Latest Updates
-
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
2050-ல் ஆண்களிடையே புற்றுநோய் மரணம் 93% அதிகரிக்கும் - ஆய்வில் தகவல்.. ஏன் ஆண்களுக்கு புற்றுநோய் அதிகம் வருது?
Cancer: உலகளவில் இதய நோய்க்கு அடுத்தபடியாக ஏராளமானோரின் இறப்புக்கு காரணமாக இருப்பது புற்றுநோய் தான். புற்றுநோய் என்பது உடலின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் அசாதாரண வளர்ச்சி அடைந்து மனிதனை அழிக்கும் ஒரு கொடிய நிலை ஆகும். இந்த புற்றுநோய் ஒருவருக்கு உடலின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். அந்த புற்றுநோய் வரும் பகுதிக்கு ஏற்ப இதில் பல வகைகள் உள்ளன.
இதில் பெண்களில் மிகவும் பொதுவானவை என்றால் அது மார்பக புற்றுநோய், கருப்பைவாய், கருப்பை, வயிறு, பெருங்குடல் புற்றுநோய் போன்றவைகளாகும். அதேப் போல் ஆண்களை எடுத்துக் கொண்டால் நுரையீரல், வாய், வயிறு, பெருங்குடல் புரோஸ்டேட் புற்றுநோய் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், சிகிச்சை அளிக்க எளிதாக இருக்கும் மற்றும் உயிரிழப்பையும் தடுக்கலாம். அதுவே முற்றிய நிலையில் கண்டறிந்தால், அதிகம் வேதனைப்பட நேரிடும்.
இந்நிலையில் புதிய ஆய்வு ஒன்றில், 2050 ஆம் ஆண்டில் உலகளவில் புற்றுநோய் வழக்குகள் அதிகரிப்பதோடு, புற்றுநோயால் ஆண்கள் அதிகம் இறக்கக்கூடும் என்பதும் தெரிய வந்துள்ளது. அமெரிக்கன் கேன்சர் சொசைட்டியின் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், 2022 மற்றும் 2050 ஆம் ஆண்டிற்கு இடையே உலகளவில் புற்றுநோய் வழக்குகளில் 84 சதவீதம் அதிகரிப்பும், புற்றுநோய் இறப்புகளில் 93 சதவீதம் அதிகரிப்பும் இருக்குமென குறிப்பிடப்பட்டிருந்தது.
அதுவும் இப்படி புற்றுநோய் அதிகரிப்பானது பெரும்பாலும் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்களிடையே காணப்படும் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு உலகளவில் 185 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 30-க்கும் அதிகமான பல்வேறு வகையான புற்றுநோய்களின் தரவுகளை கொண்டு நடத்தப்பட்டது. நிபுணர்களின் கூற்றுப்படி, தற்போதைய காலத்துடன் ஒப்பிடுகையில், 2050 ஆம் ஆண்டில் ஆண்களில் ஆண்டிற்கு சுமார் 5 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் ஏற்படலாம்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் 2050 ஆம் ஆண்டிற்குள் 35 மில்லியனுக்கும் அதிகமான புதிய புற்றுநோய்களை உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளது. இது 2022 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட 20 மில்லியன் புற்றுநோய் நோயாளிகளில் இருந்து 77 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த சர்வேயானது 115 நாடுகளில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களை கொண்டு எடுக்கப்பட்டது.
சரி, ஏன் ஆண்கள் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்?
ஆண்களிடையே புற்றுநோய் அதிகரிப்புக்கு பின் பல காரணிகள் உள்ளன. அதில் ஒன்று சுற்றுச்சூழல் மாசுபாடு முக்கியமான ஒன்றாகும். இது தவிர சிகரெட், ஆல்கஹால் பயன்பாடு மற்றும் உடல் பருமன் போன்றவையும் புற்றுநோயின் அபாயத்திற்கு காரணிகளாக பல்வேறு ஆய்வுகளும் சுட்டிகாட்டியுள்ளன.
சிகரெட்டிற்கும் புற்றுநோய்குகும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்று நிபுணர்கள் பலரும் கூறுகின்றனர். சிகரெட் பிடிப்பதன் மூலம் நுரையீரல் புற்றுநோய், குடல் புற்றுநோய் தவிர, 16 வகையான புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அதுவும் புகைப்பிடிப்பது மூக்கு மற்றும் சைனஸிலும் புற்றுநோயை உண்டாக்கலாம்.
எனவே புகைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதனால் நுரையீரல் புற்றுநோய் தடுக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சிகரெட் பழக்கத்தைக் கைவிடுவதன் மூலம் வேறுபல நன்மைகளும் உடலுக்கு கிடைக்கும். அதில் சீரான இரத்த ஓட்டம், சிறப்பான நுரையீரல் செயல்பாடு, இருமல் மற்றும் மூச்சு விடுவதில் உள்ள சிரமம் குறைவது போன்றவை அடங்கும்.
இந்த சிகரெட் பழக்கத்தை தவிர, பெண்களை விட ஆண்கள் அதிகம் புற்றுநோயால் பாதிக்கப்பட மற்றொரு காரணம் உடலில் ஏதேனும் பிரச்சனையை சந்தித்தால் ஸ்க்ரீனிங், சோதனைகள், சிகிச்சைகள் என்று எதையும் மேற்கொள்ளாமல் இருப்பது.
இப்படி ஆரம்பத்திலேயே ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல் இருப்பதனால், நோய் முற்றிய நிலையில் மருத்துவரை அணுகி,போதுமான சிகிச்சையைப் பெற முடியாமல், இறுதியில் புற்றுநோயால் மரணத்தை சந்திக்க நேரிடுகிறது. எனவே உடலில் ஏதேனும் சிறு பிரச்சனையை சந்தித்தாலும், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே பரிசோதனை மேற்கொள்ளும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications