Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
அடிக்கடி பெயின் கில்லர் எடுப்பீங்களா? அப்ப உங்க கிட்னில இந்த பிரச்சனை வர வாய்ப்பிருக்கு..
Painkillers And Kidney Damage: தற்போது பரபரப்பான வாழ்க்கை முறையினால் நிறைய பேர் தலைவலி, கால் வலி, உடல் வலியால் தினந்தோறும் அவதிப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பலர் தங்கள் உடலின் எந்த பகுதியில் வலி ஏற்பட்டாலும், உடனே ஒரு பெயின் கில்லர் எனும் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி போட்டுக் கொள்கின்றனர்.
இந்த மாத்திரைகள் வலியில் இருந்து விரைவான நிவாரணத்தை அளிப்பதால், பலர் இந்த வகை மாத்திரைகளை எங்கு சென்றாலும் தங்கள் கைகளில் வைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இப்படி தினமும் இந்த வகையான மாத்திரைகளை ஒருவர் எடுக்கும் போது, அதன் விளைவாக பல்வேறு பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக வலி நிவாரணி மாத்திரைகளை சிறுநீரகங்களை மிகவும் மோசமாக பாதிக்கும் என்பது தெரியுமா?

அதுவும் ஏற்கனவே சிறுநீரக பிரச்சனைகளை கொண்டிருப்பவர்கள் இந்த வலி நிவாரணிகளை எடுக்கும் போது, சிறுநீரக பாதிப்பு இன்னும் மோசமடைவதற்கான வாய்ப்புள்ளது. எனவே உடலில் எந்த வலியை சந்தித்தாலும், அதற்கு சுயமாக மருந்து எடுத்துக் கொள்வது என்பது நல்லதல்ல.
இல்லாவிட்டால், அதன் விளைவாக மோசமான சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது. ஆகவே அடிக்கடி உடலில் ஏதேனும் வலியை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி, அதற்கான காரணத்தை கண்டறிந்து, சரியான முறையில் சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.
நாம் எடுக்கும் பெரும்பாலான வலி நிவாரணி மாத்திரைகளிலும் இப்யூபுரூஃபன், டைக்ளோஃபெனாக், அசெக்ளோஃபெனாக் போன்ற NSAIDகள் (ஸ்டீராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள்) உள்ளன. இவை சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளன. எனவே எந்த ஒரு வலி நிவாரண மாத்திரைகளை எடுப்பதாக இருந்தாலும், மருத்துவரின் அனுமதியுடன் மட்டுமே எடுக்க வேண்டும்.
வலி நிவாரணி மாத்திரைகளால் ஏற்படும் சிறுநீரக பாதிப்பிற்கு ஆரம்ப கட்டத்தில் எந்த ஒரு அறிகுறியும் தெரியாது. அதை இரத்தம் மற்றும் சிறுநீரக பரிசோதனைகளின் மூலம் மட்டுமே கண்டறிய முடியும். எனவே நீங்கள் இதுவரை மருத்துவரிடம் கேட்காமல் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்து வந்தால், உடனே அதை நிறுத்திவிட்டு, மருத்துவரை அணுகி, அவர் அளிக்கும் மருந்துகளை எடுங்கள்.
வலி நிவாரணி மாத்திரைகளால் சிறுநீரக பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான சில வழிகள்:
* எந்த ஒரு வலிக்கும் வலி நிவாரணி மாத்திரைகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
* எத்தனை வலி நிவாரணி மாத்திரைகளை எடுக்கிறீர்கள் என்பதை நினைவில் கொண்டு, அதைப் பற்றி மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
* இந்த வகை மருந்துகளால் நீரிழப்பு ஏற்படாமல் இருக்க, நிறைய நீரைக் குடிக்க வேண்டும்.
* முக்கியமாக எந்த ஒரு வலி நிவாரணி மாத்திரைகளையும் மருத்துவரின் அறிவுறுத்தல்களின் பேரில் மட்டுமே எடுக்க வேண்டும்.
எனவே நீங்கள் அடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளை எடுப்பவராயின், அவ்வப்போது சிறுநீரக செயல்பாடுகளை பரிசோதனை செய்து பார்க்க வேண்டியது அவசியம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications