Latest Updates
-
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா
தினமும் 10 கருப்பு உலர்திராட்சையை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Benefits Of Black Raisins In Tamil: காலையில் நாம் எழுந்ததும் சாப்பிடும் முதல் உணவுப் பொருள் நமது உடல் ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே காலையில் எழுந்ததும் நாம் சாப்பிடும் உணவுகளில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமென்பதற்காக இன்றைய தலைமுறையினர் பலர் பல்வேறு உணவுப் பொருட்களை காலையில் எழுந்ததும் உட்கொண்டு வருகிறார்கள்.
அதில் பெரும்பாலானோர் உட்கொள்வது பாதாமாகவே இருக்கும். ஆனால் உலர் திராட்சையையும் காலையில் எழுந்ததும் சாப்பிடுவது நல்லது என்பது தெரியுமா? அதுவும் கருப்பு நிற உலர் திராட்சையை உட்கொள்வது இன்னமும் சிறந்தது.

ஏனெனில் உலர் திராட்சையில் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும் இந்த உலர் திராட்சையை காலை உணவின் போது உட்கொண்டு வந்தால், அதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து காரணமாக நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருக்க உதவி புரியும்.
எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு இது ஒரு சிறந்த உணவுப் பொருள். சரி, இந்த கருப்பு நிற உலர் திராட்சையை ஒருவர் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொண்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
1. செரிமானத்திற்கு நல்லது
கருப்பு நிற உலர் திராட்சை செரிமானத்திற்கும், குடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்பது தெரியுமா? ஏனெனில் இவற்றில் டயட்டரி நார்ச்சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளன. இதன் காரணமாக மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மேலும் கருப்பு உலர் திராட்சையை காலையில் சாப்பிடும் போது, அதில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்து நீண்ட நேரம் பசி ஏற்படாமல் வயிற்றை நிரம்பியிருக்க செய்கிறது.
2. நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்
கருப்பு நிற உலர் திராட்சையில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளன. இந்த வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கும், வலிமைக்கும் இன்றியமையாததாகும். எனவே இந்த கருப்பு நிற உலர் திராட்சையை காலையில் உட்கொள்ளும் போது, நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடைந்து, அடிக்கடி நோய்வாய்ப்படுவது தடுக்கப்படும்.
3. இதயத்திற்கு நல்லது
கருப்பு நிற உலர் திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. இந்த உலர் திராட்சையை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில் இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுவதோடு, இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. எனவே இதயம் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், 10 உலர்திராட்சையை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.
4. ஆற்றல் அதிகரிக்கும்
உடலின் ஆற்றல் அளவு அதிகரிக்க வேண்டுமானால், அதற்கு இரும்புச்சத்து அவசியம். இந்த இரும்புச்சத்தானது கருப்பு உலர் திராட்சையில் அதிகமாக உள்ளன. இந்த கருப்பு உலர் திராட்சையை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது, அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் உடலால் திறம்பட உறஞ்சப்படும். மேலும் உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள் அல்லது இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், தினமும் காலையில் உலர் திராட்சையை உட்கொண்டால், மாத்திரைகளை போட வேண்டிய அவசியம் ஏற்படலாம்.
5. எலும்பு ஆரோக்கியம் மேம்படும்
எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மிகவும் இன்றியமையாதது. கருப்பு நிற உலர் திராட்சையில் இந்த இரும்புச்சத்து ஏராளமான அளவில் உள்ளன. எனவே எலும்பு தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பவர்கள், எலும்புகளை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்துக் கொள்ள இந்த கருப்பு உலர் திராட்சையை உட்கொள்வது நல்லது. குறிப்பாக வயதானவர்கள் இவற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications