Latest Updates
-
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும்
எச்சரிக்கை! இந்த பிரச்சனை இருந்தா நெல்லிக்காய் சாப்பிடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்..
Amla Side Effects In Tamil: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல்வேறு உணவுப் பொருட்கள் உள்ளன. அதில் ஒன்று தான் நெல்லிக்காய். இந்த நெல்லிக்காயை தினசரி உணவில் சேர்த்து வந்தால், ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.
ஏனெனில் நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளன. இது சக்தி வாய்ந்த ஆன்டி.ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டது. ஒரு சிறிய நெல்லிக்காயில் ஆரஞ்சு பழத்தை விட 20 மடங்கு அதிகமான அளவில் வைட்டமின் சி உள்ளன என்றால் பாருங்கள்.

இவ்வளவு அற்புதமான நெல்லிக்காய் சமையலில் மட்டுமின்றி, இயற்கை மருத்துவத்திலும் பழங்காலம் முதலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. என்ன தான் நெல்லிக்காய் ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், குறிப்பிட்ட ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் இதை உட்கொள்வது பாதுகாப்பானது அல்ல. இப்போது யாரெல்லாம் நெல்லிக்காயை சாப்பிடக்கூடாது என்பதைக் காண்போம்.
அசிடிட்டி
நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளன. மேலும் நெல்லிக்காய் அசிட்டிக் பண்புகளை கொண்டது. நெல்லிக்காயை உட்கொள்வது நெஞ்செரிச்சலைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் ஏற்கனவே அசிடிட்டி பிரச்சனையால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் நெல்லிக்காயை உட்கொண்டால், அது நிலைமையை இன்னும் தீவிரமாக்கும். அதுவும் அசிடிட்டி பிரச்சனையைக் கொண்டவர்கள் வெறும் வயிற்றில் நெல்லிக்காயை உட்கொண்டால், அது வயிற்று சுவற்றை எரிச்சலடையச் செய்து, அசிடிட்டியை தீவிரமாக்கிவிடும்.
இரத்தம் தொடர்பான கோளாறுகள்
நெல்லிக்காய் ஆன்டி-ப்ளேட்லெட் பண்புகளைக் கொண்டது. அதாவது இது இரத்தம் உறைவதைத் தடுக்கும் பண்புகளைக் கொண்டது. சாதாரண மக்கள் நெல்லிக்காயை உட்கொண்டு வந்தால், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அயாபத்தைக் குறைக்கலாம்.
ஆனால் ஏற்கனவே இரத்தம் தொடர்பான பிரச்சனையைக் கொண்டவர்கள் நெல்லிக்காயை உட்கொள்வது நல்லதல்ல. ஏனெனில் இதில் உள்ள ஆன்டி-ப்ளெட்லெட் பண்புகள் இரத்தத்தை மெலிதாக்கி, சாதாரண இரத்த இரத்த உறைதலை கூட தடுத்துவிடும். பின் சிறு காயம் ஏற்பட்டாலும் இரத்தம் உறையாமல் வெளிவந்தவாறு இருக்கும்.
சர்ஜரி செய்ய போகிறவர்கள்
நீங்கள் சர்ஜரி/அறுவை சிகிச்சை செய்யப் போகிறீர்களா? அப்படியானால் நெல்லிக்காயை சாப்பிடுவதை சிறிது காலம் தவிர்க்க வேண்டும். அதிகமாக நெல்லிக்காயை உட்கொண்டால், இரத்தம் உறையாமல் இரத்தக்கசிவு அதிகமாக ஏற்படும்.
இப்படியே இரத்தம் அதிகமாக கசிந்தால், அது திசு ஹைபோக்ஸீமியா, கடுமையான அமிலத்தன்மை அல்லது பல உறுப்பு செயலிழப்புக்கு வழிவகுக்கும். எனவே சர்ஜரி செய்ய நினைப்பவர்கள், குறைந்தது 2 வாரங்களுக்கு நெல்லிக்காயை சாப்பிடக்கூடாது.
குறைவான இரத்த சர்க்கரை
நெல்லிக்காய் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நெல்லிக்காயானது டைப்-1 மற்றும் டைப்-2 சர்க்கரை நோயைக் கொண்டவர்கள் நல்லதாக கருதப்பட்டாலும், இரத்த சர்க்கரை மிகவும் குறைவாக இருப்பவர்களுக்கு நெல்லிக்காய் நல்லதல்ல. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் நெல்லிக்காயை சாப்பிட நினைத்தால், மருத்துவரின் ஆலோசனையைப் பெற்ற பின் உட்கொள்ள வேண்டும்.
கர்ப்பிணிகள் அல்லது தாய்ப்பால் கொடுப்பவர்கள்
நெல்லிக்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன. ஆனால் அந்த நெல்லிக்காயை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், அது வயிற்று உப்புசம், வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழப்பு போன்ற பிரச்சனைகளை வரவழைக்கும்.
இம்மாதிரியான பிரச்சனைகளை கர்ப்ப காலத்தில் பெண்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதாலேயே கர்ப்பிணிகளை அதிகம் உட்கொள்ளக்கூடாது என்று கூறுகிறார்கள். அப்படியே சாப்பிடுவதாக இருந்தால், மருத்துரின் ஆலோசனைக்கு பின் உட்கொள்ளுங்கள்.
மலச்சிக்கல்
நெல்லிக்காய் வயிற்றின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் நெல்லிக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இருப்பினும், இந்த நெல்லிக்காயை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், வயிற்றில் நர்ச்சத்து அதிகமாகி, அதன் விளைவாக மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்க நேரிடும். ஆகவே நெல்லிக்காய் சாப்பிட்டால, தண்ணீர் அதிகம் குடிக்க மறவாதீர்கள். இப்படி குடிக்கும் போது மலச்சிக்கல் தடுக்கப்படும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
