நவராத்திரி அப்போ மழையா!!! எப்படி ட்ரஸ் பண்ணிக்கிறதுன்னு கவலைப்படறவங்களுக்கு சில ட்ரிக்ஸ்!!!

By: Suganthi Rajalingam
Subscribe to Boldsky

நவராத்திரி சமயத்தில் இன்னும் பருவ மழைக்காலம் முடியாத காரணத்தால் வருகின்ற துர்கா பூஜை விழாவுக்கு எந்த புதிய ஆடையை தேர்ந்தெடுக்க என்பதில் மிகப்பெரிய குழப்பத்திற்கும் சிரமத்திற்கும் உள்ளாகியுள்ளீர்கள் . எந்த ஆடையை தேர்ந்தெடுத்தாலும் மழையால் பாழாகி விடுமோ இப்போ என்ன செய்வது என்ற எண்ணம் தான் உங்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.

இந்த பூஜையானது பெங்காலி மக்களின் கலாச்சாரப்படி துர்கா தேவியை வரவேற்கும் படியாக கொண்டாடப்படுகிறது.

இந்த பூஜை மாதத்தின் வானிலை மாற்றத்தை பொருத்து மா துர்கா தேவியை வெவ்வேறு வாகனங்களில் வெவ்வேறு அம்சங்களில் அலங்கரித்து பவனி வரச் செய்கின்றனர் .

Style Tips: Don't Let Rain Spoil Your Durga Puja Pandal Hoppings

வெவ்வேறு வாகனங்களாவன : படகு, யானை, பல்லக்கு மற்றும் குதிரை போன்றவற்றில் ஸ்ரீ துர்கா தேவியை தூக்கி வருகின்றனர். ஒவ்வொரு வாகனமும் வித்தியாசமான சத்தத்துடன் வலம் வருவதோடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த வருடம் மகா துர்கா தேவியை படகு வாகனத்தில் வைத்து வலம் வரப் போகின்றனர். ஏனெனில் இதற்கு காரணம் இந்த வருடம் அதிகமான மழைப்பொலிவு ஏற்பட்டுள்ளது.

தற்போதைய வானிலை நிலவரப்படி அல்லது தொன்மவியல் கருத்துப்படி பார்த்தால் இந்த வருடம் துர்கா பூஜையின் போது பெரும் மழையை சந்திக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. எனவே உங்கள் அழகான மயக்க வைக்கும் ஸ்டைல்கள் எல்லாம் இந்த பூஜை கொண்டாட்டத்தின் போது பாழாகி விடும் என்ற வருத்தம் இருக்கா?

கவலையே வேண்டாம் அதற்காகத்தான் நாங்க சூப்பர் ட்ரிக்ஸ் மூலம் உங்கள் ஸ்டைல்களை அந்த மழையிலும் ஜொலிக்க வைக்க போறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 கேப்ரிஸ் பேண்ட் அணிதல்

கேப்ரிஸ் பேண்ட் அணிதல்

பூஜை கொண்டாட்டத்தின் போது வெஸ்டர்ன் மற்றும் நம்ம கலாச்சார ஸ்டைலையும் காட்டனும்னா நீங்க 3/4 நீளமுள்ள குளோட்ஸ் மற்றும் கேப்ரிஸ் பேண்ட் பயன்படுத்துங்கள். அப்பொழுது மழை பெய்து நீங்கள் முழுக்கால் பேண்ட் போட்டு சென்றால் எல்லாம் பாழாகி விடும். இதுவே குட்டை பாவாடை போட்டு சென்றால் உங்களுக்கு செளகரியமாக இருக்காது. எனவே இந்த மழைக்காலத்தில் உங்கள் பூஜை கொண்டாட்டத்திற்கு 3/4 நீளமுள்ள பேண்ட் மிகவும் சிறந்தது.

அடர்ந்த பளிச்சென்று நிறங்கள்

அடர்ந்த பளிச்சென்று நிறங்கள்

பருவ மழைக்காலம் என்பதால் அடர்ந்த பளிச் நிறக் கலர்களான உடை பார்ப்பதற்கு அழகாக இருக்கும். எனவே கண்டிப்பாக பளிச்சென்ற நிற உடைகளை தேர்வு செய்யுங்கள். இந்த ஆடைகள் அந்த இருண்ட சூழலில் அழகாக ஜொலிக்கும்.

மேலும் லைட்டான கலர் உடைகள் மழையில் சகதி அழுக்கால் பாழாக வாய்ப்புள்ளது. கொஞ்சம் சகதி பட்டால் கூட தெளிவாக அசிங்கமாக தெரியும். எனவே இந்த மழைக்கால துர்கா பூஜைக்கு அடர்ந்த நிற உடைகளே நல்லது.

தரையை தழுவும் நீளமான உடைகளை தவிர்க்கவும்

தரையை தழுவும் நீளமான உடைகளை தவிர்க்கவும்

ஃப்ளோரி போன்ற தரையை தழுவும் ஆடைகள் புதிய ட்ரெண்ட்டாக இருந்தாலும் பருவ மழைக்காலத்திற்கு ஏற்றது அல்ல. பூஜையின் போது மழை வந்தாலோ அல்லது முன்னாள் இரவே மழையில் நனைந்து சகதியால் பாழாகி இருந்தாலோ உங்களுக்கு தான் கஷ்டம். அதை கஷ்டப்பட்டு துவைப்பது மட்டுமில்லாமல் உங்கள் விருப்பமான உடை பாழாகி போனதே என்ற கவலையும் உங்களை தொற்றிக் கொள்ளும் அல்லவா.

 புடவையை தவிருங்கள்

புடவையை தவிருங்கள்

இந்த துர்கா பூஜைக்கு சிறந்த உடை என்றால் அது புடவை தான். ஆனால் என்ன மழை வந்துவிட்டால் புடவை கட்டிக் கொண்டு உங்களால் சமாளிக்க முடியாது. காட்டன் புடவை ரெம்ப கனமாக இருப்பதால் உங்களால் சகதிக்குள் இழுத்து நடக்க முடியாது.

ஆனால் பிடிச்ச உடை இதுவாக இருந்தால் உங்களுக்கு செளகரியமான மற்றும் லேசான புடவைகளை சற்று தரையை தொடாதபடி உயர்த்தி அணிந்து கொண்டு பூஜைக்கு செல்லலாம். ரெம்ப நேரம் நகர்ந்து கொண்டே இல்லாமல் ஒரே இடத்தில் இருந்து புடவையில் பூஜையை ரசித்தால் நீங்கள் தேவதை மாதிரி இருப்பீர்கள்.

அடர்ந்த நிற உடையை பயன்படுத்துங்கள்

அடர்ந்த நிற உடையை பயன்படுத்துங்கள்

இது உங்கள் ஸ்டைலின் ஒரு பாகமாக இல்லாவிட்டாலும் உங்கள் மழைக்கால கொண்டாட்டத்திற்கு குடை கண்டிப்பாக ஆத்திர அவசரத்திற்கு பயனளிக்கும். அடர்ந்த நிற குடைகளை உங்கள் உடைக்கு தகுந்த மாதிரி பயன்படுத்தினால் ஸ்டைலாகவும் பயனளிக்கும் விதமாகவும் இருக்கும்.

லெதர் ஷூ மற்றும் பேக்கை தவிருங்கள்

லெதர் ஷூ மற்றும் பேக்கை தவிருங்கள்

இந்த மழைக்கால கொண்டாட்டத்தில் லெதர் ஷூ மற்றும் பேக்கை அணிந்து செல்வது சரியானது அல்ல. ஏனெனில் லெதர் பொருள் தண்ணீருடன் வினைபுரியக் கூடியது. உங்கள் பேக் குடைக்குள் இருப்பதால் பாதிப்பு இல்லாவிட்டாலும் உங்கள் ஷூ மழையால் கண்டிப்பாக பாதிக்கப்படும்.

அதே மாதிரி துணியால் ஆன காலணிகளையும் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவைகள் எளிதில் மழையில் நனைந்து ஈரப்பதம் மிக்கதாக மாறி விடும். எனவே பாலிதீன் வகையான காலணிகளை தேர்ந்தெடுத்து அணியுங்கள். எந்த வித சிரமமும் இல்லாமலும் ஒய்யாரமாக நடக்கலாம்.

தட்டையான காலணிகளை தவிருங்கள்

தட்டையான காலணிகளை தவிருங்கள்

ப்ளிப் பிளாப்ஸ் செப்பல்கள் தட்டையாக இருப்பதால் எளிதில் சகதி உங்கள் கால்களில் பட வாய்ப்புள்ளது. எனவே மழைக்கால துர்கா பூஜை அன்று இந்த மாதிரி தட்டையான காலணிகளை தவிர்ப்பது நல்லது. மேலும் உங்கள் அழகான ஆடையையும் இந்த காலணி சகதி தெறித்து பாழாக்கி விடும்.

நல்லா மூடிய அமைப்பை கொண்ட ஷூ வை பயன்படுத்துங்கள். இது உங்களை சகதியிலிருந்து காப்பதோடு உங்கள் ஆடையையும் அழுக்காக மாற்றாது.

என்னங்க இந்த சுலபமான ட்ரிக்ஸ்களை பயன்படுத்தி இந்த மழைக்காலத்திலும் துர்கா பூஜையை குதூகலத்துடன் மனம் நிறைந்த சந்தோஷத்துடன் கொண்டாடுங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Style Tips: Don't Let Rain Spoil Your Durga Puja Pandal Hoppings

Style Tips: Don't Let Rain Spoil Your Durga Puja Pandal Hoppings
Subscribe Newsletter