Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
ஒட்ஸ் கஞ்சி குடிச்சா சுகர் குறையுமா? டாக்டர் பிரகாஷ் மூர்த்தி என்ன சொல்றாரு-ன்னு பாருங்க..
Oats For Diabetes: ஓட்ஸ் ஒரு சத்தான முழு தானியம். இதில் தாவர வகை புரோட்டீன், பீட்டா க்ளுக்கன் என்னும் நார்ச்சத்து, மாங்கனீசு, பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து, ஜிங்க், தயமின் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. தற்போது மக்கள் தங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் காலையில் இந்த ஓட்ஸை உட்கொண்டு வருகின்றனர்.
ஓட்ஸ் ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருள் தான். அதுவும் உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு ஓட்ஸ் மிகச்சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் இதில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் பசி எடுக்காமல், வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். இதன் மூலம் கண்ட உணவுகளின் மீதான ஆவல் குறைந்து, உடல் எடையைக் குறைக்க உதவும்.

ஆனால் இந்த ஓட்ஸை சர்க்கரை நோய் உள்ளவர்களும் உட்கொண்டு வருகின்றனர். உண்மையிலேயே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஓட்ஸ் நல்லதா என்ற கேள்வி பலரது மனதில் இருக்கும். இப்படியான கேள்விக்கு தெளிவான பதிலை அளிக்கும் வகையில் நீரிழிவு நிபுணரும், தொற்று நோய்கள் ஆலோசகருமான டாக்டர் பிரகாஷ் மூர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓட்ஸ் கஞ்சி சுகரை குறைக்குமா என்பது குறித்து தெளிவாக விளக்கியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "ஓட்ஸில் கஞ்சி வைத்து குடித்தால், சுகர் நல்லா கண்ட்ரோல் ஆயிடும் என்று யாராவது சொன்னால், உடனே நம்பி குடித்துவிடாதீர்கள். ஏனெனில் இன்ஸ்டன்ட் ஓட்ஸை குடித்தால், இரத்த சர்க்கரை அளவு சல்லுன்னு மேலே ஏறிவிடும்" என்று கூறினார்.
இன்ஸ்டன்ட் ஓட்ஸ் எப்படி தயாரிக்கப்படுகிறது?
"நிறைய பேர் ஓட்ஸை குப்பை என்று சொல்கிறார்களே, உண்மையில் இந்த ஓட்ஸை எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா? ஓட்ஸ் நமது நெல் மணியைப் போன்று ஒரு வெளிபுற லேயருடன் தான் உற்பத்தியாகிறது. அதை ஹஸ்க்/உமி என்று சொல்றோம். இந்த உமியை நீக்கும் செயல்முறையைத் தான் உமி நீக்குதல் என்று சொல்வார்கள்.
இப்படி உமியை நீக்கிய பின், அது அரிசி போன்று ஓட்ஸ் இருக்கும். அதன் பின் அந்த ஓட்ஸின் ஒரு பகுதியை நேர் நேராக வெட்டி ஸ்டீல் கட் ஓட்ஸாகவும், மற்றொரு பகுதியை வேக வைத்து நசுக்கி, இன்ஸ்டன்ட் ஓட்ஸாக விற்கப்படுகிறது. இப்படி ஓட்ஸை வேக வைக்கும் போது, அதில் உள்ள நார்ச்சத்துக்கள் அனைத்தும் குறைந்துவிடுகிறது" என்று கூறினார்.
இன்ஸ்டன்ட் ஓட்ஸ் Vs ஸ்டீல் கட் ஓட்ஸ் - இதில் எந்த ஓட்ஸ் சிறந்தது?
"50 கிராம் இன்ஸ்டன்ட் ஓட்ஸில் உள்ள கிளைசீமிக் லோடு 25-30 ஆகும். 100 கிராம் வாழைப்பழத்தின் கிளைசீமிக் லோடு 11, அதேப் போல் 100 கிராம் மாம்பழத்தின் கிளைசீமிக் லோடு 12-15. வாழைப்பழம், மாம்பழத்தை விட இரண்டு மடங்கு அதிகம்.
வாழைப்பழம், மாம்பழம் போன்றவற்றை சாப்பிட யோசிக்கும் சர்க்கரை நோயாளிகள், இன்ஸ்டன்ட் ஓட்ஸை கஞ்சி வைத்து குடித்தால், எந்த அளவு சுகர் அதிகரிக்கும் என்பது இப்போது புரிந்திருக்கும். ஸ்டீல் கட் ஓட்ஸில் உள்ள கிளைசீமிக் லோடு, இன்ஸ்டன்ட் ஓட்ஸில் இருப்பதை விட பாதி தான் உள்ளது. எனவே ஸ்டீல் கட் ஓட்ஸை வேண்டுமானால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்." என்று கூறினார்.
ஓட்ஸில் வேறு என்ன நன்மை உள்ளது?
"ஓட்ஸில் பீட்டா க்ளுக்கன் என்னும் அருமையான நார்ச்சத்து உள்ளது. இந்த பீட்டா க்ளுக்கன் பைல் அமிலங்களுடன் இணைந்துவிடுவதால், நமது கல்லீரல் இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை உறிஞ்சிவிடுகிறது. இதனால் இரத்தத்தில் உள்ள LDL குறைகிறது, மாரடைப்பு போன்ற இதய பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுகிறது. எனவே இந்த ஓட்ஸானது சர்க்கரை நோயாளிகளை விட கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கும், இதய பிரச்சனை உள்ளவர்களுக்கும் தான் ஒரு அருமையான உணவு.
ஜிம் போகிறவர்கள் பலரும் இந்த ஓட்ஸை புரோட்டீனுக்காக உட்கொள்கிறார்கள். உண்மையில் ஓட்ஸில் எவ்வளவு புரோட்டீன் உள்ளது என்றால், 100 கிராம் ஓட்ஸில் 10 கிராம் புரோட்டீன் உள்ளது. இந்த 10 கிராம் புரோட்டீன் வெறும் 1 1/2 முட்டையிலேயே கிடைத்துவிடும். புரோட்டீன் வேண்டுமானால், முட்டை, சிக்கன் உள்ளது. நார்ச்சத்து வேண்டுமானால், வாழைப்பழமும், கொய்யாப்பழமும் உள்ளது. இப்படியிருக்க கஷ்டப்பட்டு ஏன் ஓட்ஸை சாப்பிடணும்" என்று கூறினார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
