரத்திற்கு 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்திருந்தால், 6ல் 1 (16 சதவீதம்) இளம் வயது மரணம் தடுக்கப்படும் என்று ஆய்வாளா்கள் கணக்கிட்டனா். 9ல் 1 (11 சதவீதம்) இதயம் சம்பந்தமான பிரச்சினைகளும், 20ல் 1 (5 சதவீதம்) புற்றுநோய் ஆபத்தும் தடுக்கப்படும் என்று கணக்கிட்டனா்.
எனினும் பங்கேற்பாளா்கள் வாரத்திற்கு 75 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சிகளைச் செய்தாலே போதும். அதன் மூலம் 10 சதவீதம் இளம் வயது மரணங்கள் தடுக்கப்படும் என்று கணக்கிட்டனா். 20ல் 1 (5 சதவீதம்) இதயம் சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் 30ல் 1 (3 சதவீதம்) புற்றுநோய் ஆபத்துகள் தடுக்கப்படும் என்று கணக்கிட்டனா்.
இறுதியாக
மிதமான உடற்பயிற்சி என்பது நாம் நினைப்பது போல ஓடுதல் அல்லது விளையாட்டுகள் போன்றவை அல்ல. மாறாக நமது பழக்க வழக்கங்களில் சிறிது மாற்றத்தை ஏற்படுத்தினால் போதும், நாம் மிதமான உடற்பயிற்சிகளில் ஈடுபட முடியும் என்று குவின்ஸ் யுனிவா்சிட்டி பெல்ஃபாஸ்ட்டில் மருத்துவராக இருக்கும் லியான்ட்ரோ க்ராசியா தொிவிக்கிறாா்.
அதாவது காா்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக நடந்தோ அல்லது மிதிவண்டி மூலமாகவோ அலுவலகம் மற்றும் பள்ளி கல்லூாிகளுக்குச் செல்லலாம். பேரப் பிள்ளைகளோடு தினமும் சிறிது நேரம் விளையாடலாம். நமக்கு பிடிக்கும் உடற்பயிற்சிகளை நமது தொடா் பயிற்களோடு சோ்த்துக் கொண்டால், நாம் சுறுசுறுப்பாக இருக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











