Latest Updates
-
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
சுய இன்பத்திற்கு பிறகு இரத்தப்போக்கு ஏற்படுமா? அப்படி இரத்தம் வந்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?
ஆணோ, பெண்ணோ சுய இன்பம் செய்வது தவறான செயல் அல்ல. அதை சரியான பாதுகாப்பு இல்லாமல் அபாயகரமான முறையில் செய்வதே தவறு. ஏனெனில், அது உங்கள் ஆரோக்கியத்தை அல்லது அந்தரங்க பகுதியை பெருமளவில் பாதிக்கலாம்.
சுய இன்பம் குறித்த விவாதங்கள் மற்றும் கருத்துக்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. தங்களுடைய உணர்வுகளையும் விருப்பங்களையும் தேவைகளை பற்றியும் தெரிந்துகொள்ள ஒவ்வொருவரும் சுயஇன்பம் செய்கிறார்கள். தங்கள் பாலியல் வாழ்க்கையில் பெறாத இன்பத்தை சுயஇன்பத்தின் மூலம் பலர் பெறுகிறார்கள்.

எதுவும் அளவோடு இருப்பதுதான் நல்லது. 'அளவுக்கு மீறினால், அமிர்தமும் நஞ்சு' என்பதற்கு ஏற்ப சுயஇன்பத்தையும் அளவோடுதான் செய்ய வேண்டும். இல்லையெனில், அது உங்கள் பாலியல் வாழ்க்கையையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
பல இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கள் உடலை ஆராய்வதற்காக சுயஇன்பம் செய்கிறார்கள் என்ற உண்மையை நாம் புறக்கணிக்க முடியாது. அவர்கள் அதைப் பற்றி அரிதாகவே வெளியில் பேசலாம் என்றாலும், சுயஇன்பம் உங்களை மருத்துமனைக்கு அழைத்துச் செல்லும் சூழ்நிலைகளையும் உருவாக்கலாம். அதிர்ச்சி அடைய வேண்டாம்!
சுயஇன்பத்திற்குப் பிறகு இரத்தப்போக்கு ஏற்படுவதை பற்றிதான் நாங்கள் கூறுகிறோம். இந்த இரத்தப்போக்கு உங்களுக்கு அதிக பயத்தை ஏற்படுத்தலாம். ஆனால், நீங்கள் ஒரு மருத்துவரை அணுகி சரியான வழியில் சிகிசிச்சை மேற்கொள்ள வேண்டும்.
சுயஇன்பம் என்பது பாலியல் தூண்டுதலுக்காக அல்லது பிற பாலியல் இன்பத்திற்காக ஒருவரின் சொந்த அந்தரங்க பகுதிகளில் பாலியல் தூண்டுதலை உள்ளடக்குகிறது. ஒருவரின் விரல்கள் அல்லது செக்ஸ் பொம்மைகள் உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்துவதையும் உள்ளடக்கியிருக்கலாம்.
சுயஇன்பத்திற்குப் பிறகு இரத்தப்போக்கு உங்களுக்கு ஏற்பட்டிருந்தால், வருந்துவதை விட பாதுகாப்பாக இருப்பது நல்லது என்பதை அறிந்து கொள்ளுங்கள். இதைப் பற்றி வெளியில் கூறினால், என்ன நினைப்பார்கள் என்று பயம் கொள்வதைவிட ஒரு மருத்துவரை சந்திப்பது சிறந்தது.
சில பெண்கள் மிகவும் விழிப்புடன் இருப்பதால், சுயஇன்பம் குறித்து சந்தேகம் இருக்கும்போது அவர்கள் மருத்துவர்களிடம் ஆலோசனை செய்கிறார்கள். சுயஇன்பம் தொடர்பான பல கேள்விகள் பெண்களிடம் எப்போதும் இருக்கும். ஏனெனில், இன்னும் பெரும்பாலான பெண்கள் சுய இன்பம் ஒரு பாவம் என்று நம்புகிறார்கள். சுய இன்பம் பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
இருப்பினும், பெண்கள் சுயஇன்பம் செய்வது பாதுகாப்பானதா? சுயஇன்பம் செய்வதற்கான சிறந்த நடைமுறைகள் என்ன? பயன்படுத்துவதற்கான சரியான தயாரிப்புகள் மற்றும் சுயஇன்பத்தின் அதிர்வெண் போன்றவற்றை அறிய அவர்கள் விரும்பலாம். இங்கே, சுயஇன்பத்திற்குப் பிறகு இரத்தப்போக்கு ஏற்படுவதை பற்றிய தகவல்களை உங்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.
சுயஇன்பத்திற்குப் பிறகு இரத்தப்போக்குக்கான காரணங்கள்
- பிறப்புறுப்புக்குள் கீறல் ஏற்படுவதால் இரத்தம் வெளியேறலாம்
- உராய்வு, குறிப்பாக வறண்ட தன்மை மற்றும் பொருட்களின் பயன்பாடு இருந்தால் இரத்தம் வெளியேறலாம்
- யோனியை மென்மையாக வைத்திருப்பது மற்றும் போதுமான உயவு பயன்படுத்தப்படுவது முக்கியம்.
- யோனி வறட்சி இரத்தப்போக்கை ஏற்படுத்தலாம்
- மாதவிடாய்க்கு இடையில் தற்செயலான புள்ளிகள் மற்றும் பிறப்புறுப்பு மற்றும் கருப்பை வாயில் தொற்று ஆகியவற்றாலும் இரத்தப்போக்கு ஏற்படலாம்.
சுயஇன்பத்திற்குப் பிறகு இரத்தம் வந்தால் என்ன செய்வது?
சுய இன்பத்திற்கு பிறகு இரத்தம் வெளியேறினால், சங்கடமோ வெட்கமோ பட வேண்டாம். உடனே மருத்துவரை அணுக வேண்டும். இரத்தப்போக்கு அதிகமாக இருந்தால், நிற்கவில்லை என்றால், வலி அல்லது துர்நாற்றம் வீசுதல் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருந்தால், உடனே மகளிர் மருத்துவ நிபுணரைத் தொடர்பு கொள்ள வேண்டியது மிக முக்கியம். இதனால், இரத்தக் கசிவைத் தடுக்கவும், தொற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதுகாப்பான சுயஇன்பம் பற்றிய விழிப்புணர்வு
- சுயஇன்பத்திற்கு முன் கைகள் அல்லது பாலியல் பொம்மைகளை கழுவுதல்
- ஆணுறை அல்லது கையுறைகளைப் பயன்படுத்துதல்
- நகங்களை வெட்டுதல் அல்லது கூர்மையான செக்ஸ் பொம்மைகளைப் பயன்படுத்தாமல் இருப்பது
- உராய்வுகளைத் தவிர்க்க லூப்ரிகண்டுகளைப் பயன்படுத்த வேண்டும்
- பாதுகாப்பான உடலுறவு கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
எனவே பெண்களே! சுயஇன்பத்திற்குப் பிறகு இரத்தப்போக்கு மற்றும் பிற சிக்கல்களைத் தவிர்க்க சரியான விழிப்புணர்வுடன் சுய இன்பத்தில் ஈடுபடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

