Latest Updates
-
தம்பதிகள் இணைந்து புகையிலையை கைவிடுவது எப்படி? உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக இன்று ஒரு உறுதிமொழி எடுங்கள்! -
குருபகவான்-கேது இணைவதால் ஜூன் மாதம் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
குருபெயர்ச்சியால் உருவாகும் ஹன்ஸ் ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
'கோழி தண்டனை' கொடுக்கும் அளவுக்கு வன்முறையா? உங்கள் துணையின் இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்! -
பொரிச்ச முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி முட்டையை வறுத்து பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அலெக்ஸாண்டரின் தளபதியை தோற்கடித்த முதல் சக்திவாய்ந்த இந்திய அரசர் யார் தெரியுமா? -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால்… பணமும் அதிர்ஷ்டமும் தானாக தேடி வரும், தெரியுமா? -
கொங்குநாடு கோழி வறுவல் ரெசிபி - சிக்கனை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
சனி-சுக்கிரன் உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
Cancer Survivors Day: இந்த இந்திய பிரபலங்கள் கேன்சரை எதிர்த்து போராடி இப்போதும் ஆரோக்கியமா இருக்காங்களாம்!
Cancer Survivors Day: உலகில் மாரடைப்புக்குப் பின் அதிகளவு மரணத்தை ஏற்படுத்தும் நோய் என்றால் அது புற்றுநோய்தான். ஒருவர் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய மிகவும் கடினமான போர்களில் ஒன்று புற்றுநோய்க்கு எதிரான போராட்டம். ஏனெனில் புற்றுநோய் உங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை கடுமையாக பலவீனப்படுத்துகிறது.
மருந்துகள் மற்றும் சிகிச்சையின் கடினமான மற்றும் குழப்பமான செயல்முறையை எதிர்த்து போராட பெரும் முயற்சி தேவைப்படுகிறது. சரியான நேரத்தில் புற்றுநோயைக் கண்டறிந்தால் மட்டுமே அதனை எதிர்த்து போராடுவது எளிதாக இருக்கும். புற்றுநோய்க்கு எதிராக போராடுபவர்கள் துணிச்சலான போர்வீரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பல இந்திய பிரபலங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தங்கள் அனுபவங்களை பொதுவெளியில் கூறியுள்ளனர். தங்கள் கதையைப் தெரிந்து கொள்வதன் மூலம், புற்றுநோயுடன் போராடும் அனைவருக்கும் அவர்கள் நம்பிக்கையும், உத்வேகமும் அளித்துள்ளனர்.
மனிஷா கொய்ராலா
மனிஷா கொய்ராலாவுக்கு 2012-ம் ஆண்டு கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு அதிலிருந்து கடுமையான போராட்டத்திற்கு பிறகு வெற்றிகரமாக வெளியே வந்தார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த அவர் 'ஹீல்ட்' என்ற சுயசரிதை மூலம் தனது பயணத்தைப் பற்றித் தெரிவித்தார். கடந்த பத்து வருடங்களாக புற்றுநோயில் இருந்து விடுபட்டார்.
யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்கை இந்தியாவில் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். 2011 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு, கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் இடது நுரையீரலில் புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. அவர் கடுமையான கீமோதெரபி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார் மற்றும் 2012 இல் குணமடைந்தார். அவர் சிகிச்சைக்குப் பிறகு 2012 இல் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மைதானத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் தான் ஒரு போராளியென யுவராஜ் சிங் நிரூபித்தார்.
அனுராக் பாசு
பாலிவுட்டின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான அனுராக் பாசு 2004 ஆம் ஆண்டு, ஒரு வகையான இரத்த புற்றுநோயான அக்யூட் ப்ரோமிலோசைடிக் லுகேமியா நோயால் பாதிக்கப்பட்டார், ஆனால் தனது விடாமுயற்சியால் வெற்றிகரமாக எதிர்த்துப் போராடினார். தன்னுடைய புற்றுநோயை எதிர்த்து போராடி வென்ற பிறகுதான், பாலிவுட்டில் பர்ஃபி உட்பட சில சிறந்த திரைப்படங்களை அவர் இயக்கினார்.
ராகேஷ் ரோஷன்
இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகரான ஹிர்திக் ரோஷனின் தந்தையும் திரைப்பட தயாரிப்பாளருமான ராகேஷ் ரோஷனுக்கு 2018 இல் தொண்டை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த கொடிய நோயை தோற்கடித்தப் பிறகு, அவர் இப்போது வரை ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வருகிறார், சமீபத்தில் தனது 73வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
சஞ்சய் தத்
தற்போது தளபதி விஜயுடன் 'லியோ' படத்தில் நடித்து வரும் சஞ்சய் தத்துக்கு 2020 ஆம் ஆண்டில், நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவர் பல மணி நேரம் கீமோ தெரபி சிகிச்சைகளை கடந்து துபாயில் சிகிச்சை பெற்றார். சஞ்சய் தத் இப்போது புற்று நோயில்லாமல் ஆரோக்கியத்துடன் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சோனாலி பிந்த்ரே
2018 ஆம் ஆண்டில், 1990 களின் பிரபல நடிகை சோனாலி பிந்த்ரே, ஸ்டேஜ் 4 மெட்டாஸ்டேடிக் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். சோனாலி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியது, அவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 30% மட்டுமே இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். சிகிச்சையின் ஒவ்வொரு நிலையிலும் அவர் தன்னைப் பற்றிய படங்களைப் பகிர்ந்து கொண்டார் மற்றும் சிகிச்சை காலம் முழுவதும் மகிழ்ச்சியாக இருந்தார். புற்றுநோய் சிகிச்சை அவரை இன்னும் வலிமையாக்கியது. உலக புற்றுநோய் தினத்தையொட்டி, சோனாலி எழுதினார், "உங்கள் பயணம் கடினமாக இருக்கும், ஆனால் நம்பிக்கையுடன் அதை எதிர்த்துப் போராட முயற்சி செய்யுங்கள்". அவர் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பல்வேறு படங்களை வெளியிடுவதன் மூலம் புற்றுநோயாளிகளை சிகிச்சை பெற ஊக்குவித்து ஊக்கப்படுத்தினார். அவர் இப்போது புற்றுநோயிலிருந்து முழுமையாக வெளிவந்துள்ளார் மற்றும் அவரது மீட்பு காலத்தில் மிகுந்த தைரியம், பொறுமை மற்றும் மன உறுதியை வெளிப்படுத்தியுள்ளார்.
கௌதமி
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையான கௌதமி மார்பகப் புற்றுநோயிலிருந்து வெளிவந்த பிரபலமாவார். அவருக்கு 35 வயதில் மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதில் இருந்து அது அவருக்கு மீண்டு வருவதற்கான நீண்ட பாதையாக உள்ளது. அவர் சமீபத்தில் ஒரு வானொலி நிகழ்ச்சியைத் தொடங்கினார், அங்கு அவர் கேள்வி கேட்பவர்களுடன் பேசுகிறார் மற்றும் வாழ்க்கையை நேருக்கு நேர் எதிர்கொள்ள அவர்களை ஊக்குவிக்கிறார். பல நகரங்களில் தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவி மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிரமாக உதவி செய்யும் லைஃப் அகைன் அறக்கட்டளையை அவர் தொடங்கியுள்ளார். புற்றுநோயாளிகளுக்கு தன்னால் இயன்ற விதத்தில் உதவுவதற்காக பல்வேறு புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று வருகிறார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

