Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
Covishield Vaccine: நீங்க கோவிஷீல்டு தடுப்பூசி போட்டீங்களா? அப்ப உங்களுக்கு இந்த நோய் வர வாய்ப்பிருக்காம்...
Covishield Vaccine: கொரோனா வைரஸ் தொற்றினைக் கட்டுப்படுத்த உலகளவில் முக்கியமாக இந்தியாவில் உள்ள மக்களுக்கு போடப்பட்ட ஒரு தடுப்பூசி தான் கோவிஷீல்டு. என்ன தான் கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு காலத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உதவி புரிந்தாலும், தற்போது இந்த தடுப்பூசி குறித்த ஒரு செய்தி பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசியை முதன்முதலாக அஸ்ட்ராஜெனெகா என்ற மருந்து நிறுவனம் தான் கண்டுபிடித்தது. ஆனால் சமீபத்தில், அஸ்ட்ராஜெனெகா வெளியிட்ட கோவிஷீல்டு மற்றும் வாக்ஸ்செவ்ரியா போன்ற கோவிட்-19 தடுப்பூசிகள் ஒரு அரிதான பக்க விளைவுகளை உண்டாக்கும் என அந்த மருந்து நிறுவனம் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது.

அதுவும் கோலிஷீல்டு மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் இரத்த உறைவு மற்றும் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கைக்கு வழிவகுக்கும் ஒரு நிலையை ஏற்படுத்தும் என்று அந்த தடுப்பூசி தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இப்படியான நிலை த்ரோம்போசிஸ் வித் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் (TTS) என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியை வெளியிட அஸ்ட்ராஜெனெகா மருந்து நிறுவனமானது சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவுடன் இணைந்து தயாரித்தது. இந்த கோவிஷீல்டு தடுப்பூசியானது, பலரது உயிரைப் பறித்ததோடு, உடலினுள் கடுமையான காயங்களையும் ஏற்படுத்தியதாக கூறி இங்கிலாந்தில் ஒரு குழு, இந்த நிறுவனத்தின் மீது வழக்கை தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்ததில், இந்த மருந்து நிறுவனமும் இந்த தடுப்பூசி TTS என்ற அரிய பக்க விளைவை ஏற்படுத்தும் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது.
TTS என்றால் என்ன?
எப்போது எலும்பு மஜ்ஜை போதுமான பிளேட்லெட்டுகளை உற்பத்தி செய்யவில்லையோ, அப்போது TTS ஏற்படுகிறது. அதாவது பிளேட்லெட் என்னும் ஒரு வகையான இரத்த செல்கள் இரத்தக்கசிவை நிறுத்த உதவும் இரத்தக் கட்டிகளை உருவாக்கும். இந்த பிளேட்லெட் போதுமான அளவில் இல்லாவிட்டால் அது பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக ரத்தப்போக்கை ஏற்படுத்தும். இந்த நிலையில் இரத்தக்கசிவை நிறுத்துவது என்பது கடினம். பெரும்பாலும் இந்த TTS தன்னுடல் தாக்க நோய்கள் போன்ற சில மருத்துவ நிலைகளைக் கொண்டவர்களை அல்லது சில மருந்துகளை தொடர்ந்து உட்கொள்பவர்களையே பாதிக்கும்.
TTS மூலம் சந்திக்கும் சிக்கல்கள்
கடுமையான TTS மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பின்வரும் பிரச்சனைகள் வருவதற்கான அபாயம் அதிகரிக்கும் உள்ளது.
* உட்புற இரத்தப்போக்கு
த்ரோம்போசைட்டோபீனியாவானது இரைப்பை குடலில் இரத்தக்கசிவு அல்லது மூளையில் இரத்தக்கசிவை உண்டாக்கலாம். இது மிகவும் ஆபத்தானது. சில சமயங்களில் உயிரை இழக்கவும் வாய்ப்புள்ளது.
* மாரடைப்பு
த்ரோம்போசைட்டோபீனியா ஒரு கட்டத்தில் இதயத்திற்கு இரத்த ஓட்டத்தைக் குறைத்து, மாடைப்பை வரத் தூண்டும். இந்நிலையினால் வரும் மாரடைப்பு உயிரையே பறித்துவிடும்.
ஒருவருக்கு எவ்வளவு பிளேட்லெட்டுகள் இருக்க வேண்டும்?
பெரியவர்களை எடுத்துக் கொண்டால், ஒரு மைக்ரோலிட்டர் இரத்தத்திற்கு 1,50,000 - 4,50,000 பிளேட்லெட்டுகள் வரை இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். த்ரோம்போசைட்டோபீனியாவின் நிலைகள் பின்வருமாறு:
* லேசான த்ரோம்போசைட்டோபீனியா என்றால் ஒரு மைக்ரோலிட்டர் இரத்தத்தில் 101,000 - 140,000 வரை பிளேட்லெட்டுகள் இருக்கும்.
* மிதமான த்ரோம்போசைட்டோபீனியா என்றால் ஒரு மைக்ரோலிட்டர் இரத்தத்தில் 51,000 - 100,000 வரை பிளேட்லெட்டுகள் இருக்கும்.
* கடுமையான த்ரோம்போசைட்டோபீனியா என்றால் ஒரு மைக்ரோலிட்டர் இரத்தத்தில் 51,000 - 21,000 வரை பிளேட்லெட்டுகள் இருக்கும்.
த்ரோம்போசைட்டோபீனியாவின் அறிகுறிகள்
லேசான த்ரோம்போசைட்டோபீனியா நிலைகளில் எந்த அறிகுறிகளும் அவ்வளவு தெளிவாக தெரியாது என்றாலும், மிதமான மற்றும் கடுமையான நிலைகளில் பின்வரும் அறிகுறிகள் தெரியும். அவை:
* ஈறுகளில் இரத்தப்போக்கு
* இரத்தம் கலந்த மலம்
* சிறுநீரில் இரத்தம்
* வாந்தியில் இரத்தம்
* மாதவிடாய் காலத்தில் மிகவும் அதிகமாக இரத்தப்போக்கு
* கீழ் கால்களில் சிறிய சிவப்பு நிற புள்ளிகள் சொறி போன்று காணப்படும்
* சருமத்திற்கு அடியில் உள்ள சிறிய இரத்தக் குழாய்களில் இரத்தக்கசிவு
* தோலின் கீழ் காயங்கள்
* மலக்குடல் இரத்தப்போக்கு
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications