Latest Updates
-
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்கள பணப் பிரச்சனை பாடாய் படுத்தப்போகுது! -
அக்டோபர் 11-ல் உருவாகும் வைதிருதி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
கொங்கு ஸ்பெஷல் பழ கச்சாயம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாப்பிட புசுபுசுனு அருமையா இருக்கும் -
லன்ச் பாக்ஸ்-க்கு ஒருடைம் இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்.. -
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? எதுன்னு தெரிஞ்சா நீங்க நம்பவே மாட்டிங்க... -
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி கார குழம்பு வைச்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா?
காலை நேரத்தில் இந்த உணவுகளில் ஒன்றை சாப்பிடுவது யூரிக் அமில அளவை குறைத்து உங்க சிறுநீரகத்தை பாதுகாக்குமாம்...!
உங்கள் இரத்தத்தில் அதிக யூரிக் அமிலம் இருப்பது கீல்வாதம் முதல் சிறுநீரக கற்கள் வரை பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். உணவு மற்றும் பானங்களில் உள்ள பியூரின்களை உடல் உடைக்கும்போது உடலில் யூரிக் அமிலம் உருவாகிறது. சிறுநீரகங்கள் பொதுவாக அதை வெளியேற்றும், ஆனால் சில சமயம் அதிக அளவு இரத்தத்தில் தங்கி ஹைப்பர்யூரிசிமியா எனப்படும் நிலையை ஏற்படுத்தும்.
அதிகப்படியான யூரிக் அமிலம் படிகங்களை உருவாக்கி உங்கள் மூட்டுகளில் கீல்வாதத்தை ஏற்படுத்தும். இரவில் உங்கள் மூட்டுகளில் கடுமையான வலி ஏற்படுவது, குறிப்பாக பெருவிரலில் ஏற்படுவது கீல்வாதத்தின் அறிகுறியாகும்.

சிறிதளவு அதிக யூரிக் அமிலங்கள் எந்த அறிகுறிகளையும் உருவாக்காது, ஆனால் காலப்போக்கில் இந்த அமில படிகங்கள் உடலில் வலி மற்றும் பிற சேதங்களை ஏற்படுத்தும். ஹைப்பர்யூரிசிமியா மூட்டுகள், எலும்புகள், தசைநாண்கள் மற்றும் தசைநார்கள் ஆகியவற்றை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல், இதய நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக நோய் மற்றும் கொழுப்பு கல்லீரல் நோய் போன்ற பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படவும் காரணமாகிறது.
அதிக நீர் உட்கொள்ளல் மற்றும் உணவில் சில மாற்றங்களைச் செய்வது போன்ற எளிய வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலம் அதிக யூரிக் அமிலத்தை திறம்பட நிர்வகிக்கலாம். உடலில் அதிக யூரிக் அமில அளவைத் தடுக்க ஒட்டுமொத்த ஆரோக்கியமான வாழ்க்கை முறை முக்கியமானது.
உடற்பயிற்சி, சத்தான உணவு மற்றும் போதுமான தூக்கம் போன்ற தினசரி நடைமுறைகள் உங்கள் உடலில் வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவுவதோடு, அதிக அளவு யூரிக் அமிலம் உங்கள் உடலில் உருவாகுவதைத் தடுக்கவும் உதவும். யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும் 7 மூலிகைகளை நிபுணர்கள் பரிந்துரைத்து உள்ளனர். இருப்பினும், எந்தவொரு வைத்தியத்தையும் முயற்சிக்கும் முன் உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.
செம்பருத்தி
உலர்ந்த செம்பருத்தி அல்லது செம்பருத்தி தேநீர் சிறுநீர் மூலம் யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவுகிறது மற்றும் யூரிக் அமில அளவைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். குடிப்பதற்கு முன் 5 நிமிடங்கள் சூடான நீரில் மூழ்க வைக்கவும்.
டேன்டேலியன்
டேன்டேலியன் டீயில் யூரிக் அமில அளவைக் குறைக்க நீங்கள் காலையில் சாப்பிடக்கூடிய மற்றொரு தேநீராகும். மளிகைக் கடைகளில் காணப்படும் டேன்டேலியன் டீ அல்லது டேன்டேலியன் சாறு யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
செலரி
பல நூற்றாண்டுகளாக நம்பத்தகுந்தமூலிகையாக இருக்கும் செலரி பல்வேறு ஆக்ஸிஜனேற்றிகளால் நிறைந்துள்ளது மற்றும் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. செலரியில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கீல்வாதத்துடன் தொடர்புடைய வீக்கத்தைக் குறைக்கவும் உதவும்.
இஞ்சி
இஞ்சி தேநீர் அல்லது இஞ்சி சேர்க்கப்பட்டு சமைக்கும் உணவும் வீக்கத்தைக் குறைக்க உதவும். ஒரு டீஸ்பூன் துருவிய இஞ்சியை வேகவைத்து, அதில் ஒரு துணியை நனைத்து, அது குளிர்ந்தவுடன் பாதிக்கப்பட்ட மூட்டுகளில் தடவவும். நல்ல பலன்களுக்கு தினமும் 30 நிமிடம் இதனை செய்ய வேண்டும்.
வாழைப்பழம்
தினமும் ஒரு வாழைப்பழம் யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். உறுப்புகள் சரியாகச் செயல்பட போதுமான பொட்டாசியம் அவற்றில் உள்ளது. மேலும், இதில் உள்ள நார்ச்சத்து உடலில் இருந்து யூரிக் அமிலத்தை அகற்ற உதவும்.
மெக்னீசியம்
மெக்னீசியத்தை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது எதிர்காலத்தில் யூரிக் அமிலத் தன்மையைக் குறைக்க உதவும். பாதாம், முந்திரி போன்ற பருப்புகள் மற்றும் கீரை மற்றும் பூசணி போன்ற காய்கறிகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

