Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
நடிகர் அக்ஷய் குமாருக்கு 3-வது முறையாக கொரோனா.. அப்ப மீண்டும் இந்தியாவில் கோவிட் தலைதூக்கப் போகுதா?
Akshay Kumar Tests Positive For Coivd-19: பாலிவுட் நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான அக்ஷய் குமாருக்கு மூன்றாவது முறையாக கொரோனா தாக்கியுள்ளது. 56 வயதிலும் இன்னும் ஃபிட்டாக உடலைப் பராமரித்து வரும் நடிகர் அக்ஷய் குமார், ஜூலை 12 ஆம் தேதி வெளிவரவிருந்த தனது 'சர்ஃபிரா' என்னும் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் முயற்சியில் மிகவும் பிஸியாக சுற்றிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் அவரது உடலில் வெளிப்பட்ட அறிகுறிகளைத் தொடர்ந்து அவருக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையில் அவருக்கு பாசிட்டிவ் என்று வந்துள்ளது.

நடிகர் அக்ஷய் குமாருக்கு முதல் முறையாக கோவிட் வைரஸ் தாக்கவில்லை, இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன் ஏப்ரல் 2021 ஆம் ஆண்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தர். அதன் பின் 2022 ஆம் ஆண்டில் மீண்டும் கோவிட்-19 வைரஸ் தாக்கியது.
இதனால் அவரால் அப்போது நடந்த கேன்ஸ் விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனது. இந்நிலையில் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மூன்றாவது முறையாக கோவிட்-19 வைரஸ் தாக்கி, திருமண விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.
மீண்டும் இந்தியாவில் கோவிட்-19 தலைத் தூக்கப் போகிறதா?
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கோவிட்-19 வழக்குகள் இன்னும் பதிவாகிக் கொண்டு தான் இருக்கின்றன. அதுவும் தற்போது FLiRT வகை கோவிட் மாறுபாடுகளான KP.2, JN.1.7, மற்றும் பிற KP மற்றும் JN வகை பிறழ்வுகளின் வழக்குகள் பதிவாதி வருகின்றன. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழகத்தின் படி, FLiRT மாறுபாடு என்பது ஸ்பைக் புரோட்டீனில் உள்ள 456, 346, 572 ஆகிய நிலைகளில் ஏற்படும் மாற்றங்களைக் குறிக்கின்றன.
இந்த வகை மாறுபாடு முந்தைய வகை கோவிட் மாறுபாடுகளை விட வேறுபட்டது. இதுவரை இந்தியாவில் இந்த வகை மாறுபாட்டின் வழக்குகள் அதிகம் பதிவாகியிருப்பது தெரியாவிட்டாலும், நடிகர் அக்ஷய் குமாருக்கு கோவிட் தொற்று ஏற்பட்ட பின், எங்கு மீண்டும் இந்தியாவில் கோவிட்-19 தலைத் தூக்கிவிடுமோ என்ற அச்சம் பலரது மனதில் எழுந்திருக்கும்.
கவனிக்க வேண்டிய கோவிட்-19 பொதுவான அறிகுறிகள்
கோவிட்-19 அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபடும். அதுவும் தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், நிச்சயம் பலரும் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். முக்கியமாக இவை அனைத்தும் கொரோனா அறிகுறிகளைப் போன்றே இருப்பதால், பலர் கண்டுகொள்ளாமல் இருக்க வாய்ப்புள்ளது. இப்போது எந்த அறிகுறிகளை எல்லாம் ஒருவர் சந்தித்தால், அது கோவிட்-19ன் அறிகுறிகள் என்பதைக் காண்போம்.
* காய்ச்சல்
* தொடர்ச்சியான இருமல். அதோடு தொண்டை புண் மற்றும் தொண்டை கரகரப்பு
* மூசசு விடுவதில் சிரமம் அல்லது மூச்சுத்திணறல்
* மிகுந்த உடல் சோர்வு
* தலை மற்றும் உடல் வலி
* சுவை அல்லது மணம் இழப்பு
* தலைவலி
* மூக்கு ஒழுகல் அல்லது மூக்கடைப்பு
* குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, அடிவயிற்று வலி
உடனே மருத்துவ உதவி பெற வேண்டியதைக் குறிக்கும் அறிகுறிகள்
கோவிட்-19 தொற்றின் பெரும்பாலான வழக்குகள் மிதமானது முதல் தீவிரமான வரையிலான அறிகுறிகள் உள்ளன. இப்போது எந்த அறிகுறிகளை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்பதைக் காண்போம்.
* மூச்சு விட முடியாமல் திணறுவது
* நெஞ்சு வலி அல்லது நெஞ்சு பகுதியில் அழுத்தம்
* மனக்குழப்பம்
* ஆக்ஸிஜன் குறைபாட்டால் உதடு அல்லது முகம் நீல நிறத்தில் காணப்படுவது
தடுக்கும் வழிகள்
கோவிட்-19 தொற்றைத் தடுக்கவும், அதன் அபாயத்தைக் குறைக்கவும் ஒவ்வொருவரும் பின்வரும் விஷயங்களை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். அவை:
* பொது இடங்களுக்கு செல்லும் போது அல்லது கூட்ட நெரிசல் நிறைந்த பகுதிகளுக்கு செல்லும் போது தவறாமல் மாஸ்க்குகளை அணியுங்கள்.
* எப்போதும் மற்றவர்களிடம் இருந்து, அதாவது உங்கள் வீட்டில் உள்ளவர்களைத் தவிர, மற்றவர்களிடம் குறைந்தது 6 அடி தூர இடைவெளியைக் கடைப்பிடியுங்கள்.
* எப்போது வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததாலும் கைகளை சோப்பு பயன்படுத்தி கழுவுங்கள். ஒருவேளை சோப்பு கிடைக்காவிட்டால், சானிடைசரைப் பயன்படுத்துங்கள்.
* அதிக கூட்டம் நிறைந்த இடங்களுக்கு செல்வதை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. இதன் மூலம் வைரஸ் பரவலைத் தடுக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications