Just In
- 1 hr ago
இந்த நேரத்தில் உடலுறவு வைச்சுகிட்டா கர்ப்பமாவதற்கு 99% வாய்ப்பிருக்காம் தெரியுமா?
- 3 hrs ago
ஃபிட்டா இருக்கணுமா? அப்ப இத வாரத்துக்கு 6 நாள் ஃபாலோ பண்ணுங்க..
- 4 hrs ago
வைட்டமின் சி மற்றும் ஈ நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உங்களுக்கு இந்த மோசமான நோய் வராதாம்...!
- 8 hrs ago
இன்றைய ராசிப்பலன் (21.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு அவசர முடிவையும் எடுக்கக்கூடாது…
Don't Miss
- Automobiles
செக்மெண்ட்டின் நீளமான கார்... பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமோசின் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்...
- Movies
மீனுக்குட்டி அன்ட் கன்னுக்குட்டி.. செம்ம க்யூட் போங்க.. அனிதாவை பார்த்து ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!
- Finance
'America is back' ஜோ பிடன் வேற லெவல் திட்டம்.. இனி சிங்க பாதையில் அமெரிக்க பொருளாதாரம்..!
- News
மதுரையில் திக்...திக்...திக்.. திடீரென ஒருபுறமாக சாய்ந்த 2 மாடி கட்டிடம்..பெரும் விபத்து தவிர்ப்பு!
- Sports
இனிமே மும்பை இந்தியன்ஸ் டீமுக்காக ஆட மாட்டார்.. விடைபெற்ற மலிங்கா.. என்ன காரணம்?
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த குட்டி ஹேண்ட்பேக் விலை 34,203 ரூபாயாம்... இதுல என்னடா வெக்க முடியும்?
பேஷன் உலகில் புதுிது புதிதாக ஏதாவது கண்டுபிடிப்புகளும் வடிவமைப்புகளும் தினம் தினம் வந்துகொண்டே தான் இருக்கும். அதுவும் பெண்களின் பேஷன் இன்னும் பெரியது. எக்கச்சக்க வெரைட்டி. அதில் ஹேண்ட்பேக் வெரைட்டிகளுக்குப் பெண்களிடம் எப்போதுமே வரவேற்பு அதிகம்.
அதைப் பயன்படுத்தி தான் உலகின் மிகச்சிறிய அதேசமயம் உலகின் மிகவும் காஸ்ட்லியான குட்டி ஹேண்ட்பேக் ஒன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஹேண்ட்பேக் பற்றிய விவரங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

ஹேண்ட்பேக்
பெண்களுக்கு எப்போதுமே ஹேண்ட்பேக் மீது மோகம் உண்டு. எதை வேண்டுமானாலும் மற்றவர்களிடம் கொடுப்பார்கள். ஆனால் செல்போனையும் ஹேண்ட்பேக்கையும் கொடுக்க மாட்டார்கள். கிட்டதட்ட நம்முடைய டைரிகளுக்கு சமமான பொக்கிஷமாக பெண்கள் கருதுவது போனையும் ஹேண்ட்பேக்கையும் தான். அதற்கு கிண்டலாகக் கூட சொல்வதுண்டு. கணவனைக் கூட விட்டுக் கொடுப்பார்கள். ஆனால் ஹேண்ட்பேக்கை கொடுக்க மாட்டார்கள். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது தான் இந்த ஹேண்ட்பேக்குகள்.

ஃபேஷன் வீக்
சமீபத்தில் பாரிஸில் மிக பிரமாண்டமான ஃபேஷன் வீக் ஷோ நடத்தப்பட்டது. அதில் பிரான்ஸில் இருக்கிற மிக முக்கிய ஃபேஷன் நிறுவனமான ஜாக்குமஸ் நிறுவனம் தன்னுடைய நிறுவனத்தின் சார்பாக ரன்வேயில் சில பெண் மாடல்களை அணிவகுத்து நடக்க வைத்தனர். எதற்காக இவர்கள் இப்படி நடந்து வருகிறார்கள் என்று பார்த்தால் அவர்களுடைய கைகளில் குட்டி குட்டியா ஒரு ஹேண்ட்பேக் இருந்தது.

பைனாகுலர்
அவர்கள் அறிமுகம் செய்ய வந்தது அந்த குட்டி ஹேண்ட்பேக்குகளை தான். இதைக்கூட எப்படி கண்டுபிடித்தார்கள் தெரியுமா? இந்த அழகிய மாடல்கள் ரன்வேயில் நடந்து வருகிற பொழுது, முன் வரிசையில் அமர்ந்திருக்கக் கூடிய விஐபி அனைவரும் பைனாகுலரை வைத்துப் பார்த்து தான் மாடல்களின் கைகளில் ஹேண்ட்பேக் இருப்பதை உறுதி செய்திருக்கிறது.

இதன் விலை
இந்த ஹேண்ட்பேக் மூன்று வகையான விலைகளில் கிடைக்கின்றன. அதாவது அமெரிக்க டாலர்களில் 345, 480, 795 டாலர்கள் விலையில் மூன்று விதங்களில் கிடைக்கின்றன. அமெரிக்க டாலர் ஓகே. இந்தியாவின் பண மதிப்பில் எவ்வளவு என்று தெரியுமா? இது 24,590 ரூபாய், 34,203 ரூபாய் மற்றும் 56,632 ரூபாய் என்பது தான் அதனுடைய மதிப்பு.

உலகின் காஸ்ட்லி மினி பேக்
இந்த பேக்குக்குள் சிறிய ஆப்பிள் ஏர்பேட் (இயர்போன்) கூட வைத்துக் கொள்ள முடியாதாம். இந்த ஹேண்ட்பேக் தான் உலகின் பிரத்யேகமாக விலை உயர்ந்த காஸ்ட்லியான குட்டி சைஸ் ஹேண்ட்பேக் என்பதை அந்த நிறுவனம் உறுதிப்படுத்தியிருக்கிறது. இது பேக்கின் அளவு, சென்டிமீட்டர் மற்றும்சதுர அளவுகளை வைத்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

சோசியல் மீடியாக்கள்
இணையதளங்கள் மற்றும் சுாசியல் மீடியாக்களில் இந்த ஹேண்ட்பேக் பற்றி வெளியிட்ட போது எல்லோரும் கேட்ட கேள்வி என்னவென்றால், இதற்குள்ளே அப்படி என்ன பொருள்களைப் பேக் செய்து வைக்க முடியும் என்பது தான். அதற்கு அந்த நிறுவனம் சொன்ன பதில் இதில் உங்களால் ஒரு ஏர்பட்ஸ் கூட வைத்துக் கொள்ள முடியாது என்று.

மினி டிரெண்ட்
இதே பேஷன் வீக் நிகழ்ச்சியில் வேறு சில இடங்களில் மினி டிரெண்ட் விற்பனை சூடுபிடித்திருந்தது. மினி சைஸில் உள்ள ஆடைகள் விற்பனை படுஜோராக அங்கே நடந்தது.
MOST READ: இதுக்கு பேருதான் குதிரைமசால்... இத தினம் கொஞ்சம் சாப்பிட்டா என்னலாம் நடக்கும் தெரியுமா?

குட்டி கிரீட்டிங் கார்டு
அதே போல ஃபேஷன் வீக்கில் மற்றொரு பொருளும் மிகப் பிரபலமாக விற்கப்பட்டது. அது என்னவென்றால், மினி கிரீட்டிங் கார்டு. அந்த கார்டை சமீபத்தில் இறந்து போன ஒரு சேனலின் சிறந்த டைரக்டராக விளங்கிய கார்ல் லெஜெர்ஃபெல்டு என்பவரின் நினைவாக தயாரிக்கப்பட்டிருந்தது. அந்த கார்டையும் பைனாகுலரில் வைத்துப் பார்த்தால் அதில் ஒரு வாசகம் மட்டும் எழுதப்பட்டிருந்தது. அது என்னவென்றால், En Homepage to the Alchemist of Elagance and Beauty, Karl Lagerfeld என்பதாகும். இது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அத்தனை பேரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.