Latest Updates
-
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க..
Happy Birthday CM Vijay: சொன்னா நம்பமாட்டீங்க.. நம்ம CM விஜய்யின் ஃபிட்னஸ்-க்கு காரணம் இந்த ஒரு உணவு தானாம்..
CM Vijay Fitness Secret: நடிகராக இருந்து தற்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சராகி இருப்பவர் தான் ஜோசப் விஜய் சந்திரசேகர் என்னும் இயற்பெயர் கொண்ட நடிகர் விஜய். இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக பல ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருந்தார். இளைய தளபதி என்று செல்லமாக அழைக்கப்படும் விஜய் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமின்றி, ஒரு பாடகராகவும் இருந்தார். முக்கியமாக இந்தியாவில் அதிக சம்பளத்தை வாங்கும் நடிகர்களுள் ஒருவராவார்.
என்ன தான் நடிகர் விஜய் தமிழில் மட்டும் நடித்திருந்தாலும், இவருக்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். முக்கியமாக இவரது நடனத்திற்கு என்றே தனி ரசிகர்கள் உள்ளனர். வருடத்திற்கு இவரது ஒரு திரைப்படமாவது வெளிவந்துவிடும்.

இப்படிப்பட்ட விஜய் அவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற நோக்கத்தில் நடிப்பை விடுத்து, அரசியலில் முழுமையாக இறங்கி, பணியாற்றி வருகிறார். 52 வயதாகியும் முதலமைச்சர் விஜய் இன்னும் ஃபிட்டாக இருப்பதைக் கண்டு பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்.
ஏனெனில் இவர் அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபடக்கூடியவர் அல்ல. இருப்பினும் இந்த வயதிலும் ஃபிட்டாக எப்படி இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். இந்நிலையில் முதல்வர் விஜய்யின் தாயார் சோபா சந்திரசேகர், நடிகர் விஜய் பற்றிய ஒரு ரகசியத்தை வெளியிட்டார். அதுதான் இவரது ஃபிட்டான உடலுக்கு முக்கிய காரணமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அது வேறொன்றும் இல்லை, முதல்வர் விஜய் இத்தனை வயதாகியும் ஃபிட்டாக இருப்பதற்கு காரணம், தோசை தானாம். விஜய் சிறு வயதில் இருந்தே ஒரு தோசை பிரியராம். இவர் தினமும் காலை 2 தோசை மற்றும் இரவு 2 தோசை சாப்பிட்டு, தினமும் தவறாமல் சிறிது நேரம் உடற்பயிற்சியில் ஈடுபடுவாராம். இதுவே இவரது ஃபிட்னஸிற்கு காரணம் என்று விஜய்யின் தாயார் தெரிவித்துள்ளார். சரி, தோசை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இப்போது காண்போம்.
1. செரிமான மண்டலத்திற்கு நல்லது
தோசை ஒரு சுவையான உணவு மட்டுமின்றி, செரிமான மண்டலத்திற்கு ஏற்ற உணவும் கூட. அரிசி மற்றும் பருப்பை அரைத்து நொதிக்க வைத்து தயாரிக்கப்படும் தோசையை காலை உணவாக உட்கொள்ளும் போது, அது செரிமானத்தை எளிதாக்கும். முக்கியமாக தோசையானது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும்.
2. கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்தது
தோசையில் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள் வளமான அளவில் நிறைந்துள்ன. இது உடலுக்கு வேண்டிய ஆற்றலை வழங்குகின்றன. மேலும் தோசை உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு ஏற்ற உணவு. உடல் எடையைக் குறைக்க கார்போஹைட்ரேட்டுக்களை தவிர்த்தால், உடலில் போதுமான ஆற்றல் இல்லாமல், எப்போதும் சோர்வுடன் இருக்கக்கூடும். சில சமயங்களில் இது மனச்சோர்விற்கும் வழிவகுக்கும். எனவே தான் காலையில் தோசை சாப்பிடுவது நல்லது.
3. புரோட்டீன் நிறைந்தது
தோசையில் புரோட்டீன் போதுமான அளவில் உள்ளன. இந்த புரோட்டீன் உடலுக்கு வேண்டிய அத்தியாவசியமான சத்தாகும். இது மெதுவாக ஆற்றலை வெளியிடுவதால், நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும் மற்றும் இந்த புரோட்டீன் தலைமுடி, எலும்புகள் மற்றும் தசைகளின் வலிமைக்கும் தேவையான சத்தாகும்.
4. கலோரி குறைவு
தோசை ஒரு லைட் ஃபுட் என்பால், இது உடலில் கலோரிகளை அதிகரிக்காது. ஒரு தோசையில் சுமார் 37 கலோரிகள் உள்ளன. எனவே இந்த தோசையுடன் எப்படிப்பட்ட சைடு டிஷ்களை சேர்த்து சாப்பிடலாம். இதனால் இது உடல் எடையில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
5. கொழுப்பு குறைவு
இதய நோய் அல்லது சர்க்கரை நோயைக் கொண்டவர்கள், தாங்கள் உண்ணும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் தோசை ஒரு ஆரோக்கியமான காலை உணவு மற்றும் இதில் கொழுப்புக்கள் இல்லை என்பதால், இதை சாப்பிட யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதிகளவிலான சாச்சுரேட்டட் கொழுப்புக்களை உட்கொண்டால் தான், இதய நோய் மற்றும் பிற நோய்களின் அபாயம் அதிகரிக்கும். ஆனால் தோசையில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் குறைவு என்பதால், இது ஆரோக்கியமான காலை உணவாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
