யாருக்கு அடிக்க போகுது இந்த லக்கி லாட்டரி? - அம்பானி வாரிசின் லேட்டஸ்ட் படங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்தாலே அவர்களது மீடியாவின் வெளிச்சம் படாமல் வளர முடியாது. அதிலும், அரசியல் ரீதியாகவும் பெரும் செல்வாக்கு பெற்றிருக்கும் குடும்பம் என்றால் சொல்லவா வேண்டும். உலகின் நம்பர் கோடீஸ்வரர் பட்டியில் ஒரு முறை இடம் பிடித்த நபர். இந்தியாவின் அசைக்க முடியாது தொழிலதிபர். யாராலும் தொட்டுவிட முடியாத உச்சத்தில் இருக்கும் மாபெரும் குடும்பம்.

இஷா அம்பானி! இவரை பற்றி படிக்கும் போது மட்டுமல்ல, பார்க்கும் போதும் மிக அழகாக இருக்கிறார். அழகு, அறிவு, தொழில் நுட்பம் என அனைத்திலும் திறமை கொண்டிருக்கிறார். ஃபேஷன் துறையிலும் தொழில் செய்து வருவதாலோ என்னவோ முன்பை விட இப்போது மிகவும் அழகில் மெருகேறியுள்ளார் இஷா முகேஷ் அம்பானி.

முக சாயலில் அம்மா - அப்பா இருவரையும் சமப்பங்கு கொண்டுள்ளார். இது இவரது வாழ்வியலிலும் காண முடிகிறது. அம்மாவை போன்ற அழகும், அப்பாவை போன்ற தொழில் முறை அறிவும் பெற்றி சகலகலாவல்லியாக திகழ்கிறார் இஷா முகேஷ் அம்பானி. அம்பானியின் மூன்று குழந்தைகளில் இவர் இரட்டையர்களில் ஒருவராக பிறந்தவர். இவர் உடன் பிறந்த சகோதரர் ஆகாஷ்.

சிறு வயதில் இருந்தே அப்பாவை போல தொழில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஆர்வம் மட்டுல்ல, முகேஷ் அம்பானியை போலவே, 24 வயதில் தொழிலில் நுழைந்து பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார் இஷா முகேஷ் அம்பானி.

இதோ! இனி இஷா முகேஷ் அம்பானியின் சில லேட்டஸ்ட் படங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

இஷா!

இஷா முகேஷ் அம்பானி அக்டோபர் 23, 1991ல் பிறந்தவர். இவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இயக்குனர் முகேஷ் அம்பானி - மற்றும் நீத்தா அம்பானிக்கு பிறந்த மகள் ஆவார்.

படிப்பு!

சைக்காலஜியில் கிராஜுவேஷன் முடித்த பிறகு, யேல் பல்கலைகழகத்தில் சவுத் ஆசியன் ஸ்டடீஸ் படித்துள்ளார். இவர் அக்டோபர் 2014ல் ஜியோ மற்றும் ரிலைன்ஸ் ரீடெயில் நிறுவனங்களுக்கு இயக்குனராக அமர்த்தப்பட்டார்.

இளம் தொழிலதிபர்

2008ல் இவரது சொத்து மதிப்பு மட்டும் 4710 கோடிகளாக இருந்தது எனவும். வம்சாவளியில் உலகின் இளமையான கோடீஸ்வரர் பட்டியலில் இவர் 2வது இடம்பிடித்துள்ளார். 2015ல் ஆசியாவின் வலிமையான இளம் பெண் என்ற 12 பேர் கொண்ட பட்டியலில் இவரது பெயர் பரிந்துரை ஆனது.

ஜியோ

2015 டிசம்பரில், அம்பாசிடர் ஷாருக்கான் மற்றும் தனது சகோதரர் உடன் இணைந்து ஜியோ 4ஜி சேவையை அறிமுகப்படுத்தினார் இஷா முகேஷ் அம்பானி.

அஜியோ

2016 ஏப்ரல் மாதத்தில் இஷா அம்பானி 'AJIO' எனும் தனது ஃபேஷன் ஆன்லைன் ரீடெயில் நிறுவனத்தை துவக்கினார். இது ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் துணை அங்கமாக செயல்பட்டு வருகிறது.

சகோதரர்!

அம்பானியின் மூன்று குழந்தைகளில் இஷா அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானி இரட்டையர்கள் ஆவார்கள். பிரவுன் பல்கலைகழகத்தில் பொருளாதாரம் படித்திருக்கிறார் இஷாவின் சகோதரர் ஆகாஷ். இவர் RILன் 4ஜி டெலிகாமை அம்பானி குடும்பத்தின் நெருக்கமான நண்பரான மனோஜ் மோடியுடன் இணைந்து வேலை செய்து வந்தார்.

24

முகேஷ் அம்பானியின் இரு குழந்தைகளும், முகேஷ் அம்பானியை போலவே 24 வயதில் தங்கள் தொழிலில் கால் பதித்த்தனர். முகேஷ் அம்பானி 1981ல் ரிலையன்ஸ் நிறுவனத்தில் காலடி எடுத்து வைத்தபோது அவரது வயது 24.

30%

ஆகாஷ் முதன் முதலில் 2011ல் நடந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொழில் ரீதியான சந்திப்பில் கலந்து கொண்டார்.அந்த சந்திப்பின் போதுதான் ரிலையன்ஸ் நிறுவனம் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தில் இருந்து தங்களது முப்பது சதவித பங்குகளை விற்க முன்வந்தது.

டாப் டென்

இஷா அம்பானி பெயர் வெற்றியாளர்களின் வழித்தோன்றலில் வந்த டாப் டென் பில்லியனர் என ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட பட்டியலில் இடம் பெற்றிருந்தார்.

அமைதி!

இஷா அம்பானி சமூக செயல்களிலும் ஈடுபட்டுள்ளார். இவர் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் படிக்கும் போதே, அமைதி வேண்டி இந்தியா - பாகிஸ்தான் அமைதி மாநாட்டில் தனது முயற்சிகளை வெளிப்படுத்தியிருந்தார். இரு நாட்டு மக்கள் மத்தியிலான உறவு, எல்லை உறவுகள் வலிமையாக இருக்க வேண்டும் எனவும் கருத்துக்கள் முன்னெடுத்து வைத்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: fashion ஃபேஷன்
English summary

Isha Ambani Latest Looks

Isha Ambani Latest Looks
Story first published: Thursday, December 7, 2017, 18:00 [IST]