பாலிசிஸ்டிக் ஓவரி பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்

By: Peveena Murugesan
Subscribe to Boldsky

பி.சி.ஓ.எஸ்/பி.சி.ஓ.டி உள்ள பெண்களுக்கு பெரும்பாலும் அதிக அளவு ஆண்ட்ரொஜென்ஸ் சுரக்கும்.இவை ஆண் ஹார்மோன்கள் என்று அழைக்கப்படுகிறது.ஏனெனில் இவை ஆண்களுக்கு அதிகமாக சுரக்கும்.ஆனால் பி.சி.ஓ.எஸ் உள்ள பெண்களுக்கு இவை அதிகளவு சுரக்கும்.பெண்களின் கருப்பையில் பல சிறிய நீர்க்கட்டிகள் தோன்றும்.இதனால் ஒழுங்கற்ற மாதவிடாய் (அ) மாதவிடாய் தவறுதல் போன்றவை ஏற்படும்.

பாலிசிஸ்டிக் ஓவரி பாதிப்பு யாருக்கு ஏற்படுகிறது, அதன் அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சை முறைகள் இங்கே விரிவாக தரப்பட்டுள்ளன. தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பி.சி.ஓ.எஸ் எதனால் ஏற்படுகிறது?

பி.சி.ஓ.எஸ் எதனால் ஏற்படுகிறது?

பி.சி.ஓ.எஸ் உள்ள பெண்களின் குடும்பத்திலும் யாரேனும் ஒருவர்க்கும் இந்த பிரச்சனை ஏற்படும்.பி.சி.ஓ.எஸ் ஏற்பட முக்கியமான அடிப்படை காரணம் "ஹார்மோன் இம்பாலன்ஸ்".

பி.சி.ஓ.எஸ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆண்ட்ரொஜென்ஸ் சாதாரணமாக சுரக்கும் அளவை விட அதிகமாக சுரக்கும் இது அதிகமாக சுரந்தால் கருப்பையில் கருமுட்டை உருவாவதையும் உருவான கருமுட்டை வெளியே வருவதையும் தடுக்கிறது.

பி.சி.ஓ.எஸ்-ன் அறிகுறிகள்?

பி.சி.ஓ.எஸ்-ன் அறிகுறிகள்?

முகப்பரு , அதிகமான முடி வளர்ச்சி , எடை அதிகரிப்பு கருத்தரித்தலில் சிக்கல்கள்

ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, கருவுறாமை , முகம்,மார்பு,வயிறு,கட்டைவிரல் (அ) கால்விரல்கள் இவற்றில் முடிவளர்ச்சி , ஆண்களை போன்று வழுக்கை (அ) மெல்லிய முடி , நீர்க்கட்டிகள்

மருத்துவ பரிசோதனை:

மருத்துவ பரிசோதனை:

உங்களுடைய மாதவிடாய் ஏற்பட்ட தேதி,உடல் எடை மாற்றம்,பிற அறிகுறிகளை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்வார்.

உடல் பரிசோதனை:

உடல் பரிசோதனை:

ரத்த அழுத்தம்,BMI மற்றும் இடுப்பு அளவு ஆகியவற்றை அளவிட்டு தெரிந்து கொள்வார்.முடி வளர்ச்சியின் பகுதிகளை பார்ப்பார்.சிலர் முடிகளை அகற்றும் கிரீம்களை கொண்டு அகற்றிவிடுவார்கள் ஆனால் அவ்வாறு செய்யாமல் மருத்துவரை அணுகிக் காட்டவேண்டும்.மருத்துவரிடம் காட்டிவிட்டு முடியை அகற்றுவது உங்கள் விருப்பம்.

இடுப்புப் பரிசோதனை:

இடுப்புப் பரிசோதனை:

கருப்பைகளில் விரிவு ஏற்பட்டுள்ளதா என்றும், நீர்கட்டிகளின் எண்ணிக்கையையும் பரிசோதிப்பார். இடுப்புப் பகுதியை அல்ட்ராசவுண்ட் உபயோகப்படுத்தி படங்களின் மூலம் பரிசோதிப்பார்.இது நீர்க்கட்டிகள்,கருப்பை மற்றும் அவற்றின் பாதை இவற்றை பரிசோதிக்க உதவும்.

ரத்தப் பரிசோதனை:

ரத்தப் பரிசோதனை:

ரத்தத்தில் ஆண்ட்ரொஜென்ஸ் ஹார்மோன் மற்றும் குளுக்கோஸ் அளவினை சோதித்துப் பார்ப்பார்.

ஆரோக்கியமான உணவு:

ஆரோக்கியமான உணவு:

பதப்படுத்தப்பட்ட உணவு,சர்க்கரை சேர்த்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும். முழு தானியங்கள்,பழங்கள்,காய்கறிகள் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இவை ரத்தத்தில் குளுகோஸின் அளவைக் குறைக்க உதவுகிறது மற்றும் இன்சுலினை மேம்படுத்துகிறது.உடல் எடையில் 10 சதவிகித இழப்பு ஏற்படும் இதனால் மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்கும்.

கருத்தரிக்க உதவும் மருந்துகள்:

கருத்தரிக்க உதவும் மருந்துகள்:

இதற்கு பல்வேறு சிகிச்சைகள் இருந்தாலும் அவற்றை மேற்கொள்ளும் முன் அதற்கான காரணத்தைக் கண்டறிந்த பின்னரே சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் மற்றும் செயற்கை கருவுறுதல் மேற்கொள்ளலாம்.இது சிறந்தது ஆனால் இது மிகவும் விலை உயர்ந்தது

சிகிச்சை மேற்கொண்டும் குழந்தை இல்லையெனில் அறுவை சிகிச்சையை மேற்கொள்ளலாம் இந்த சிகிச்சையின் மூலம் ஆண்ட்ரொஜென்ஸ் சுரப்பை குறைத்தும்,நீர் கட்டிகளை அகற்றவும் முடியும்.

 தாய்மார்கள் தாய்ப்பால் குடுக்கலாமா?

தாய்மார்கள் தாய்ப்பால் குடுக்கலாமா?

அதிகரித்த முடி வளர்ச்சி (அ) கூடுதல் ஆண் ஹார்மோன்களை குறைக்க ஆன்டி-ஆண்ட்ரொஜென் மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம்.இந்த மருந்துகளை எடுக்குமுன் மருத்துவரிடம் "கர்ப்பமாக இருக்கின்றீர்களா (அ) கர்ப்பம் தரிக்க ஆசைப்படுகின்றீர்களா என்று கலந்தாலோசிப்பது நல்லது.இந்த மருந்துகளை எடுக்கும்போது தாய்ப்பால் கொடுக்கக்கூடாது.

தவிர்க்க வேண்டிய உணவு:

தவிர்க்க வேண்டிய உணவு:

வறுத்த/பொறிக்கப்பட்ட/பதப்படுத்தப்பட்ட உணவுகள். அதிக கொழுப்பு உள்ள ஸ்வீட்ஸ்,கேக்,குளிர்பானங்கள் தவிருங்கள்.

உடற்பயிற்சி:

உடற்பயிற்சி:

வாரத்திற்கு 5 நாட்கள், குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நடை, ஓடுதல், நீச்சல், யோகா. போன்ற்றவற்றை செய்வது கர்ப்பப்பையை பலம் பெறௌதவும். ஹார்மோன் ஒழுங்குமுறைப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things you should know about PCOD

Things you should know about PCOD,
Story first published: Friday, April 28, 2017, 18:00 [IST]
Subscribe Newsletter