Latest Updates
-
வீட்டில் செல்வம் பெருகணுமா? வாஸ்து சாஸ்திரம் சொல்லும் இந்த செடிகளை சரியான திசையில் வையுங்கள்! -
சாணக்கிய நீதி படி பெண்களின் கூடவே பிறக்கும் 5 தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
Guru Peyarchi 2026: உச்சம் பெறும் குருவால் இந்த 6 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது.. -
ஓட்ஸ் இட்லியும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 02 ஜூன் 2026: இந்த நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா -
புதன்-சுக்கிரன் ஒரே நாளில் நட்சத்திரத்தை மாற்றுவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
1/4 கப் வேர்க்கடலையும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த ஆந்திரா சட்னியை அரைங்க - இட்லி,தோசைக்கு செமயா இருக்கும் -
குரு-சனி இணைந்து உருவாக்கும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க மூட்ட மூட்டையா பணத்தை அள்ளப்போறாங்க.. -
பிரைட் மாதம் கொண்டாடும் எல்ஜிபிடிகியூ இணையர்களே! பொது இடங்களில் பாதுகாப்பாக இருக்க இந்த 5 விஷயங்களை மறக்காதீங்க! -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க? ஜூன் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம்
உப்பு அதிகமாக சாப்பிடுவது வயிறு புற்றுநோயை உண்டாக்குமா? உண்மை என்னனு தெரிஞ்சிக்கோங்க...!
'உப்பில்லா பண்டம் குப்பையிலே' என்று கூறுவார்கள், ஏனெனில் ஒரு உணவின் சுவையை நிர்ணயிப்பதில் உப்பு மிகவும் முக்கியப்பங்கு வகிக்கிறது. அனைத்து உணவுகளிலும் குறிப்பிட்ட அளவு பயன்படுத்த வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகும். உப்பு எப்படி உணவின் சுவையை முழுமையாக்குகிறதோ அதேபோல அதிகளவு உப்பு உணவில் மட்டுமின்றி ஆரோக்கியத்திலும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இரத்த அழுத்தம், உடலில் எலக்ட்ரோலைட் அளவுகள் மற்றும் பல செயல்பாடுகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க சோடியத்தின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம். உப்பு இரத்த அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமின்றி அதிகளவு உப்பு வயிற்று புற்றுநோயையும் உருவாக்கும் என்பது நம்மில் பலரும் அறியாதது.

வயிற்றுப் புற்றுநோய் இந்தியாவில் அதிக மக்களை பாதித்திருக்கும் ஐந்தாவது பொதுவான புற்றுநோயாகும், இந்த ஆபத்தான நோய் பொதுவாக இறுதி நிலையில்தான் கண்டறியப்படுகிறது. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கிறது. எனவே வயிற்றுப் புற்றுநோய் வராமல் தடுப்பதுதான் நல்லது.
வயிறு புற்றுநோய் ஏற்பட காரணங்கள்
பொதுவாக மக்கள் ஒரு நாளைக்கு சுமார் 4-6 கிராம் உப்பை உட்கொள்கிறார்கள். நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த உப்பு உணவில் இருந்து உட்கொள்ளப்படுகிறது. உலகெங்கிலும் வெவ்வேறு வயதுடைய சுமார் 37,000 பேரிடம் நடத்தப்பட்ட ஒரு பெரிய ஆய்வில், உப்பு உட்கொள்ளலை அதிகரிப்பது வயிற்று புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று கண்டறிந்துள்ளது. இது குறைவான அல்லது சாதாரண அளவு உப்பு உட்கொள்ளும் நபர்களுடன் ஒப்பிடும்போது வயிற்றுப் புற்றுநோயின் அபாயத்தை இரண்டு மடங்கு வரை அதிகரிப்பதாக கூறுகிறது. எலிகள் மீது நடத்தப்பட்ட விலங்கு ஆய்வுகளால் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கருவாடு, உப்பு மீன், உப்பு இறைச்சி, காய்கறிகள் மற்றும் ஊறுகாய் போன்ற உணவுகளில் உப்பு அதிகம் உள்ளது, மேலும் இவற்றின் அதிகப்படியான நுகர்வு தீங்கு விளைவிக்கும். அதிகம் உப்பு சேர்க்கப்பட்ட மற்றொரு உணவுப் பொருள் சோயா சாஸ் ஆகும், இது பொதுவாக ஓரியண்டல் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. உப்பு மட்டுமின்றி இந்த வகை உணவுகளில் மிளகாயும் அதிகமாக உள்ளது, இது ஆபத்தை இருமடங்கு அதிகரிக்கும்.
உப்பு மற்றும் வயிற்று புற்றுநோய்
உப்பு வயிற்றின் உட்புறத்தை சேதப்படுத்துகிறது. இதனால் வயிறு அமிலத்தால் சேதமடைவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இது வயிற்றின் புறணியை குடல் வகை எனப்படும் வகையாக மாற்றலாம். இந்த வகை புறணி புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்பு அதிகம். வயிற்றில் உள்ள ஹெலிகோபாக்டர் பைலோரி என்ற பாக்டீரியா உப்பு நிறைந்த சூழலில் நன்றாக வளர்கிறது. இந்த பாக்டீரியாக்கள் வயிற்று புற்றுநோய்க்கான ஆபத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணியாகும்.
வயிறு புற்றுநோயை எப்படித் தடுக்கலாம்?
அதிகமாக உப்பு உட்கொள்வதைத் தவிர்ப்பதன் மூலம் வயிறு புற்றுநோய் பாதிப்பைத் தவிர்க்கலாம். சமைத்த உணவில் கூடுதல் உப்பு சேர்க்கக் கூடாது. உப்பு சேர்க்கப்பட்ட இறைச்சிகள் மற்றும் ஊறுகாய் போன்ற உப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். பழங்கள் மற்றும் பச்சை இலை காய்கறிகளை உட்கொள்வது வயிறு புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே அவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
