ஃபேஷனுக்காக உடலில் எங்கெல்லாம் வளையம் குத்திக் கொள்கிறார்கள் தெரியுமா?

Posted By: Aashika
Subscribe to Boldsky

  உங்களுக்கான தனி ஸ்டைலை காண்பிக்க தனித்துவமாக தெரிய சில விஷயங்கள் வித்யாசமாக செய்ய வேண்டியிருக்கிறது. அது சந்தோசம் தரக்கூடியதாக இருந்தாலும் வலி தரக்கூடியதாக இருந்தாலும் நம்முடைய அடையாளமாய் மாற்றுவோம் என்பதால் அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு இருக்கிறோம்.

  நம் வீடுகளில் பாராம்பரியமாக தோடு,மூக்குத்தி அணிந்த காலத்தை தாண்டி, இப்போது உடலில் பல்வேறு பகுதிகளில் குத்திக் கொண்டு சிறிய தோடு வகைகளை மாட்டிக் கொள்கிறார்கள். இது பேஷனுக்குகாக என்றும் இன்னும் சிலர் இப்படிச் செய்வதால் ப்ரசர் பாயிண்ட்ஸ் அழுத்தம் பெற்று உடலுக்கு நன்மை பயக்கும் என்றும் கூறுகிறார்கள். நன்மையா தீமையா என்ற விவாதத்திற்குள் செல்லாமல். வித்யாசமாக எங்கெல்லாம் தோடு அணிகிறார்கள் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டைத் :

டைத் :

காதின் உட்பகுதியில் இருக்கும் குறுத்தெழும்பில் தோடு அணிவது. இங்கு தோடு அணிய வேண்டுமென்றால் மூன்று முதல் ஆறு மாதகாலங்கள் சிகிச்சை அளிக்கப்படுமாம்.

ட்ராகஸ் :

ட்ராகஸ் :

இங்கு குத்திக் கொள்ளும் போது அதிகப்படியான வலியெல்லாம் இருக்காது. முகத்தையும் காதையும் இணைக்கும் பகுதியில் சின்ன முக்கோண் வடிவத்தில் இருக்கும் இடத்தில் குத்திக் கொள்கிறார்கள்,.சிலருக்கு இந்த இடம் மிகவும் சிறியதாக இருக்கும் அவர்காள் இங்கு தோடு அணிவதை தவிர்க்கலாம்.

ஸ்காஃபோல்ட் :

ஸ்காஃபோல்ட் :

காதின் மடல்களில் குத்தப்படும் இந்த வகை தோடுகளை இண்டஸ்டிரியல் என்றும் அழைக்கப்படுகிறது.இந்த முறைக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை.முகத்திற்கு அருகில் இருக்கும் மடலில் இருந்து அதற்கு எதிர்திசையை நோக்கி நீண்ட குச்சியை போன்ற தோடு இதற்கு அணிகிறார்கள். அணிவதற்கு கடினமாக இருப்பதாலும், சரியாக பராமரிக்க முடியவில்லை என்பதாலும் பெரும்பாலானோர் தவிர்த்துவிடுகிறார்கள்.

ஆரிக்கல் :

ஆரிக்கல் :

பெரும்பாலானோர் இங்கு காது குத்திக் கொள்கிறார்கள். காதின் வெளிப்புற மடல்களில் தோடு அணிவது. அவ்வளவாக வலிக்காது அத்தோடு இதனை பராமரிப்பதும் எளிது.

ஹெலிக்ஸ் :

ஹெலிக்ஸ் :

காதின் வெளிப்புறத்தில் உள்ள மடலில் மேற்புறத்தில் மூன்று இடங்களில் அடுத்தடுத்த காது குத்திக் கொள்வது. மூன்றுக்கும் தனித்தனியாகவோ அல்லது மூன்று புள்ளைகளையும் சேர்த்தோ தோடு அணிகிறார்கள். இங்கு குத்திக் கொள்வதாலும் அதிக வலி ஏற்படாது.

ஹை நாஸ்ட்ரில் :

ஹை நாஸ்ட்ரில் :

மூக்குத்தி அணியும் இடத்தை விட சற்று மேலே குத்திக் கொள்கிறார்கள். அதாவது மூக்கின் எலும்பு முடியும் இடத்தில் குத்திக் கொள்ள வேண்டும். இங்கு ஏராளமான நரம்புகள் இருக்கும் என்பதால் மிக கவனமாக இருக்க வேண்டும்.

Image Courtesy

செப்டம் :

செப்டம் :

மூக்கின் இரண்டு ஓட்டைகளுக்கும் நடுவில் உள்ள இடத்தில் மூக்கு குத்திக் கொள்வது. பெரும்பாலும் வளையங்களையே அணிகிறார்கள்

பிரிட்ஜ் :

பிரிட்ஜ் :

இந்த முறை மூக்குத்தி உங்களின் மூக்கு எலும்பை பாதிக்காது. ஆனால் இதனை பராமரிப்பது கடினம் என்பதாலும் இதற்கு வரவேற்பு இல்லை. கண்ணாடி அணிபவராக இருந்தால் இதை தவிர்த்துவிடுவது நன்று.

Image Courtesy

டிப் :

டிப் :

மூக்கின் நுனியில் குத்திக் கொள்வது. மூக்கின் நுனியைப் பொருத்து அதன் வடிவத்திற்கேற்ப ஒன்றோ அல்லது இரண்டோ குத்திக் கொள்கிறார்கள்.

Image Courtesy

லிப் :

லிப் :

உதடுகளில் நகை அணிவது இப்போது பேஷன் ஆகிவிட்டது.உதட்டைச் சுற்றி இரண்டு இடங்களில் நகை அணியவேண்டும் அது மேலும் கீழுமா, அல்லது கீழேயே இரண்டு மேலேயே இரண்டு எதிர் எதிரில் இரண்டு என தங்கள் விருப்பம் போல நகை அணிகிறார்கள்.

புருவங்களில் :

புருவங்களில் :

புருவங்களில் எல்லாம் ஆண் பெண் என இருபாலரும் நகை அணிகிறார்கள். புருவம் முடியும் இடத்தில் மிகச் சிறியதான வளையமோ அல்லது சின்ன குண்டுமணியோ அணிகிறார்கள்.

டிம்பிள் :

டிம்பிள் :

கன்னங்களில் வரும் பருவைப் போன்றே கன்னத்தில் எங்காவது ஒரு பகுதியில் குத்திக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் சிரிக்கும் போது கன்னத்தில் குழி விழும் இடத்தில் குத்திக் கொள்கிறார்கள்.

Image courtesy

நாவல் :

நாவல் :

இதை நம் திரை கதாநாயகிகள் பலரும் செய்திருப்பார்கள். தொப்புளில் குத்திக் கொள்வது. எகிப்தியர்கள் தான் இதனை அறிமுகப்படுத்தினார்களாம். நம் தொப்புளின் வடிவத்திற்கு ஏற்ப இங்கு நகை அணியப்படுகிறது.

Image Courtesy

ஐ லிட் :

ஐ லிட் :

கண் இமைகளில் குத்திக்கொள்வது இதில் சிரமங்கள் ஏற்படுவதால் பலரும் விரும்பவதில்லை. பெரும்பாலும் வளையத்தையே இங்கு அணிகிறார்கள். இப்படி அணிவதால் எப்போதும் கண்ணுக்கு அருகில் ஏதோ ஒன்று இருப்பது போல இடைஞ்சலாகத் தெரியும்.

Image Courtesy

மவுத் :

மவுத் :

வாய்க்குள்ளே நாக்கில் மற்றும் உள் உதடுகளில் குத்திக் கொள்கிறார்கள். சிலர் மேற்கடவாய் பகுதிகள், அடி நாக்கு பகுதிகளில் குத்திக் கொள்கிறார்கள்.

Image Courtesy

ஹேண்ட் :

ஹேண்ட் :

கட்டை விரலுக்கும் ஆட் காட்டி விரலுக்கும் இடையில் குத்திக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் ஒவ்வொரு விரலின் இடைவேளியிலும் குத்திக் கொள்கிறார்கள்.

Image courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: fashion
English summary

Piercing In Other Body Parts

Know about the different piercing places in our body
Story first published: Sunday, July 16, 2017, 10:00 [IST]
Subscribe Newsletter