Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
காய்ச்சல் மற்றும் சளி பிடித்த சமயங்களில் பால் குடிக்கலாமா? மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன?
Milk During Fever In Tamil: பொதுவாக சளி மற்றும் காய்ச்சல் பிடித்த சமயங்களில் சில உணவுகளை தவிர்ப்பது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் பார்க்கும் போது பெரும்பாலான மக்களுக்கு சளி மற்றும் காய்ச்சல் சமயங்களில் பாலை குடிக்கலாமா இல்லை வேண்டாமா என்ற சந்தேகம் இருக்கும்.
சளித் தொல்லை இருக்கும் சமயங்களில் பாலை குடித்தால் கூடுதல் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என்று மக்கள் பயப்படுகின்றனர். சிலருக்கு லாக்டோஸ் அழற்சி காரணமாக கூடுதல் உடல் நலப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கூறுகின்றனர். சரி வாங்க இது குறித்து ஆயுர்வேதம் என்ன கூறுகிறது என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

காய்ச்சல் மற்றும் சளிப் பிடித்த சமயங்களில் பாலை குடிக்கலாமா?
பாலும் காய்ச்சலும் எதிரியா?
காய்ச்சலின் போது பால் அருந்த வேண்டுமா என்ற எண்ணம் தொடர்ந்து இருந்து வருகிறது. உண்மையில் பால் ஒரு ஊட்டச்சத்துக்கள் மிக்க உணவாகும். பாலில் நிறைய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. கால்சியம், வைட்டமின் டி மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நம்முடைய எலும்பு ஆரோக்கியம், நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த வாழ்வை பராமரிக்க ஊட்டச்சத்துக்கள் மிகவும் இன்றியமையாதவை. காய்ச்சல் ஒருவருக்கு வரும் போது சில எதிர்வினைகள் உணவுக்கு எதிராக நடைபெறத் தான் செய்கிறது.
காய்ச்சல்
காய்ச்சல் என்பது நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராட உடம்பு காட்டும் எதிர்வினையாகும். இதனால் நீங்கள் அடிக்கடி சோர்வு, பசியின்மை மற்றும் நீர்ப்போக்கு போன்ற அறிகுறிகளை சந்திக்க நேரிடலாம். காய்ச்சலின் போது நம் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ஊட்டச்சத்து பயன்பாடு பாதிப்படைய வாய்ப்பு உள்ளது.
காய்ச்சலின் போது ஊட்டச்சத்து பயன்பாட்டில் ஏற்படும் விளைவு
காய்ச்சலின் போது உடலானது ஒரு உயர்ந்த பாதுகாப்பு நிலைக்கு தள்ளப்படுகிறது. இந்த நிலையில் நோயெதிர்ப்பு செல்கள் ஊடுருவும், வைரஸ்களை எதிர்த்து போராடவும், கூடுதல் நேரம் வேலை செய்கின்ற நிலைக்கு தள்ளப்படுகிறது. இப்பொழுது வளர்சிதை மாற்ற முறைகள் மறுசீரமைப்பு பெறுகின்றன. அதே நேரத்தில் பசி உணர்வு குறைகிறது. காய்ச்சலின் போது நம் உடலானது செரிமானத்தை விட நோயெதிர்ப்பு சக்திக்கு முன்னுரிமை அளிக்கிறது.
பால் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?
பால் உணவு ஒரு கனமான உணவாகும். பாலை செரிக்க நம் உடலுக்கு போதுமான ஆற்றல் தேவைப்படுகிறது. ஆனால் காய்ச்சலில் இருக்கும் போது நம் உடலானது ஆற்றலை நோயெதிர்ப்பு சக்திக்கு பயன்படுத்துகிறது. ஆனால் நீங்கள் பாலை குடிக்கும் போது ஆற்றலானது அதை செரிக்க பயன்படுத்துவதால் நோயெதிர்ப்பு சக்தி குறைகிறது. இது உங்களுக்கு அசெளகரியத்திற்கு வழி வகுக்கும். காய்ச்சல் சமயங்களில் பாலை குடிப்பது சீக்கிரம் செரிக்காமல் போய்விடும்.
நீரிழப்பு ஆபத்து ஏற்படுகிறது
காய்ச்சல், வியர்வை மற்றும் அதிகரித்த சுவாசம் போன்றவை நீரிழப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. பால் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒன்றாக இருந்தாலும் சில நபர்களுக்கு டையூரிடிக் விளைவுகளை உண்டாக்குகிறது. இது காய்ச்சலின் போது நீரிழப்பு அபாயத்தை அதிகரிக்கிறது.
காய்ச்சலின் போது பால் குடிப்பது பற்றி ஆயுர்வேதம் கூறும் கருத்துக்கள்
ஆயுர்வேதம் நம் உடலை தோஷங்கள் வைத்து வரையறுக்கிறது. நம் உடலில் மூன்று விதமான தோஷங்கள் உள்ளன. வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகும். இந்த தோஷங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு கூறுகள் மற்றும் குணங்களைக் கொண்டுள்ளன. காய்ச்சலின் போது தோஷங்கள் சமநிலையற்ற நிலையில் இருக்கும்.
பித்த தோஷம்
காய்ச்சலானது பித்த தோஷத்துடன் தொடர்புடையது. பித்த தோஷம் என்பது நெருப்பு மற்றும் வெப்ப குணங்களை உள்ளடக்கியது. பித்த தோஷம் என்பது செரிமானம், வளர்சிதை மாற்றம் மற்றும் உடலில் மாற்றம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது. எனவே பித்த தோஷம் சமநிலையற்ற நிலையில் இருக்கும் போது காய்ச்சல், வீக்கம் மற்றும் வெப்பம் தொடர்பான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பால் குளிர்ச்சி தன்மை வாய்ந்தது
பால் பித்த தோஷத்தை அமைதிப்படுத்த உதவுகிறது. ஆனால் காய்ச்சலின் போது உடலின் செரிமானத்திற்கு தேவையான வெப்பம் குறையும் போது பால் போன்ற கனமான உணவுகளை சீரணிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இது உடலின் இயற்கையான குணப்படுத்தும் செயல்முறையை தடுக்கிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications