Latest Updates
-
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்! -
சர்க்கரை நோய்க்கான மருந்துகள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் என்பது உண்மையா? கட்டுக்கதையா?
90% மக்கள் புறக்கணிக்கும் குடல் புற்றுநோயின் சில ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்!
Colon Cancer: உலகளவில் அதிகளவில் மரணம் ஏற்படுவதற்கு காரணமாக இருப்பது புற்றுநோய். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. பொதுவாக எந்த ஒரு நோயையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.
குறிப்பாக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், மரணத்தைத் தவிர்க்கலாம். ஆனால் தற்போது நிறைய ஆரோக்கிய பிரச்சனைகளின் ஆரம்ப கால அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருப்பதால், மக்கள் குழப்பமடைந்து, அந்த அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்.

புற்றுநோய்களிலேயே மிகவும் பொதுவான புற்றுநோய் தான் பெருங்குடல் புற்றுநோய். இதை குடல் புற்றுநோய் என்றும் அழைப்பார்கள். சொல்லப்போனால் இது உடலைத் தாக்கும் மூன்றாவது மிகவும் பொதுவான புற்றுநோயாகும். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் இந்த வகை புற்றுநோயின் அபாயத்தைக் கொண்டுள்ளோம் என்பது தெரியுமா?
சமீப காலமாக சர்க்கரை நோயைப் போன்றே, இந்தியாவில் பெருங்குடல் புற்றுநோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு காரணம் பெருங்குடல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே போதுமானதாக இல்லை என்பதே. உண்மையைக் கூற வேண்டுமானால், பெருங்குடல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால், 100% முழுமையாக குணமாகலாம்.
எனவே தமிழ் போல்ட்ஸ்கை பெருங்குடல் புற்றுநோயின் சில ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளை கீழே கொடுத்துள்ளது. அந்த அறிகுறிகள் உங்களுக்கு தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகி சோதனை செய்து, சிகிச்சையை உடனே மேற்கொள்ளுங்கள்.
மலத்தில் இரத்தம்
ஒருவரது மலத்தில் இரத்தம் கசிவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் அது ஆரோக்கியமற்ற குடலின் முக்கிய அறிகுறி. முக்கியமாக குடல் புற்றுநோயின் பொதுவான ஆரம்ப கால அறிகுறி. அதுவும் அடர் சிவப்பு நிறத்தில் சளியுடன் கலந்து மலம் வெளியேறுவதை நீங்கள் கவனித்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
மலக்குடல் இரத்தக்கசிவு
குடல் புற்றுநோயின் மிகவும் நிலையான அறிகுறிகளில் ஒன்று மலக்குடல் இரத்தக்கசிவு. இந்த வகையான இரத்தக்கசிவை மலம் கழிக்கும் போது அல்லது மலம் கழிக்காத போதும் காணலாம். பெரும்பாலானோர், மலக்குடல் இரத்தக்கசிவிற்கு பின் கடுமையான வலி அல்லது அசௌகரியத்தை சந்திப்பார்கள். எனவே உங்கள் ஆசனவாயில் இருந்து இரத்தக்கசிவைக் கண்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
மலம் கழிப்பதில் சிரமம்
குடல் புற்றுநோயை இருந்தால், ஒருவர் மலம் கழிப்பதில் மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும். நிறைய நோயாளிகள் மலத்தை வெளியேற்ற முடியாமல் அவதிப்படுவார்கள். வயிற்று உப்புசத்துடன், கடுமையான மலச்சிக்கலை அனுபவித்தால், அவர்களுக்கு குடல் புற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்புள்ளது. எனவே உங்களின் குடலியக்கத்தில் நீங்கள் மாற்றங்களைக் கண்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
எதிர்பாராத எடை இழப்பு
நீங்கள் திடீரென்று எதிர்பாராத எடை இழப்பை சந்திந்தால், அதற்கு மகிழ்ச்சியடைய வேண்டாம். ஏனெனில் இது மலக்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். அதுவும் பசியின்மை மற்றும் நாள்பட்ட மலச்சிக்கலுடன், எடை இழப்பை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுக்காமல், உடனே மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.
வாந்தி/குமட்டல்
திடீரென்று எந்த காரணமும் இல்லாமல் உங்களுக்கு வாந்தி அல்லது குமட்டலை அனுபவிக்கிறீர்களா? அப்படியானால் அது குடல் புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறியாக இருக்கலாம். சில சமயங்களில் பெருங்குடல் புற்றுநோயாக இருந்தால் மற்ற அறிகுறிகள் தென்படுவதற்கு முன் இந்த அறிகுறிகள் வெளிப்படும். ஆகவே இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்.
குடல் புற்றுநோய் ஒரு ஆபத்தான நோய். இதற்கு எதிரான சிறந்த பாதுகாப்பு ஆரம்பத்திலேயே இதை கண்டறிந்து சிகிச்சை பெறுவது தான். எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள். மேலும் உண்ணும் உணவுகளில் கவனத்தை செலுத்துங்கள். உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை மேற்கொள்ளுங்கள். மது அருந்துவது மற்றும் புகைப்பிடிப்பது போன்ற கெட்டப் பழக்கங்களை கைவிடுங்கள். இவற்றை ஒருவர் சரியாக பின்பற்றி வந்தால், குடல் புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications



