Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
Covid-19: இந்தியாவில் 1000-ஐ தாண்டிய கொரோனா வழக்குகள்: இந்த புதிய கோவிட் மாறுபாட்டின் அறிகுறிகள் என்ன?
Covid-19: தற்போது இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. கடந்த வாரம் இந்தியாவில் 257 கொரோனா வழக்குகள் இருந்தன. அதுவும் மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இந்த கொரோனா வழக்குகள் அதிகமாக இருந்தன. ஆனால் ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், இன்றைய நிலவரப்படி, 1000-க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது NB.1.8.1 மற்றும் LF.7 ஆகிய கோவிட்-19 மாறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் ஏப்ரல் மாதத்தில் NB.1.8.1 மாறுபாட்டால் ஒருவர் பாதிக்கப்பட்டார். அதன் பின் மே மாதத்தில் LF.7 மாறுபாட்டால் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விரு மாறுபாடுகளும் கண்காணிப்பின் கீழ் உள்ள மாறுபாடுகளாக உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியுள்ளது. சொல்லப்போனால், இவ்விரு மாறுபாடுகளும் தான் சீனா மற்றும் ஆசியாவின் மற்ற பகுதிகளில் கோவிட்-19 வழக்குகள் அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த வாரம் சுகாதார அமைச்சகமானது கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தான் பாதிப்பு அதிகமாக இருப்பதாக கூறியது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் சுமார் 1009 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் கேரளாவில் தான் 430 வழக்குகள் பதிவாகியுள்ளன.
அதற்கு அடுத்ததாக மகாராஷ்டிராவில் 209 வழக்குகளும், டெல்லியில் 104 வழக்குகளும், குஜராத்தில் 33 வழக்குகளும், தமிழ்நாட்டில் 69 வழக்குகளும், கர்நாடகாவில் 47 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இது தவிர உத்திரபிரதேசத்தில் 15, ராஜஸ்தானில் 13, மேற்கு வங்கத்தில் 12, ஹரியானாவில் 9, ஆந்திர பிரதேசத்தில் 4 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இவ்வளவு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இருப்பினும் இதற்கு முன் பரவிய கோவிட் மாறுபாடுகளுடன் ஒப்பிடுகையில், தற்போது பரவும் மாறுபாடு அதிகமாக பரவக்கூடியவை அல்லது கடுமையான உயிர்சேதத்தை ஏற்படுத்தக்கூடியவை என்று கூறும் அளவில் ஆபத்தானது அல்ல என்றே கூறப்படுகிறது. இருந்தாலும், மத்திய சுகாதார அமைச்சகம் இந்த மாறுபாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக கூறியுள்ளது.
NB.1.8.1 கோவிட் மாறுபாடு என்றால் என்ன?
இந்த NB.1.8.1 மாறுபாடு பல பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் பிறழ்வு ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு வேகமாகப் பரவ அனுமதிக்கிறது. ஆனால் இது கடுமையான நோயை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த உறுதியான ஆதாரமும் இல்லை.
LF.7 கோவிட் மாறுபாடு என்றால் என்ன?
மற்ற ஓமிக்ரான் தொடர்பான விகாரங்களைப் போலவே, இந்த மாறுபாடும் அதிக அளவில் பரவும் தன்மை கொண்டதாகத் தெரிகிறது. குறிப்பாக சமீபத்தில் பூஸ்டர் தடுப்பூசிகள் எடுக்காதவர்களுக்கு, இது சில நோய் எதிர்ப்பு சக்தியைத் தவிர்க்க முடிகிறது.
கோவிட்-19-ன் கவனிக்க வேண்டிய முக்கியமான அறிகுறிகள்
இந்த மாறுபாட்டின் அறிகுறிகள் லேசானது முதல் மிதமானதாகவே இருக்கும். ஆனால் வயதானவர்கள், குழந்தைகள், ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்களைத் தாக்கினால், ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். அதாவது அவர்களின் உடலில் தீவிரமான சேதத்தை ஏற்படுத்தி, நிலைமையை மோசமாக்கலாம். இருப்பினும் இதுவரை மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவில் தீவிர வழக்குகள் எதுவும் இல்லை. இருந்தாலும், சுகாதார நிறுவனங்கள் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன. இப்போது கட்டாயம் கவனிக்க வேண்டிய புதிய கோவிட் மாறுபாட்டின் அறிகுறிகளைக் காண்போம்.
* தொண்டை வலி
* மிகுந்த உடல் சோர்வு
* லேசான இருமல்
* காய்ச்சல் மற்றும் தசை வலி
* மூக்கடைப்பு
* லேசான காய்ச்சல்
* தலைவலி
* குமட்டல் அல்லது வாந்தி
* இரைப்பை குடல் பிரச்சனைகள்
* சிவந்த கண்கள்
இந்த அறிகுறிகள் பரபரப்பான பெருநகரங்களில் மிகவும் பொதுவானவை மற்றும் பரவலாகக் காணப்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நகர்புறங்களில் உள்ள மக்களிடையே தொற்று வேகமாக பரவக்கூடியது என்பதால், வெளியே செல்லும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான மாஸ்க் அணிவது, இடைவெளியைப் பின்பற்றுவது, தனிநபர் சுகாதாரத்தை கடைப்பிடிப்பது போன்றவற்றை தவறாமல் மேற்கொள்ளுங்கள். முக்கியமாக முடிந்த வரை கூட்டமான இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

