Latest Updates
-
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா? -
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
வார ராசிபலன் (19 April 2026 - 25 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
வெயிலால் முகம் டல்லாகிடுச்சா? அப்ப 1 ஸ்பூன் அரிசி மாவு வெச்சு தினமும் நைட் இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க அட்சய திருதியை நாளில் என்ன வாங்கணும்-ன்னு சொல்றோம். ..
காலையில் 1 துண்டு பட்டையை பாலில் ஊற வைத்து குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Cinnamon Milk Benefits In Tamil: தற்போது மக்களுக்கு ஆரோக்கியத்தின் மீது அக்கறை அதிகரித்துள்ளது. இதனால் ஒவ்வொருவரும் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல்வேறு நல்ல பழக்கங்களை தினமும் பின்பற்றி வருகிறார்கள். அதில் சிலர் தினமும் காலையில் உடற்பயிற்சிகளை மேற்கொள்வார்கள். இன்னும் சிலர் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆரோக்கியமான பானங்களை குடித்து வருவார்கள்.
உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கும் ஏராளமான பானங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் பட்டை பால். பட்டை ஒரு மருத்துவ குணம் நிறைந்த மசாலாப் பொருள். தினசரி சமையலில் தாளிப்பதற்கு பயன்படுத்தும் இந்த பட்டையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்களைப் பெற பட்டையை நமது உணவில் பலவாறு சேர்க்கலாம்.

அதில் ஒன்று தான் பட்டை பால். இந்த பட்டை பாலை ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ஏராளமான நன்மைகளைப் பெறலாம். இப்போது பட்டை பாலைக் குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்பதையும், அந்த பட்டை பாலை எப்படி தயாரிப்பது என்பதையும் காண்போம்.
உடல் ரிலாக்ஸாக இருக்கும்
வெதுவெதுப்பான பட்டை பாலை ஒருவர் குடிப்பதன் மூலம் உடலினுள் உள்ள அழுத்தம் குறைந்து, உடல் ரிலாக்ஸாக இருக்கும். முக்கியமாக தசைகளில் உள்ள அழுத்தம் குறைந்து, மனநிலை சாந்தமடையும். இதன் மூலம் மன அழுத்தம் தடுக்கப்படும். அதுவும் இந்த பாலை இரவு தூங்கும் முன் குடித்தால், நல்ல தூக்கத்தைப் பெறலாம்.
அழற்சி எதிர்ப்பு பண்புகள்
பட்டையில் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. நாள்பட்ட அழற்சியானது இதய நோய், ஆர்த்ரிடிஸ் போன்ற பல்வேறு நோய்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்த ஆய்வு இன்னும் தேவைப்பட்டாலும், பட்டையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் பாலில் உள்ள சத்துக்களுடன் சேர்த்து உடலினுள் செல்லும் போது, இந்த நிலைமைகளுக்கு எதிராக நல்ல பாதுகாப்பை அளிக்கக்கூடும்.
இரத்த சர்க்கரை கட்டுப்படும்
பட்டை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவக்கூடும் என்றும், இரத்த சர்க்கரையை ஒழுங்காக பராமரிக்க உதவும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. அதுவும் டைப்-2 சர்க்கரை நோயாளிகள் பட்டை பாலைக் குடித்து வந்தால், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும். இருந்தாலும், சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவுப் பழக்கத்தில் மாற்றங்களை செய்யும் முன் மருத்துவரை அணுகுவதே நல்லது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்தது
பட்டையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலைத் தாக்கும் ப்ரீ ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி, உடலுக்கு பாதுகாப்பை அளிக்கின்றன. ப்ரீ ராடிக்கல்கள் உடல் செல்களைத் தாக்கினால், அதன் விளைவாக செல்கள் மோசமாக பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே பட்டை பாலைக் குடித்து, உடலைப் பாதுகாத்துக் கொள்ளங்கள்.
நிம்மதியான தூக்கம்
நீங்கள் தினமும் தூக்கம் வராமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் பட்டை பாலைக் குடித்து வாருங்கள். இதனால் அதன் மணம் மற்றும் சுவை, ஒரு இனிமையான விளைவை ஏற்படுத்தி, உடலுக்கு நல்ல ரிலாக்ஸ் அளித்து, நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவுகின்றன.
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
உங்கள் உடலின் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பதை உணர்ந்தால், நோயெர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த பட்டை பாலைக் குடியுங்கள். இந்த பட்டைப் பாலை தினமும் ஒரு டம்ளர் குடித்து வருவதன் மூலம், அது நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. இதன் மூலம அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படும் அபாயம் குறையிம்.
பட்டை பாலை தயாரிப்பது எப்படி?
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த பட்டை பால் உடலுக்கு ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியவை. இந்த பட்டை பாலை சரியான பக்குவத்தில் செய்து குடிக்கும் போது, சுவை பிரமாதமாக இருக்கும்.
* இந்த பட்டை பால் தயாரிப்பதற்கு ஒரு பாத்திரத்தில் 1 கப் பாலை ஊற்றி குறைவான தீயில் வைத்து சூடேற்ற வேண்டும்.
* பின் அதில் 1/2 டீஸ்பூன் பட்டை தூள் அல்லது 1 துண்டு பட்டையை சேர்த்து, குறைவான தீயில் வைத்து 5-7 நிமிடம் ஊற வைத்து, பின் அதை இறக்க வேண்டும்.
* பின்பு அதில் சுவைக்கேற்ப தேன் சேர்த்து, அத்துடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, பின் வடிகட்டி குடிக்க வேண்டும். இந்த பானத்தை தினமும் குடிப்பதன் மூலம், உடலின் மெட்டபாலிசம் மேம்படுவதோடு, நல்ல நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











