Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
ஆன்டிபயாடிக்கால் அடுத்த 25 ஆண்டுகளில் 39 மில்லியனுக்கும் அதிகமான மரணம் ஏற்படலாம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
Antibiotic Resistance: ஆன்டிபயாடிக் எதிர்ப்பு கடந்த சில காலமாகவே கவலையாகவே இருந்து வருகிறது. அதுவும் சமீபத்தில் லான்செட் நாளிதழிலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு பெரிய அதிர்ச்சியை அளிக்கும் வகையில் உள்ளது.
அது என்னவெனில், முந்தைய ஆண்டுகளின் தரவுகளின் படி 1990 மற்றும் 2021 ஆண்டுகளுக்கு இடையில் ஆன்டிபயாடிக் எதிர்ப்பு காரணமாக உலகெங்கிலும் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இறந்துள்ளனர்.

இந்நிலையில் அடுத்த 25 ஆண்டுகளில் இந்த ஆன்டிபயாடிக் எதிர்ப்பால் சுமார் 39 மில்லியனுக்கும் அதிகமான மரணம் ஏற்படக்கூடும் என்று ஆய்வு கூறுகிறது. அதுவும் இந்த ஆன்டிபயாடிக் எதிர்ப்பால் எந்த பகுதியில் இறப்புகள் அதிகம் ஏற்படும் என்பது குறித்தும் லான்செட் நாளிதழில் வெளிவந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதில் இந்த ஆன்டிபயாடிக் எதிர்ப்புகளால் ஏற்படக்கூடிய இறப்புகள் உலகம் முழுவதும் புவியியல் இருப்பிடங்களைப் பொறுத்து வேறுபடும். குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய தெற்காசிய பகுதிகளில் இப்படியான இறப்புகள் அதிகமாக ஏற்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆன்டிபயாடிக் எதிர்ப்பு என்றால் என்ன?
ஆன்டிபயாடிக்குகள் என்பவை மருத்துவர்களால் குறிப்பிட்ட நோய்களுக்கு பரிந்துரைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட மருந்தாகும். இந்த மருந்தை நோயாளிகள் மருத்துவர் கூறிய அளவுகளுடன், குறிப்பிட்ட கால அளவில் எடுத்து வருவதுண்டு. இந்த வகையான மருந்துகள் பூஞ்சை மற்றும் பாக்டிரியாக்களை அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சில நேரங்களில் இந்த மருந்துகள் நுண்ணுயிரிகளின் பரிணாமம் மற்றும் பிறழ்வுகளால் திறம்பட செயல்பட முடியாமல் போய், உடலில் உள்ள செல்களையே தாக்க ஆரம்பித்துவிடும்.
இந்த ஆய்வில் வேறு என்னவெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
உலகளவில் ஆன்டிபயாடிக் எதிர்ப்பால் மரணங்கள் அதிகரித்து வருவதையொட்டி மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வானது ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்பின் பரிணாமம் அல்லது போக்கு பற்றிய முதல் உலகளாவிய பகுப்பாய்வு ஆகும்.
நுண்ணுயிர் எதிர்ப்பின் தலைப்பில் முன்பு நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, 1990 மற்றும் 2021 க்கு இடையில், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுள் கிட்டத்தட்ட 80 சதவிகிதத்திற்கும் அதிகமான இறப்புகளை ஏற்படுத்தியிருக்கலாம் என்று வெளிப்படுத்தியது.
மேலும் எதிர்காலத்திலும் இது இப்படியே மக்களை பாதிக்கும் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதாவது வயதானவர்கள் சற்று அதிகமாக பாதிக்கப்படலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதே வேளையில், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் ஏற்படும் இறப்பு வழக்குகள் 50 சதவீதத்திற்கும் அதிகமாக குறையலாம் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications