Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
உங்க இதயக் குழாயில் அடைப்பு ஏற்படக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 4 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க..
Healthy Artery Tips: உலகளவில் இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்படி இதயத்தில் பிரச்சனை வர முக்கிய மூலக்காரணமே இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாயில் கொழுப்புக்கள் படிந்து, இரத்த ஓட்டத்தில் இடையூறை ஏற்படுத்துவது தான். ஒருவரது இரத்தக்குழாயில் கொழுப்புக்கள் தேங்குவதற்கு மோசமான உணவுப் பழக்கங்களுடன், ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையும் ஒரு முக்கிய காரணமாகும்.
அதுவும் தற்போதைய பரபரப்பான உலகில் ஆரோக்கியத்தின் மீது அக்கறை இருந்தும், அதிக வேலைப்பளு காரணமாக ஆரோக்கியத்தில் போதுமான கவனத்தை செலுத்த முடியவில்லை. இதன் விளைவாக தற்போது இளம் வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சனையால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது.

இந்த மாரடைப்பு, பக்கவாதம் இரண்டிற்கும் முக்கிய காரணம் இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவது தான். இரத்தக்குழாய் அடைப்பினால் இரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்பட்டு, உறுப்புக்களால் போதுமான ஆக்ஸிஜனை பெற முடியாமல் போகும். இதன் விளைவாக இதயத்தில் மட்டுமின்றி, மூளையிலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு, மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படுகிறது.
ஆனால் இப்படி இரத்தக்குழாய் அடைப்பு ஏற்படும் அபாயத்தை ஒருசில பழக்கங்களை தினமும் தவறாமல் மேற்கொண்டு வருவதன் மூலம் தடுக்கலாம் என்பது தெரியுமா? இதுக்குறித்து இதய நோய் நிபுணரான டாக்டர். சஞ்சய் போஜ்ராஜ் தனது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதயத்தை எப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மற்றும் இதய இரத்தக்குழாய்களை மருந்து மாத்திரைகளின்றி எப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பது பற்றி பகிர்ந்துள்ளார். அது என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இரண்டு தசாப்தங்களாக இதய நோய் நிபுணராக பணியாற்றி வரும் டாக்டர் சஞ்சய், இதய இரத்த குழாயான தமனிகளை நெகிழ்வாகவும், மீள்தன்மையுடனும் வைத்துக் கொள்ள உதவும் 4 விஷயங்கள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.
அதில் அவர் கூறியதாவது, "நமது இதய இரத்த குழாயான தமனிகளை எப்போதும் சட்டென்று ஆரோக்கியமானதாக மாற்ற முடியாது. நாம் ஒவ்வொரு நாளும் என்ன செய்கிறோமோ, எப்படியான பழக்கங்களை கொண்டுள்ளோமோ, அதைப் பொறுத்து தான் அதன் ஆரோக்கியம் உள்ளது." என்று கூறினார். அதோடு தமனிகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய 4 விஷயங்கள் குறித்தும் கூறியுள்ளார். அவை:
1. வலிமை பயிற்சி
* வலிமை பயிற்சியானது இரத்த சர்க்கரையை நிலைப்படுத்துவதோடு, தசைகளை உருவாக்குகிறது.
* அதோடு இந்த பயிற்சி இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
2. ஒமேகா-3-க்கு முன்னுரிமை அளித்தல்
* கொழுப்புக்கள் நிறைந்த மீன், அக்ரூட் பருப்புகள், சியா விதைகள் போன்றவற்றை தினசரி உணவில் சிறிது சேர்த்து வர வேண்டும்.
* இந்த உணவுகள் இரத்தக்குழாயினுள் வீக்கம் மற்றும் பிளேக் உருவாவதைத் தடுக்க உதவுகின்றன.
3. நிலையான தூக்கம்
* இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இது கார்டிசோலைக் குறைக்கும்.
* அதோடு உடலின் உள் அமைப்பை பாதுகாக்கிறது.
4. மன அழுத்தத்தைக் குறைப்பது
* தற்போதைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையின் காரணமாக, தினமும் மூச்சுப் பயிற்சி, தியானம் அல்லது நடைப்பயிற்சியை மேற்கொண்டால், உடல் மற்றும் மன நலம் மேம்படும்.
* அதோடு இப்பயிற்சிகள் நரம்பு மண்டலத்தையும், தமனிகளையும் ஆதரிக்கின்றன.
எனவே நண்பர்களே! உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதெனில், உங்களின் தமனிகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் மேலே கொடுக்கப்பட்டுள்ள 4 பழக்கங்களை உங்களின் தினசரி வழக்கமாக்கி, இதய நோயில் இருந்து விடுபடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications