Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
காய்ச்சலுக்கு எடுக்கும் இந்த ஆன்டி-பயாடிக் மரணத்தையும் ஏற்படுத்தலாமாம்.. எச்சரிக்கும் சுகாதார அமைச்சகம்!
Antibiotic Tetracycline: பாக்டீரியல் தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ஒரு வகையான மருந்து தான் ஆன்டி-பாக்டீரியல் மருந்துகள். நீங்கள் இதுவரை உடலில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு ஆன்டி-பாக்டீரியல் மருந்துகளை நம்புபவராயின், இச்செய்தி உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.
ஏனெனில் சமீபத்தில் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், டைபஸ், டிக் காய்ச்சல், சுவாச நோய்த்தொற்றுகள், காலரா மற்றும் மலேரியா போன்றவற்றுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் டெட்ராசைக்ளின் என்ற ஆன்டி-பயாடிக் மருந்து மிகவும் தீவிரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இந்த அறிக்கையில் இந்திய மருந்தக ஆணையம் டெட்ராசைக்ளின் என்ற ஆன்டி-பயாடிக் மருந்தை பயன்படுத்தும் போது மருத்துவர்களும், நோயாளிகளும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அதுவும் இந்த மருந்தால் சந்திக்கும் சரும அழற்சி போன்ற பக்கவிளைவுகளுக்கு சிகிச்சை அளிக்காவிட்டால், பின் அதுவே உயிரைப் பறித்துவிடும்.
இந்திய பார்மகோவிஜிலன்ஸ் புரோகிராம் தரவுதளத்தில் இருந்து மருந்துகளின் பாதமான விளைவுகள் பற்றிய ஐபிசியின் பகுப்பாய்வு ஒரு சிக்கலான போக்கைக் குறிக்கிறது. அதுவும் டெட்ராசைக்ளின் மருந்து மக்களுக்கு கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்துவது தெரிய வந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பால், மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளுக்கு டெட்ராசைக்ளின் மருந்தை பரிந்துரைத்த பின், நோயாளிகள் ஏதேனும் பக்கவிளைவுகளை சந்தித்தால், அதை உடனடியாக இந்திய மருந்தக ஆணையத்திடம் புகாரளிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
ஆன்டி-பயாடிக் டெட்ராசைக்ளின் பக்கவிளைவுகள்
டெட்ராசைக்ளின் பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க பெரிதும் உதவி புரிந்தாலும், அதில் ஆபத்துக்கள் இல்லாமல் இல்லை. இந்த மருந்தானது பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுத்து, நிமோனியா, சுவாசக்குழாய் நோய்த்தொற்றக்கள் போன்றவற்றை திறம்படி எதிர்த்து போராட உதவுகிறது. இருப்பினும், அதிலும் பக்கவிளைவுகள் உள்ளன. அந்த பக்கவிளைவுகள் பின்வருமாறு:
* வாந்தி
* குமட்டல்
* நாக்கில் வீக்கம்
* வயிற்றுப்போக்கு
* தொண்டைப்பு அல்லது எரிச்சல்
* மலக்குடல் அல்லது பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு
இந்த பக்கவிளைவுகள் லேசானதாக இருந்தாலும், தொடர்ச்சியாக சந்தித்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டியது அவசியம். டெட்ராசைக்ளின் மருந்தின் கடுமையான பக்கவிளைவுகள் பின்வருமாறு:
* சுவாசிப்பதில் சிரமம்
* தலைவலி
* முட்டு வலி அல்லது வீக்கம்
* பார்வை இழப்பு அல்லது மங்கலான பார்வை
* படை அல்லது சொறி
* நெஞ்சு வலி
* அசாதாரண இரத்தப்போக்கு
* குளிர் காய்ச்சல்
* இரத்தம் கலந்த மலம் மற்றும் வயிற்றுபிடிப்புகள்
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை சந்தித்தால், சிறிதும் அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுகி, அவரிடம் தெரிவியுங்கள். இனிமேல் எந்த ஒரு ஆன்டி-பயாடிக் மருந்தையும் மருத்துவரின் அனுமதியின்றி பயன்படுத்தாதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Image Courtesy: Freepik
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications