Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
வெறும் ஜூஸ் மட்டும் குடித்து விரதம் இருந்தால் உங்க உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா?
விரதம் இருப்பது நம் உடலுக்கு மிகவும் நல்லது என்பது எல்லாருக்கும் தெரியும். விரதம் இருப்பதால் நம் குடல் இயக்க செயல்பாடுகள் ஆரோக்கியமாகின்றன. விரதத்தில் பல வகைகள் உண்டு. சிலர் பயிறு வகைகளை மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது உண்டு, சிலர் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது உண்டு.
அந்த வகையில் பார்க்கும் போது வெறும் ஜூஸ் வகைகளை மட்டும் கொண்டு விரதம் இருப்பதால் எந்த மாதிரியான நன்மைகள் உண்டாகும் வாங்க தெரிஞ்சுக்கலாம். பழச்சாறுகள் உங்கள் உடலுக்கு தேவையான அனைத்து வகை ஊட்டச்சத்துக்களையும் கொடுக்க கூடியது.

இது உங்கள் உடலுக்கு தேவையான திரவ ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. உடல்களில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. இது உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடியது. சரி வாங்க வெறும் ஜூஸ் மட்டுமே குடித்து விரதம் இருப்பதால் எந்த மாதிரியான நன்மைகள் உண்டாகும் என அறிந்து கொள்வோம்.
ஜூஸ் விரதம் பின்னால் இருக்கும் அறிவியல் ஆச்சரியங்கள்
ஜூஸ் விரதம் இருப்பதால் உங்கள் செரிமான அமைப்பு நன்கு வேலை செய்யும். உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி சுத்தம் செய்கிறது. இது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. உடலில் உள்ள பிரச்சனைகளை சரி செய்து உடலை மீளுருவாக்கம் செய்கிறது. பழச்சாறுகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த ஓட்டத்தில் ஊடுருவி ஒவ்வொரு செல்கள் மற்றும் திசுக்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.
ஜூஸ் விரதம் எப்படி இருக்க வேண்டும்
ஜூஸ் விரதத்தின் போது உடம்பில் உள்ள நச்சுக்களை நீக்க யோகா மற்றும் நடைபயிற்சி போன்ற விஷயங்களை செய்து வரலாம். ஜூஸ் விரதம் முதன் முதலில் மேற்கொள்ளும் போது பசி இருக்கும். பிறகு பழகப் பழக உங்கள் பசியுணர்வு குறைய ஆரம்பித்து விடும்.
ஜூஸ் விரதம் உங்கள் உடல் செயல்திறனை அதிகரிக்கிறது
கர்ப்பிணிப் பெண்கள், உடல்நிலை பாதிப்பு இருப்பவர்கள் மற்றும் குழந்தைகள் போன்றவர்கள் ஜூஸ் விரதம் எடுக்கும் முன்பு மருத்துவர்களை ஆலோசித்து அதன் பிறகு உண்ணாவிரதம் எடுக்க முயற்சிக்கலாம்.
விரதத்தை முடிக்கும் போது பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற சாலட் வகைகளை எடுத்துக் கொண்டு படிப்படியாக உணவை அதிகரிக்க வேண்டும். அப்படியே உங்கள் விரதத்தை கை விடலாம்.
ஜூஸ் விரதத்தில் நிறைய வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்கள் போன்றவை உள்ளன. இவை உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
ஜூஸ் விரதம் இருக்கும் போது நீங்கள் தசைகளை இழக்க வாய்ப்பிருக்கிறதா என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கும். புரதம் நிறைந்த பழச்சாறுகள் மற்றும் சரியான நீரேற்றம் போன்றவை உங்கள் உடலில் ஏற்படும் தசை இழப்பை குறைக்க உதவுகிறது.
கடைகளில் விற்கப்படும் பழச்சாறுகளை வாங்கும் கவனமாக வாங்குங்கள். ஏனெனில் கடைகளில் விற்கப்படும் பழச்சாறுகளில் அதிகமான சர்க்கரைகள் சேர்க்க வாய்ப்பு உள்ளது.
ஜூஸ் விரதம் இருக்கும் போது சில பேருக்கு தலைவலி, சோர்வு மற்றும் லேசான நச்சு அறிகுறிகள் தோன்றலாம். அந்த மாதிரியான சமயங்களில் உங்கள் உடல்நிலையை நன்றாக பார்த்து விட்டு விரதத்தை நீங்கள் மேற்கொள்ளலாம்.
எத்தனை மணி நேரத்துக்கு ஒருமுறை ஜூஸ் குடிக்க வேண்டும்?
ஜூஸ் விரதம் இருக்கும் போது சுமார் 2-3 மணி நேரம் இடைவெளியில் 450-600 மி. லி அளவில் ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். இது நாள் முழுவதும் உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும், ஆற்றலையும் வழங்குகிறது.
பசி அதிகமாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்
ஜூஸ் விரதம் இருக்கும் போது ஒரு வேளை உங்களுக்கு பசி அதிகமாக இருந்தால் இடையில் தண்ணீர் மற்றும் மூலிகை தேநீர் எடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளரிக்காய், கேரட் போன்ற காய்கறிகளை இடையில் வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வரலாம். ஒரு கைப்பிடியளவு நட்ஸ் வகைகளை எடுத்துக் கொண்டு வரலாம்.
எந்த மாதிரியான பழச்சாறுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்
ஆப்பிள், ஆரஞ்சு, தர்பூசணி, அன்னாசி, திராட்சை, மாதுளை, பெர்ரி போன்ற பழங்களையும், வெள்ளரிக்காய், செலரி, கீரை, காலே, கேரட், பீட்ரூட், குடை மிளகாய் மற்றும் இஞ்சி போன்ற காய்கறிகளையும் எடுத்துக் கொண்டு வாருங்கள்.
தவிர்க்க வேண்டிய பழங்கள்
சில பழங்களில் இயற்கையான சர்க்கரை சத்துக்கள் அதிகமாக இருக்கும். வாழைப்பழம், மாம்பழம், திராட்சை, பலாப்பழம் போன்ற பழங்களை எடுத்துக் கொள்ளாதீர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
