Latest Updates
-
இன்றைய ராசிபலன் 17 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கூரையை பிச்சுட்டு கொட்டப்போகுதாம் -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 3 ராசிக்கு தொழில் ரீதியா அதிர்ஷ்டமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கேரட்டும், ஜவ்வரிசியும் இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க.. பிள்ளைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
Nag Panchami 2026: நாக பஞ்சமியில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
காரசாரமான சிக்கன் ஈரல் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 7 அறிகுறிகள் அடிக்கடி தெரியுதா? அப்ப அது குடல்வால் புற்றுநோயின் அறிகுறியா இருக்கலாம்.. உஷார்.. -
ஆகஸ்ட் 19-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..! -
கவுண்டம்பாளையம் சிக்கன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனச்சுமை அதிகரிக்கப்போகுதாம் -
புதன்-குருபகவான் இணைப்பால் சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்த படத்தில் இருப்பவரின் உண்மையான வயது என்ன தெரியுமா? அவரின் இளமையின் ரகசியம் இதுதானாம்...!
இளமையான தோற்றத்துடன் இருக்க வேண்டுமென்பது அனைவரின் விருப்பமாகும், ஆனால் எதார்த்தத்தில் மோசமான வாழ்க்கை முறையால் இளம் வயதினரே முதுமையான தோற்றத்துடன் இருக்கிறார்கள். ஆனால் இந்த வரம் ஒருவருக்கு மிகவும் எளிதாக கிடைத்துள்ளது.
35 வயதுடைய நபர் ஒருவர் தன்னை 20 வயது இளமையாகத் தோற்றமளிக்க வைத்த முதுமைக்கு எதிரான பழக்கங்களை வெளிப்படுத்தியுள்ளார், மேலும் புதிய நபர்கள் தன்னை ஒரு 'டீனேஜர்' என்று தொடர்ந்து தவறாக நினைக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார். மிச்சிகனில் உள்ள டெட்ராய்ட்டைச் சேர்ந்த மருத்துவ எழுத்தாளர் பிராண்டன் மைல்ஸ் மே, இளமைத் தோற்றத்தைப் பராமரிப்பதற்கான ரகசியம் சூரிய ஒளியில் இருந்து விலகி மதுவைத் தவிர்ப்பது என்று கூறுகிறார்.

அவர் தனது சுருக்கமில்லாத சருமத்தை பெற உடற்பயிற்சி செய்வது உதவுவதாகவும், இளமையாக இருப்பது போன்ற உணர்வைக் கொடுப்பதாகவும் கூறியுள்ளார். பிராண்டன் தனது உணவுப்பழக்கமே தனது இளமைக்குக் காரணம் என்று கூறுகிறார், அவர் ப்ரெஷான பழங்கள், தாவர அடிப்படையிலான உணவு மற்றும் மீன் ஆகியவற்றின் ஆரோக்கியமான உணவு முறையுடன் வாழ்கிறார் என்று விளக்கினார், இவை அனைத்தும் அவரது வயதை 10 ஆண்டுகள் குறைத்துக் காட்டுவதாகக் கூறியுள்ளார்.
உணவுப்பழக்கங்கள் மட்டுமின்றி, 35 வயதான அவரது மன அணுகுமுறை அவரை இளமையாக வைத்திருக்க உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று நம்புகிறார். இதுபற்றி அவர் கூறுகையில் 'குடிப்பழக்கம் இல்லாதது எனது இளமைத் தோற்றத்திற்கு முக்கியக் காரணம். உண்மையில் இளமையின் உணர்வை உணர்த்துகிறது என்று நினைக்கிறேன். நான் என்னை இளமையாக நினைத்து பார்க்கிறேன்.' என்று கூறியுள்ளார்.
பிராண்டன் ஒரு துளி கூட மதுவைத் தொடவில்லை என்பது மட்டுமின்றி, தனது வாழ்நாள் முழுவதும் தனது தோலை சூரிய ஒளியில் இருந்து விலக்கி வைத்ததாகவும் கூறுகிறார். "நான் என் வாழ்நாள் முழுவதும் சூரிய ஒளியில் இருந்து விலகி இருக்கிறேன்," என்று அவர் கூறினார். 'சூரியனைத் தடுக்க நான் ஹூடியை அணிந்திருக்கிறேன் மற்றும் என் கைகளின் பின்புறத்தையும் எப்போதும் மறைத்து வைத்திருப்பதாகக் கூறினார்.'
பிராண்டன் தனது 13 வயதிலிருந்தே தனது சருமத்தை கவனித்து வருகிறார், மேலும் அவரது ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க முயற்சி செய்தார். அவரது உடல்நிலை மற்றும் பயோ-ஹேக்கிங் முறைகள், அவரது சுருக்கம் இல்லாத தோற்றத்தை பராமரிக்க பல தடுப்பு நுட்பங்களைப் பயன்படுத்த வழிவகுத்தது.
சமூக ஊடக வீடியோ உருவாக்கும் பிராண்டன், 'நான் விமான நிலைய பாதுகாப்புக்குச் செல்லும்போது எனது வயதை நம்பாமல் பலமுறை சோதிப்பதாகவும், அனைவரும் எனக்கு 15 அல்லது 16 அல்லது 18 முதல் 19 வரை இருக்கலாம்." என்று நினைப்பதாகவும் கூறியுள்ளார். 'நான் எந்த வேலையும் செய்ததில்லை. நான் செய்வது மிகவும் எளிமையானது ஆனால் பயனுள்ளது.'
மருத்துவம் சார்ந்த தொழிலையும் வைத்திருக்கும் பிராண்டன், எப்போதும் ஆரோக்கியமான உணவின் மீது விருப்பம் கொண்டவர். 15 வயதில், அவர் பச்சை தேயிலை மற்றும் அதிக தாவர அடிப்படையிலான உணவுகளை இணைத்தல் போன்ற சில உணவு மாற்றங்களைச் செய்யத் தொடங்கினார். மேலும் 19 வயதில் அவர் சர்க்கரைகள், தானியங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை குறைத்து இப்போது ஆர்கானிக் உணவு மற்றும் குறைந்த பாதரசம் கொண்ட மீன்களை சாப்பிடுகிறார்.
பிராண்டன் உடற்பயிற்சி செய்வது முக்கியம் என்று நினைக்கிறார், ஆனால் தனது உடலை கஷ்டப்படுத்துவதைத் தவிர்க்க 'கனமாக' எதையும் செய்வதில்லை. அவர் கூறியது என்னவெனில், உடற்பயிற்சியில் நான் அதிகம் ஈடுபடுவதில்லை. அதிக உடற்பயிற்சி உடலில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும், அது உடலை முதுமையாக்கும் என்று ப்ராண்டான் கூறியுள்ளார். எனவே அவர் நடைபயிற்சி மற்றும் யோகா போன்ற மிதமான மற்றும் மென்மையான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டுமென்று கூறுகிறார்.
இந்த வாழ்க்கை முறையால் பத்து வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட நான் நன்றாக இருப்பதாக நினைக்கிறேன். நான் உடல்ரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் இளமையாக உணர்கிறேன். உடல் மனதைப் பின்பற்றுகிறது என்று நான் நினைக்கிறேன் என்று அவர் கூறுகிறார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
