Latest Updates
-
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
கடகத்தில் குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
உங்களுக்கு மரபணு குறைபாடுகள் இருக்கா? அப்ப இந்த உணவுகளை மறக்காம சாப்பிடுங்க...!
நம் உடலில் இருக்கும் டி. என். ஏ மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதில் பிறழ்வு ஏற்படும் போது மனிதன் பல்வேறு விதமான நோய்களுக்கு உள்ளாகிறான். சிலருக்கு இந்த டி. என். ஏ சேதம் பரம்பரை ரீதியாக வர வாய்ப்பு உள்ளது. இந்த மரபணு குறைப்பாட்டால் நிறைய நோய்க் குறைபாடு ஏற்படுகிறது.
சில சமயங்களில் இந்த மரபணு குறைபாடு சில சுற்றுப்புற காரணிகளாலும் ஏற்படலாம். புற ஊதாக் கதிர்வீச்சு போன்ற சுற்றுப்புற காரணிகள் கூட இந்த மரபணு குறைப்பாட்டை உண்டாக்குகிறது. அதிகப்படியான புற ஊதாக் கதிர்வீச்சால் டி. என். ஏ கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்படுகிறது. இதனால் கடுமையான பிறழ்வுகள் ஏற்படுகின்றன.

சிலருக்கு இந்த மரபணு பிறழ்வால் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கிறது. எனவே இது போன்ற டி. என். ஏ சேதத்தை சரி செய்ய ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த மாதிரியான மரபணு குறைப்பாட்டை போக்கும் உணவுகளைப் பற்றி இக்கட்டுரையில் நாம் தெரிந்துகொள்வோம்.
மரபணு குறைப்பாட்டை சரி செய்யும் பழங்கள்
ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்த பெர்ரி வகைகள்
ப்ளு பெர்ரி, ஸ்ட்ரா பெர்ரி மற்றும் ராஸ் பெர்ரி போன்ற பெர்ரி வகைகளை நாம் எடுத்துக் கொண்டு வரலாம். இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்து காணப்படுகிறது. இது தீங்கு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கலில் இருந்து நம்மை காக்கிறது. எனவே ஒரு நாளைக்கு ஒரு பழம் என இந்த பெர்ரி வகைகளை சாப்பிட்டு கொண்டு வரலாம். இது டிஎன்ஏ பழுது பார்க்கும் செயல்முறையை செய்கிறது.
வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற வைட்டமின் சி அடங்கிய சிட்ரஸ் பழங்களை எடுத்துக் கொண்டு வரலாம். வைட்டமின் சி யில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இது ப்ரீ ரேடிக்கலை எதிர்த்து போராடி உதவுகிறது. டி. என். ஏ வை பழுது பார்க்கும் புரதமான கொலாஜன் உற்பத்தியை தூண்டுகிறது. எனவே உங்கள் தினசரி வழக்கத்தில் இந்த சிட்ரஸ் பழங்களை எடுத்துக் கொண்டு வரலாம்.
நார்ச்சத்துக்கள் நிறைந்த ஆப்பிள்கள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் நோய்கள் உங்களை அண்டாது. ஆப்பிள்களில் நிறைய நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. இது உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது டி. என். ஏ வை பழுது பார்க்கும் வேலையை செய்கிறது.
டி. என். ஏ சேதத்தை சரி செய்யும் காய்கறிகள்
ஃபோலேட் நிரம்பிய கீரைகள்
கீரை, முட்டைக்கோஸ் மற்றும் சுவீஸ் சார்ட் போன்றவற்றில் நிறைய ஃபோலேட் சத்து காணப்படுகிறது. இது டி. என். ஏவை பழுது பார்ப்பதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இதில் நிறைய வைட்டமின் பி சத்தும் காணப்படுகிறது. எனவே மரபணு குறைப்பாட்டை சரி செய்ய ஃபோலேட் நிரம்பிய கீரை வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
சல்போராபேன் நிரம்பிய பச்சையிலை காய்கறிகள்
ப்ரோக்கோலி, காலிஃபிளவர் மற்றும் பிரஸ்ஸல்ஸ் முளைகளில் சல்போராபேன் அதிகளவில் காணப்படுகிறது. இது புற்றுநோயை எதிர்த்து போராடும் திறன் கொண்டது. சல்போராபேன் உங்களை டி. என். ஏ சேதத்தில் இருந்து காப்பாற்றும். இந்த காய்கறிகளை லேசாக வேக வைத்தோ அல்லது வறுத்தோ சாப்பிட்டு வரலாம். உங்கள் மரபணு குறைப்பாட்டை சரி செய்ய இந்த பச்சையிலை காய்கறிகள் சிறந்த ஒன்றாகும்.
பீட்டா கரோட்டீன் நிறைந்த கேரட்
கேரட்டில் பீட்டா கரோட்டீன் நிறைந்து காணப்படுகிறது. இது உங்கள் சேதமடைந்த டி. என். ஏவை சரி செய்யும். மேலும் கேரட்டில் லுடீன், ஜீயாக்சாண்டின் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இந்த சத்துக்கள் உங்கள் ஒட்டுமொத்த டி. என். ஏ ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. எனவே சாலட் போன்றவற்றில் கேரட்டை நீங்கள் சேர்த்து வரலாம்.
டி. என். ஏ குறைபாடு எப்பொழுது சரியாகும்
நீங்கள் இந்த உணவுகளை எடுத்துக் கொண்டாலும் டி. என். ஏ பழுதுபார்க்கும் நேரம் நபருக்கு நபர் மாறுபடுகிறது. எனவே உங்கள் டி. என். ஏ பாதிப்பை திறம்பட சரி செய்ய இந்த உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வருவது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

