Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களுக்காக பணத்தை செலவழிப்பவர்களை விட்டு வறுமை எப்பவுமே போகாதாம் -
1 கப் பட்டாணி இருந்தா இந்த மாதிரி பட்டர் மசாலா செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமாக இருக்கும் -
சுட்டெரிக்கும் வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி 2026-ன் இரண்டாம் பாதியில் இந்த நாடு பெரிய ஆபத்தில் சிக்கப்போகுதாம் - ஷாக் ஆகாதீங்க -
கடும் வெயில்ல வீடு ஜில்லுனு இருக்கணுமா? இந்த 5 வாஸ்து மாற்றங்களை செஞ்சா போதும், மின்சார கட்டணமும் குறையும்! -
நாவூறும் உருளைக்கிழங்கு பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - மட்டன் பிரியாணியே தோத்துரும் -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தேங்காய் சட்னி அரைக்கும் போது ஒருவாட்டி மாங்காய் சேத்து இப்படி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு நாலாபக்கமும் ஆபத்து சூழ்ந்திருக்குமாம் -
புதன் நட்சத்திர மாற்றத்தால் இன்னும் 2 நாட்களில் சிம்மம் உள்ளிட்ட 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
நெல்லிக்காய் Vs கொய்யா - இவற்றில் எதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது? எது மிகவும் சத்தானது?
Amla Vs Guava: உடல் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் சி மிகவும் முக்கியமான சத்தாகும். இது எலும்புகள் மற்றும் மூட்டுகளின் வலிமைக்கு மட்டுமின்றி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
வைட்டமின் சி நீரில் கரையக்கூடிய ஒரு சத்தாகும் மற்றும் இதை உடலில் சேமித்து வைக்க முடியாது. எனவே இந்த சத்தை நாம் தினசரி உணவுகளின் மூலம் தான் பெற வேண்டியுள்ளது. அதற்கு இந்த வைட்டமின் சி நிறைந்த உணவுகளை தினமும் உட்கொள்ள வேண்டும்.

இந்த வைட்டமின் சி ஏராளமான பழங்கள் மற்றும் காய்கறிகளில் நிறைந்துள்ளன. குறிப்பாக இந்த வைட்டமின் சி கொய்யாப்பழம் மற்றும் நெல்லிக்காயில் அதிகம் உள்ளன. இவ்விரண்டும் குளிர்காலத்தில் எளிதில் மார்கெட்டுகளில் கிடைக்கக்கூடியவைகளாகும்.
ஆனால் இந்த இரண்டில் எதில் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது மற்றும் இவற்றில் எது நிறைய சத்துக்களை உள்ளடக்கியுள்ளது என்று பலரும் கேட்கலாம். இப்போது இவ்விரண்டில் எது ஒருபடி உயர்ந்தது என்பதைக் காண்போம்.
கொய்யா
உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருக்க வேண்டுமானால், அதற்கு வைட்டமின் சி மிகவும் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த வைட்டமின் சி கொய்யாவில் இருப்பதால், இந்த பழத்தை சளி பிடித்திருக்கும வேளையில் உட்கொள்வது மிகவும் நல்லது. நிபுணர்களின் கூற்றுப்படி, கொய்யாவில் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் இருப்பதால், இதை உட்கொள்ளும் போது உடலைத் தாக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழித்து, உடலுக்கு பாதுகாப்பை அளிக்கிறது.
கொய்யாவில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இந்த பழம் ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாப்பளித்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் பொட்டாசியம் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால், இது கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக குறைக்க உதவுகிறது. கூடுதலாக கொய்யா இலையின் சாறு உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவுகிறது.
கொய்யாவில் கலோரிகள் குறைவு என்பதால், எடையைக் குறைக்க நினைப்போருக்கு இது மிகவும் நல்லது. இதில் கலோரிகள் குறைவு மட்டுமின்றி, வைட்டமின்களும் இருப்பதால், இந்த பழம் கிடைத்தால் அதை சாப்பிட மறக்காதீர்கள். மேலும் கொய்யா இலையில் உள்ள வைட்டமின் சி ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோய் எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளதால், இதை உட்கொள்வதன் மூலம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.
நெல்லிக்காய்
கொய்யாவைப் போன்றே நெல்லிக்காயிலும் வைட்டமின் சி அதிகளவில் உள்ளன. நெல்லிக்காயின் ஒவ்வொரு பழத்திலும் குறைந்தது 600-700 மிகி வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. கூடுதலாக இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து செல்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி உடலைத் தாக்கும் தொற்றுக்களைத் தடுக்க உதவுகிறது. முக்கியமாக சளி பிடித்திருக்கும் போது இதை உட்கொண்டால், விரைவில் சரியாகும்.
மேலும் நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி வயிற்றுப்புண்ணை தடுக்கவும், குணப்படுத்தவும் உதவுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, நெல்லிக்காயை உட்கொண்டு வந்தால், அது செரிமானத்தை சீராக்கி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
நெல்லிக்காய் மற்றும் நெல்லிக்காயில் எவ்வளவு வைட்டமின் சி உள்ளது?
நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு கொய்யாவில் ஒரு நாளைக்கு வேண்டிய வைட்டமின் சி அளவில் 200 சதவீதம் நிறைந்துள்ளது. அத்துடன் அதில் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் பொட்டாசியம் ஏராளமான அளவில் உள்ளன.
மறுபுறம், நெல்லிக்காயிலும் வைட்டமின் சி உள்ளது. அதுவும் 100 கிராம் நெல்லியில் 600-700 மிகி வைட்டமின் சி உள்ளது. கூடுதலாக இதில் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான டானின்கள் மற்றும் ப்ளேவோனாய்டுகள் உள்ளன.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications