Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
முலாம்பழம் உங்களுக்கு பிடிக்குமா? அதுல இருக்கிற இந்த பிரச்னையும் தெரிஞ்சிக்கோங்க
இங்கே முலாம்பழம் சாப்பிடுவதால் உண்டாகும் பக்க விளைவுகள் பற்றி விளக்கமாகக் கொடுக்கபட்டுள்ளன.
கிர்னி பழம், தர்பூசணி மற்றும் தேன் முலாம் பழம் இனி திரும்பிய இடமெல்லாம் கிடைக்கும். வெயில் காலத்திற்கு ஏற்ற ஜீஸ் பழங்கள் இவை. சுவை மற்றும் சத்துகள் நிறைந்தது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், விட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த இந்த பழங்கள் கண் பார்வையை அதிகரிக்க, இரத்த அழுத்தத்தை சீராக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த முலாம் பழங்கள் பயன்படுகிறது.

முலாம்பழம்
ஆதிகாலத்தில் இருந்தே இந்த பழங்கள் நம் உணவு அட்டவணையில் உள்ளது. ' குணப்படுத்தும் மருந்துகள் ' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது படி முலாம் பழத்தில் பிட்டா கேரோட்டின், விட்டமின் சி மற்றும் பல விதமான ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்து உள்ளன. பொட்டாசியம் நிறைந்த இந்த பழங்கள் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிப்படி இந்த பழத்தையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பக்க விளைவுகள் ஏற்படும். அதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

இரத்த சர்க்கரை அளவு
மெலிட்டஸ் எனப்படும் நீரிழிவு நோய் இரத்த சர்க்கரை அல்லது குளுக்கோஸ் கூடுவதால் ஏற்படுகிறது. ஊட்டச்சத்து நிபுணர் ஷில்பா அரோரா கூறுகிறார் இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதால் நீரிழிவு நோயாளிகள் முலாம் பழத்தை தவிர்க்க வேண்டும் என்று. தர்பூசணி பழத்தில் கிளைசிமிக் அளவு 72 இது மிக அதிகம். பரங்கிகாயில் 90% நீர்ச்சத்து தான் உள்ளது. ஆனாலும் இதில் 9% இனிப்பு சத்துகள் உள்ளது. இந்த பழங்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும் முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது.

இரைப்பை பாதிப்புகள்
ஆயுர்வேத மருத்துவ குறிப்பின்படி குறிப்பிட்ட சில உணவுகளை சேர்த்து உண்பதால் நம் இரைப்பையின் செயல்பாட்டை பாதிக்கிறது . மருத்துவர் வசந்த் லாட் தன்னுடைய புத்தகத்தில் எல்லா வகையான முலாம் பழத்தையும் தனியாக சாப்பிடுங்கள் இல்லையென்றால் சாப்பிடாதீர்கள் என்று கூறியுள்ளார். இதனால் இந்த பழங்களை எதனுடனும் சேர்த்து சாப்பிட கூடாது என தெரியலாம். பெங்களூரில் உள்ள மருத்துவர் அஞ்சு, நிறைய முலாம் பழம் சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார். முலாம் பழத்தில் தண்ணீர்,இனிப்பு மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் நாம் இதை சாப்பிட்ட பின் தண்ணீர் அதிகம் குடித்தால் பாக்டீரிய மற்றும் நுண்ணியிர் தொற்றுக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு
மருத்துவர் ஷில்பா கூறுகிறார் முலாம் பழங்களை இரவில் கண்டிப்பாக சாப்பிட கூடாது என்று. இந்த பழங்களை செரிமானம் செய்வது இரவு நேரங்களில் நமது இரைப்பைக்கு மிகவும் கடினமானது. பொதுவாகவே உணவு செரிமானம் இரவு நேரங்களில் மந்தமாக தான் நடக்கும். எனவே இந்த நேரங்களில் இனிப்பு மற்றும் அசிடிட்டி நிறைந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். தர்பூசணி பழத்தில் இயற்கையான இனிப்பு அதிகம் இருப்பதால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் இனிப்பு மற்றும் அசிடிட்டி நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டால் நமது உறக்கம் பாதிப்பு அடையும்.

அத்தியாவசியமான மற்ற சத்துகள்
உங்களுக்கு முலாம் பழம் பிடிக்குமா?. எவ்வளவு தந்தாலும் சாப்பிடுவிர்களா? ஆனால் இதை மட்டுமே சாப்பிடாமல் மற்ற ஊட்டச்சத்து உணவு வகைகளையும் சாப்பிட வேண்டும். முலாம் பழம் மட்டுமே சாப்பிட்டால் கொழுப்பு மற்றும் புரதம் மட்டுமே உடலில் சேரும். நமது உடலுக்கு எல்லா விதமான சத்துக்களும் வேண்டும்.

வயிற்றுப் போக்கு
தர்பூசணி பழத்தில் தண்ணீர் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும் என சில மருந்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். தர்பூசணி பழத்தில் சோர்பிட்டோல் என அழைக்கப்படும் ஒரு மூலப் பொருள் உள்ளது. இது போதுமான அளவில் எடுத்து கொண்டால் பிரச்சினை இல்லை ஆனால் அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு மற்றும் வாயுத்தொல்லை ஏற்படும்.
ஒரு பழத்தை நமக்கு பிடிக்கும் என்பதால் அதிகம் சாப்பிட்டு அதனால் தொல்லை அனுபவிக்க கூடாது. அதனால் முலாம் பழம் சீசன் வரும் போது எல்லாம் விதமான முலாம் பழத்தையும் கொஞ்சமாக சாப்பிட்டு பாருங்கள்.



Click it and Unblock the Notifications