Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்..
Colon Cancer Signs In Tamil: முன்பெல்லாம் குடல் புற்றுநோய் வயதானவர்களிடையே மிகவும் பொதுவானதாக கருதப்பட்டது. ஆனால் சமீப காலமாக இளம் வயதினர் குடல் புற்றுநோயினால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் படி, 1999 முதல் 2020 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 20 முதல் 24 வயதிற்குட்பட்டவர்களிடையெ பெருங்குடல் புற்றுநோய் 185 சதவீம் அதிகரித்துள்ளது. மேலும் 15 முதல் 19 வயதிற்குட்பட்டவர்களிடையே 333 சதவீதம் அதிகரித்துள்ளது. முக்கியமாக 2020 ஆம் ஆண்டில் மட்டும் பெருங்குடல் புற்றுநோயால் சுமார் 930,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இப்படி பெருங்குடல் புற்றுநோயால் ஏராளமானோர் உயிரிழக்க காரணம், அதன் ஆரம்ப கால அறிகுறிகளை கவனித்து ஆரம்பத்திலேயே சிகிச்சை மேற்கொள்ளாமல் இருப்பது தான். பொதுவாக பெருங்குடல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது கடினம். இருப்பினும், ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளை தொடர்ந்து சந்திப்பதைக் கொண்டு, மருத்துவரை அணுகினால், ஆரம்பத்திலேயே எந்த நோயையும் கண்டறியலாம்.
ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டில் பயிற்சி பெற்ற அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெருங்குடல் புற்றுநோயின் 5 ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளை பகிர்ந்துள்ளார். அந்த அறிகுறிகள் தெரிந்தால், புறக்கணிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
பெருங்குடல் புற்றுநோய்
குடல் அல்லது பெருங்குடல் புற்றுநோய் என்பது பெருங்குடல், சிறுகுடல், மலக்குடலில் அசாதாரண செல்களின் வளர்ச்சியாக தொடங்கும். பின் அந்த செல்கள் கட்டுப்பாடின்றி வளர்ந்து உடலின் பிற பகுதிகளுக்கும் பரவத் தொடங்கும். இந்த பெருங்குடல் புற்றுநோய் வயது, உணவுப் பழக்கம், பரம்பரை, பெருங்குடல் புற்றுநோய் தொடர்பான பிறழ்வுகள், குடல் அழற்சி நோயின் வரலாறு, சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை போன்றவற்றால் ஒருவருக்கு வரலாம்.
பெருங்குடல் புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகள்
பெருங்குடல் புற்றுநோய் இளைஞர்களிடையே அதிகரித்து வருவதாக டாக்டர் சேத்தி கூறினார். மேலும் இந்த புற்றுநோயின் புறக்கணிக்கக்கூடாத 5 அறிகுறிகள் குறித்தும் பகிர்ந்துள்ளார். பெருங்குடல் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சைகளை மேற்கொள்வதன் மூலம் உயிரிழப்பைத் தடுக்கலாம்.
1. மலத்தில் இரத்தம்
பெருங்குடல் புற்றுநோயின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளுள் ஒன்று தான் மலத்தில் இரத்தக்கசிவு ஏற்படுவது. நீங்கள் மலம் கழிக்கும் போது, உங்கள் மலத்தில் இரத்தக்கசிவை கண்டால், அதை சாதாரணமாக நினைத்து விடாமல், உடனடியாக மருத்துவரை அணுகுங்கள் என்று டாக்டர் கூறினார்.
2. மலத்தின் வடிவம் அல்லது அளவில் மாற்றம்
குடலியக்கத்தில் ஏதேனும் மாற்றங்களை நீங்கள் கண்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதுவும் நீங்கள் கழிக்கும் மலத்தின் வடிவம் மற்றும் அளவில் மாற்றம் தெரிந்தால், அது பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்று டாக்டர் கூறினார். ஆகவே இப்படியான மாற்றத்தை தொடர்ந்து சந்தித்தால், அதை உடனே கவனித்து மருத்துவரை அணுகுங்கள்.
3. நாள்பட்ட வயிற்று வலி
உங்களுக்கு அடிக்கடி வயிற்று வலி வருகிறதா? அப்படியானால் அதை செரிமான பிரச்சனையாக நினைத்து புறக்கணிக்காதீர்கள். ஏனெனில் நாள்பட்ட வயிற்று வலியானது பெருங்குடல் புற்றுநோயின் முக்கிய அறிகுறி என்று டாக்டர் சேத்தி கூறியுள்ளார். எனவே எந்த சிகிச்சையை மேற்கொண்டும் தொடர்ந்து வயிற்றுப் பகுதியில் வலி மற்றும் அசௌகரியத்தை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
4. எடை இழப்பு
நீங்கள் எவ்வித முயற்சியையும் செய்யாமல் உடல் எடை குறைவதைக் காண்கிறீர்களா? அப்படியானால் அது பல்வேறு புற்றுநோய்களின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். அதுவும் உணவுப் பழக்கம் அல்ல உடற்பயிற்சி வழக்கத்தில் எவ்வித மாற்றங்களையும் செய்யாமல், உடல் எடையில் மாற்றங்களை சந்தித்தால், உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து பாருங்கள்.
5. உடல் சோர்வு
எந்நேரமும் மிகுந்த உடல் சோர்வை சந்திக்கிறீர்களா? என்ன தான் இரவு நேரத்தில் போதுமான தூக்கத்தை மேற்கொண்டாலும், உடல் பலவீனமாக இருப்பதை உணர்கிறீர்களா? அப்படியானால் அந்த உடல் சோர்வை சாதாரணமாக எடுத்து விடாதீர்கள். ஏனெனில் எக்காரணமும் இல்லாமல் அடிக்கடி உடல் சோர்வை சந்தித்தால், பெருங்குடல் புற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்புள்ளது. இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் அனைத்தும் பெருங்குடல் புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகளாகும். அதே வேளையில் இந்த அறிகுறிகள் அனைத்தும் பல்வேறு மருத்துவ நிலைமைகளிலும் காணப்படலாம். எனவே உறுதிப்படுத்த உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள் என்று டாக்டர் சேத்தி கூறினார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications