Latest Updates
-
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
குடைமிளகாயை வைச்சு இப்படி வித்தியாசமா குருமா செய்யுங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும்
Capsicum Kurma Recipe in Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி அல்லது பூரி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் உருளைக்கிழங்கு குருமா போன்ற ஒரே மாதிரியான சைடிஷ் தான் செய்வீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சற்று வித்தியாசமான சுவையுடைய சைடுஷ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்ப உங்களுக்கான பதிவுதான் இது.

உங்கள் வீட்டில் குடைமிளகாய் உள்ளதா? அப்படியானால் அந்த குடைமிளகாயை வைத்து அட்டகாசமான சுவையில் ஒரு குருமா செய்து கொடுங்கள். இந்த குருமா சப்பாத்திக்கு மட்டுமின்றி, தோசை, சாதத்துடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சுவையில் குருமா செய்தால், வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு குடைமிளகாய் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குடைமிளகாய் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- பச்சை குடைமிளகாய் - 1
- எண்ணெய் அல்லது வெண்ணெய் - 2 ஸ்பூன்
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
- மல்லித்தூள் - 1 ஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
- சர்க்கரை - 1/2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
- எலுமிச்சைச் சாறு - 1 ஸ்பூன்
- கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
வறுத்து அரைக்க:
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- வேர்க்கடலை - 3 ஸ்பூன்
- இஞ்சி - 1 இன்ச்
- பூண்டு - 6 பல்
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 2
செய்முறை:
- குடைமிளகாயை நன்றாகள் கழுவி, சதுரத் துண்டுகளாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் அல்லது வெண்ணெயை சேர்த்து சூடாக்கவும். வேர்க்கடலையின் தோல் வெடிக்கும் வரை வறுக்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து கண்ணாடிப் பதம் வரும் வரை வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து கூழ் பதம் வரும் வரை வதக்கவும். இதை ஆற வைத்து, மென்மையான விழுதாக அரைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கவும். சீரகம் சேர்த்து வெடிக்க விடவும். பின்னர் நறுக்கிய குடைமிளகாய் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
- பின்னர் அரைத்து வைத்த மசாலா விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலாவை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்துகிளறவும்.
- அதன்பின் உப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- மசாலாவின் பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும், பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
- வாசனை வரும் வரை குருமாவை நன்கு கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து இறுதியாக சிறிதளவு எலுமிச்சை சாறை சேர்த்து கிளறவும்.
- ஒரு கைப்பிடி கொத்தமல்லி சேர்த்து அலங்கரித்து சூடான சப்பாத்தி அல்லது பூரியுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications