Latest Updates
-
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும்
பானை போல வயிறு வீங்கியிருக்கா? அப்ப 'இத' காலையில் வெறும் வயிற்றில் குடிங்க.. சீக்கிரம் சிக்குன்னு மாறலாம்..
Belly Fat In Tamil: இன்றைய மார்டன் உலகில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால் பெருகி வரும் ஆரோக்கிய பிரச்சனைகளை பார்த்து, மக்கள் தங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். குறிப்பாக இன்றைய தலைமுறையினர் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் தொப்பை. இந்த தொப்பையானது ஒருவரது உடல் தோற்றத்தை மோசமாக வெளிக்காட்டுவதைத் தவிர, உடலினுள் உயிரைப் பறிக்கும் பல கொடிய நோய்களின் அபாயத்தை மெதுவாக அதிகரிக்கிறது.
எனவே தொப்பையைக் கொண்டிருப்பவர்கள் மற்றவர்களை விட மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக தொப்பையைக் குறைக்க தவறாமல் தினந்தோறும் முயற்சிக்க வேண்டும். உடலிலேயே வயிற்றுப் பகுதியில் தேங்கும் கொழுப்புக்களைக் கரைப்பது என்பது மிகவும் கடினம்.

ஏனெனில் நாம் உண்ணும் உணவுகள் நேரடியாக வயிற்றைத் தான் சென்றடைகின்றன. இந்நிலையில் அந்த உணவை செரிக்க போதுமான உடலுழைப்பு தேவை. இந்த உடலுழைப்பு இல்லாத பட்சத்தில் உணவுகளில் உள்ள கொழுப்புக்களானது அப்படியே வயிற்றில் தேங்க ஆரம்பித்து, தொப்பையை உண்டாக்குகின்றன.
இந்த தொப்பையைக் குறைக்க வேண்டுமானால், தினமும் உடற்பயிற்சியை செய்வதைத் தவிர, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஒருசில உணவுகள் மற்றும் பானங்களையும் எடுக்க வேண்டும். ஆயுர்வேதத்தில் உடலில் உள்ள கொழுப்புக்களை திறம்பட கரைக்க உதவும் நிறைய பானங்கள் உள்ளன.
இந்த ஆயுர்வேத பானங்கள் தொப்பையைக் குறைப்பதைத் தவிர, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த தேவையான சத்துக்களையும் கொண்டுள்ளன. இப்போது தொப்பையை குறைக்க உதவும் அந்த ஆயுர்வேத பானங்களைக் காண்போம். முக்கியமாக இந்த பானங்களை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
திரிபலா பானம்
ஆயுர்வேதத்தில் திரிபலா மிகச்சிறந்த எடை குறைப்பு மூலிகையாக கருதப்படுகிறது. திரிபலா என்பது கடுக்காய், தான்றிக்காய் மற்றும் நெல்லிக்காய் ஆகியவற்றின் கலவையாகும். இது உடலை சுத்தம் செய்யவும், செரிமானத்தை மேம்படுத்தவும், மெட்டபாலித்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இந்த திரிபலா பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்துவிட்டு உடற்பயிற்சியில் ஈடுபட்டால், தொப்பை வேகமாக குறையும்.
இஞ்சி டீ
இஞ்சி ஒரு உணவுப் பொருள் மட்டுமின்றி, ஆயுர்வேதத்தில் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பரிந்துரைக்கப்படும் ஒரு மருத்துவ பொருளும் கூட. முக்கியமாக செரிமானம் தொடர்பான பிரச்சனைகளைப் போக்குவதில் இஞ்சி மிகவும் சிறந்தது. ஒருவரது செரிமானம் மோசமாக இருந்தால் தான், தொப்பை போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே தொப்பையைக் குறைக்க நினைப்பவர்கள் இஞ்சியைத் தட்டி நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடித்தால், செரிமானம் சிறப்பாக நடைபெறுவதோடு, தொப்பையும் குறையும்.
பட்டை நீர்
சமையலில் தாளிக்கும் போது சேர்க்கும் பட்டை, மருத்துவ குணம் வாய்ந்த பொருள். குறிப்பாக இந்த பட்டை இரத்த சர்க்கரையை சீராக்கவும், மெட்டபாலிசத்தை மேம்படுத்தவும் பெரிதும் உதவி புரியும். அப்படிபட்ட பட்டை பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், தொப்பை குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் இருக்கும்.
வெந்தய நீர்
நமது சமையலறையில் உள்ள மற்றொரு மருத்துவ குணம் வாய்ந்த பொருள் தான் வெந்தயம். கசப்புச் சுவையைக் கொண்ட வெந்தயம், பசியைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. இந்த வெந்தயத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் வெந்தயத்தை வெறும் வயிற்றில் உட்கொண்டால், பசியுணர்வு கட்டுப்படுவதோடு, எடுக்கும் கலோரிகளும் குறையும் மற்றும் உடல் எடையும் குறையும்.
மஞ்சள் நீர்
மஞ்சளில் உள்ள குர்குமின், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளன. இந்த மஞ்சள் தூளை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான பால் அல்லது நீரில் கலந்து குடித்து வந்தால், உடலினுள் உள்ள வீக்கம் குறைவதோடு, செரிமானம் மேம்படும் மற்றும் எடை இழப்புக்கும் இருக்கும்.
சீரக நீர்
சமையலறையின் அஞ்சறை பெட்டியில் இருக்கும் சீரகம் மெட்டபாலசித்தை மேம்படுத்தி, கொழுப்புக்களை கரைப்பதில் சிறந்தது. அதற்கு வறுத்த சீரகத்தை சுடுநீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, தொப்பையும், உடல் எடையும் வேகமாக குறையும்.
கற்றாழை ஜூஸ்
கற்றாழை உடலினுள் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் சக்தியைக் கொண்டவை. அதுவும் கற்றாழை ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு சிறப்பாக இருப்பதோடு, உண்ணும் உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலால் எளிதில் உறிஞ்சப்படும் மற்றும் தொப்பையும் உடல் எடையும் குறையும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications