Latest Updates
-
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்.. -
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? எதுன்னு தெரிஞ்சா நீங்க நம்பவே மாட்டிங்க... -
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி கார குழம்பு வைச்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா? -
அக்டோபர் 09-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
Bone Cancer: உங்க உடலில் இந்த மாற்றங்கள் இருந்தா அது ஆபத்தான எலும்பு புற்றுநோயின் ஆரம்பப்புள்ளியாம்...!
Bone Cancer: உலகளவில் அதிக மரணத்தை ஏற்படுத்தும் நோயாக இரண்டாவது இடத்தில் இருப்பது புற்றுநோய்தான். உலகில் நூற்றுக்கணக்கான புற்றுநோய்கள் இருக்கிறது, ஒவ்வொரு புற்றுநோயும் உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படக்கூடியது. சில புற்றுநோய்கள் மிகவும் பொதுவானதாக இருக்கும்போது, சில புற்றுநோய்கள் மிகவும் அரிதானதாக இருக்கிறது, அதில் முக்கியமான ஒன்றுதான் எலும்பு புற்றுநோய்.
எலும்பு புற்றுநோய், ஒப்பீட்டளவில் அரிதாக இருந்தாலும், மனித உடலில் உள்ள 206 எலும்புகளில் ஏதேனும் ஒன்றை பாதிக்கும் ஒரு தீவிர நிலையாகும். இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது மற்றும் சிகிச்சைக்கு அறிகுறிகளை அறிவது முக்கியம். அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய எலும்பு புற்றுநோயின் 5 பொதுவான அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

எலும்புகளில் தொடர்ந்து வலி
எலும்பு புற்றுநோயின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று தொடர்ச்சியான எலும்பு வலி. நாம் அடிக்கடி அனுபவிக்கும் வலிகளைப் போலல்லாமல், இந்த வலி பெரும்பாலும் மிகவும் கடுமையானதாகவும் மற்றும் இடைவிடாத வலியாகவும் இருக்கும்.
இந்த வலி இரவில் மோசமாகிவிடும் மற்றும் வழக்கமான வலி நிவாரண மாத்திரைகளால் குறையாது. எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 70% நோயாளிகள் குறிப்பிடத்தக்க வலியை முதன்மை அறிகுறியாக தெரிவிக்கின்றனர். புற்றுநோய் செல்கள் எலும்பின் இயல்பான செயல்பாடு மற்றும் கட்டமைப்பை சீர்குலைப்பதால் இந்த வலி ஏற்படுகிறது.
வீக்கம் மற்றும் கட்டிகள்
எலும்பு புற்றுநோயின் மற்றொரு முக்கிய அறிகுறி வீக்கம் மற்றும் கட்டிகள் ஏற்படுவது. வீக்கம் பெரும்பாலும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அருகில் ஏற்படுகிறது மற்றும் ஒரு தெளிவான கட்டியுடன் இந்த வீக்கம் ஏற்படலாம். இந்த வீக்கம் கீல்வாதம் அல்லது காயம் போன்ற பிற நிலைமைகள் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம், அதனால்தான் இது நீண்ட காலமாக தொடர்ந்தால் அதை உடனடியாக சோதிக்க வேண்டியது அவசியம்.
கைகள், கால்கள் அல்லது இடுப்பு எலும்புகள் போன்ற தோலுக்கு அருகில் உள்ள எலும்புகளை புற்றுநோய் பாதிக்கும் போது வீக்கம் பொதுவாக மிகவும் கவனிக்கப்படுகிறது. வீக்கம் உள்ள இடங்களில் சருமம் சூடாகவும், சிவப்பாகவும் தோன்றும்.
எலும்பு முறிவுகள்
எலும்பு புற்றுநோய் எலும்புகளை வலுவிழக்கச் செய்து, எலும்பு முறிவுகளை எளிதில் ஏற்படுத்துகிறது. இந்த எலும்பு முறிவுகள் குறைந்தபட்ச அதிர்ச்சி அல்லது சாதாரண தினசரி நடவடிக்கைகளால் கூட ஏற்படலாம். ஏனென்றால், புற்றுநோய் செல்கள் எலும்பின் கட்டமைப்பை பலவீனமாக்கி, அதை உடையக்கூடியதாக மாற்றுகிறது.
எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பாதிக்கப்பட்ட எலும்புகளின் பலவீனம் காரணமாக எலும்பு முறிவுகள் ஏற்பட அதிக ஆபத்து உள்ளது. வலி மற்றும் வீக்கம் போன்ற பிற அறிகுறிகள் ஏற்கனவே தோன்றிய பிறகு இந்த அறிகுறி அடிக்கடி தோன்றும்.
காய்ச்சல் மற்றும் இரவில் வியர்வை
காய்ச்சல் மற்றும் இரவில் வியர்வை ஏற்படுவது ஆகியவை எலும்பு புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம், இருப்பினும் அவை மிக குறைவாகவே காணப்படுகின்றன. உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட முயற்சிப்பதால் இந்த அறிகுறிகள் ஏற்படுகின்றன, இது வீக்கம் மற்றும் காய்ச்சலுக்கு வழிவகுக்கிறது.
இரவில் வியர்வை ஏற்படுவது, தூக்கம் மற்றும் தினசரி செயல்பாடுகளை மிகவும் சீர்குலைக்கும். காய்ச்சல் மற்றும் இரவு வியர்வை பொதுவாக எலும்பு புற்றுநோயின் மேம்பட்ட நிலைகளுடன் அல்லது நோய் உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவும்போது ஏற்படுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

